search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனல் மின் நிலையம்"

    • இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த கடைசி அனல் மின் நிலையம் மூடப்பட்டது.
    • தற்போது அங்கு காற்று, சூரிய ஒளி மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை மூலமே பெருமளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

    லண்டன்:

    காலநிலை மாற்றம் என்பது இன்றைய உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதனால் புவி வெப்பமயமாதல், அதீத கனமழை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    எனவே காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கை எடுக்க கோரி உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனால் புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதை குறைத்து, சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த உலக நாடுகள் முயற்சிக்கின்றன.

    அதன்படி வருகிற 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து ஆற்றலையும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து பெற இங்கிலாந்து இலக்கு நிர்ணயித்துள்ளது.

    எனவே தலைநகர் லண்டனில் செயல்படும் ராட்கிளிப் அனல் மின் நிலையத்தை மூட அரசாங்கம் முடிவு செய்தது. இதனையடுத்து 142 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த அனல் மின் நிலையம் நேற்றுடன் அதன் பணியை நிறைவு செய்தது.

    இதன்மூலம் இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த கடைசி அனல் மின் நிலையமும் மூடப்பட்டது. இதுகுறித்து எரிசக்தி துறை மந்திரி மைக்கேல் ஷாங்க்ஸ் கூறுகையில், `2030-க்குள் நாட்டின் அனைத்து ஆற்றல்களும் புதுப்பிக்கத்தக்க ஆதாரத்தில் இருந்து பெறுவதற்கான முயற்சியில் இது ஒரு மைல்கல் ஆகும்' என பாராட்டு தெரிவித்தார்.

    இங்கிலாந்தில் 1990-ம் ஆண்டு நாட்டின் மின் உற்பத்தியில் சுமார் 80 சதவீதம் அனல் மின் நிலையம் மூலமே பெறப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த ஆண்டு மின்சார தேவையில் வெறும் 1 சதவீதம் மட்டுமே அனல் மின் நிலையம் மூலம் பெறப்பட்டது.

    தற்போது அங்கு காற்று, சூரிய ஒளி மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை மூலமே பெருமளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம் நிலக்கரி பயன்பாட்டை ஒழிக்கும் முதல் பெரிய பொருளாதார நாடாக இங்கிலாந்து மாறி உள்ளது.

    • அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
    • கொதிகலன் குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 2-வது நிலையின் 1-வது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. கொதிகலன் குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
    • தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனல் மின் நிலையங்களை விட இது மிகப் பெரியது.

    தமிழ்நாட்டில் எண்ணூர், நெய்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் தற்போது புதிதாக அனல் மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையம் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

    இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் புதிய அனல் மின் நிலையம் ரூ.6,500 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதன் கட்டுமான பணிகள் தற்போது முடிந்து அனல் மின் நிலையம் செயல்பட தயாராக உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனல் மின் நிலையங்களை விட இது மிகப் பெரியது. இதன் கட்டுமானப் பணியை விரைந்து முடித்து 2019-ம் ஆண்டிலேயே மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டோம். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாகவும் இந்த அனல் மின் நிலைய கட்டுமானப் பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

    தற்போது கொதிகலன் நீர் அழுத்த சோதனை, துணை கொதிகலன் எரியூட்டும் சோதனை, கொதிகலன் நீர் வெளியேற்ற முடியாத பகுதியில் நீர் அழுத்த சோதனை ஆகிய முக்கிய பணிகள் முடிக்கப்பட்டது. தற்போது கட்டுமானப் பணி முடிந்து செயல்பாட்டுக்கு வர தயாராக உள்ளது.

    இந்த அனல் மின் நிலையத்துக்கு ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரி பெறப்பட உள்ளது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் எண்ணூர், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்கள் வழியாக கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட உள்ளது. தெலுங்கானா மாநிலம் சிங்கனேரி சுரங்கத்தில் இருந்து பெறப்படும் நிலக்கரி, ரெயில் மூலம் எடுத்து வரப்படும். இந்த அனல் மின் நிலையம் அடுத்தமாதம் (ஜனவரி) திறக்கப்பட்டு மின் உற்பத்தி உடனடியாக தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • தீ விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மின் உற்பத்தி தொடங்க 1மாதம் வரை ஆகலாம் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு மூன்று அலகுகளில் தலா 500 வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு இங்குள்ள 1வது அலகில் டர்பன் ஜெனரேட்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. டர்பனில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அனல் மின் நிலையத்திற்குள் ஏற்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில் ரசாயன நுரையையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    சுமார் 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக 1வது அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அலகில் மறுசீரமைப்பு பணிகள் முடித்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்க 1மாதம் வரை ஆகலாம் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரசாந்த் தெர்மல் அனல் மின் நிலையத்தில் கடந்த 11 வருடங்களாக வேலை செய்து வந்தார்.
    • நீண்ட நேரமாகியும் பிரசாந்த் திரும்பி வரததால் சக ஊழியர்கள் அவரை தேடி சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெர்மல்நகர் கோவில்பிள்ளை நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 33). இவர் தெர்மல் அனல் மின் நிலையத்தில் மெக்கானிக்கல் பிரிவில் ஒப்பந்த ஊழியராக கடந்த 11 வருடங்களாக வேலை செய்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு இரவு பணியில் இருக்கும்போது பிரசாந்த் அங்குள்ள உடைமாற்றும் அறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரததால் அவரை தேடி சக ஊழியர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரசாந்த் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி யுள்ளார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்பு படையினர் உதவியுடன் பிரசாந்த் உடலை மீட்டனர். இதுகுறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அத்திப்பட்டு புதுநகரில் வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளது.
    • மூன்றாவது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்து அத்திப்பட்டு புதுநகரில் வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் என மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மூன்றாவது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    ×