search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்-அமைச்சர் வருகை"

    • ராமநாதபுரத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து எம்.எல்.ஏ.-கலெக்டர் ஆய்வு செய்தனர்.
    • மண்டபம் கேம்ப் ஹெலிபேட் தளம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மண்டபம்

    ராமநாதபுரத்தில் வருகிற 17-ந்தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தி.மு.க. முகவர்கள் கூட்டம் நடை பெற உள்ளது.

    இதேபோல் மண்டபம் கேம்ப்பில்18-ந்தேதி மீனவர் மாநாடு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறு கிறது. இதில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக ராம நாதபுரம் மாவட்டத் திற்கு வருகை தர உள்ளார். அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    18-ந்தேதி மண்டபத்தில் நடைபெற உள்ள மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக மண்டபம் கேம்ப் ஹெலிபேட் தளம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.அந்த இடத்தில் மேடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி, எம்.எல்.ஏ, காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதல்வர் வருகைக்கான மேடை அமைக்கும் ஏற்பாடு களை மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர் சிறப்பாக செய்து வருகிறார்.

    மேடை ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர்கள் காத்த வராயன், பிரபாவதி, வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர்கான், மண்டபம் பேரூராட்சி கவுன்சிலர்கள் சாதிக் பாட்ஷா,வாசிம் அக்ரம், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் பி.ஜி.சுகுமார், அயலக அணி துணை அமைப்பாளர் காதர் ஜான், தி.மு.க நிர்வாகி கள் ஆசாத், அயூப்கான், முனியசாமி, பொதுப் பணித் துறை உதவி செயற் பொறியாளர் செல்வராஜ், மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் கோபி, ஜெயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு மனுநீதி நாள் முகாம் 7-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.
    • மனுநீதி நாள் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள்.

    மதுரை

    மதுரையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் நேரில் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள்.

    அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கைக்கு கலெக்டர் ஆவண செய்வார். இதனால் திங்கட்கிழமை நடைபெறும் மனுநீதி நாள் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள்.

    இந்தநிலையில் ''கள ஆய்வில் முதல்-அமைச்சர்'' என்ற திட்டத்தின் கீழ் வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் ஆய்வு செய்கிறார். அதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெறும் நிர்வாக பணிகள், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும், செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்தும் 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் 6-ந்தேதி திங்கட்கிழமை ஆகும். அன்றைய தினம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோ சனை நடத்த உள்ளார்.

    எனவே கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமையில் நடத்தப்படும் மனு நீதி நாள் முகாம் வருகிற 6-ந்தேதி வழக்கம்போல் நடக்குமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்த நிலையில் 6-ந்தேதி நடக்கவிருந்த மனுநீதிநாள் முகாம் மறுநாளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 6-ந்தேதி நடப்பதாக இருந்த மனுநீதி நாள் முகாம், அடுத்த நாள் (7-ந்தேதி) நடத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

    • மேயர் சுஜாதா அதிரடி உத்தரவு
    • ஆய்வுக்கூட்டம் நடந்தது

    வேலூர்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸடாலின் வருகையையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று மேயர் சுஜாதா, மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை), நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிறார்.

    இதையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதியில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார், மண்டலக்குழு தலைவர்கள் நரேந்திரன், யூசுப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கமிஷனர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் மேயர் சுஜாதா தலைமை தாங்கி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சாலையோரம் மண், மணல், எம்-சாண்ட், தேங்காய் ஓடுகள் காணப்பட்டால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

    மாநகராட்சி பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற வேண்டும். முதல்-அமைச்சர் வந்து செல்லும் சாலைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் திடீரென மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலங்களில் ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாக வைத்திருக்க வேண்டும்.

    சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரியாமல் பார்த்து கொள்ள வேண்டும். மாடுகளை சாலையில் அவிழ்த்து விடக்கூடாது என்று அவற்றின் உரிமையாளர்களிடம் எழுதி வாங்க வேண்டும். அதையும் மீறி கால்நடைகளை அவித்து விட்டால் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில், மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், மாநகர் நலஅலுவலர் கணேஷ், உதவிகமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×