search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் வரத்து"

    • கேரளாவில் பலத்த மழை எதிரொலி
    • கூட்டமின்றி வெறிச்சோடியது

    வேலூர்:

    வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து மீன் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் விற்பனை அதிகரித்து காணப்படும். அசைவ பிரியர்கள் அதிக அளவில் குவிந்து, ஆர்வத்துடன் மீன், ஆடு மற்றும் கோழி உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி செல்வார்கள்.

    கேரளாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதன் எதிரொலியாக வேலூர் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை விட, இந்த வாரம் மீன்கள் குறைவாக கொண்டு வரப்பட்டது.

    வரத்து குறைந்ததால் மீன்களின் விலையும் உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.

    இதில் வஞ்சரம் மீன் ரூ.600 முதல் 900 வரையும், சங்கரா ரூ. 250 முதல் 300 வரையும், நண்டு ரூ.400 முதல் 500 வரையும், ஏரா ரூ.400 முதல் 500 வரையும், கடல் வவ்வா ரூ. 500, அணை வவ்வா ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் இன்று கார்த்திகை தீபம் என்பதால் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க வரும் அசைவ பிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்து, மார்க்கெட் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    • மீன்கள் வரத்தான நிலையில் இன்று வெறும் 8 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது.
    • சில மீன்களின் விலை கடந்த வாரத்தை விட இன்று கூடி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலு இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் இங்கு அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    இந்த மார்க்கெட்டிற்கு பொதுவாக சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வார இறுதி நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து மீன்கள் வரத்து சற்று அதிகரித்து வந்தது.

    கடந்த வாரம் 20 டன்கள் மீன்கள் வரத்தான நிலையில் இன்று வெறும் 8 டன் மீன்கள் மட்டுமே வரத்தாகி இருந்தது. மீன் வரத்து குறைவு எதிரொலியாக சில மீன்களின் விலை கடந்த வாரத்தை விட இன்று கூடி உள்ளது.

    குறிப்பாக வஞ்சரம் மீன் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 900-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ. ஆயிரமாக அதிகரித்துள்ளது.

    இதேபோல் வெள்ளை வாவல் மீன் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.900-க்கு விருப்பப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.1,300 ஆக அதிகரித்து விற்கப்படுகிறது.

    அதே சமயம் இறால், சீலா, மயில் மீன், பொட்டு நண்டு ஆகிய மீன்கள் கடந்த வாரத்தை விட இன்று விலை குறைந்துள்ளது. இன்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து 8 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது .

    இன்று மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    அயிலை-300, மத்தி-250, வஞ்சரம்-1000, விளா மீன்- 350, தேங்காய் பாறை-500, முரல்-350, நண்டு-400, ப்ளூ நண்டு-750, இறால்-600, சீலா-450, வெள்ளை வாவல்-1300, கருப்பு வாவல்-850, பாறை-500, மயில் மீன்-700, பொட்டு நண்டு-400, கிளி மீன்-600, மஞ்சள் கிளி-600, கடல் விலாங்கு-350, திருக்கை-400, பெரிய திருக்கை-500, நகர மீன்-450.

    • வங்காள விரிகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் நேற்று முதல் பிப். 2-ந் தேதிவரை பலத்த காற்று வீசும்.
    • குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல விழா வரும் 5-ந் தேதி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும்.

    கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து மீண்டும் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் வள்ளங்களில் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. கடல் நீரோட்டம் மாற்றம் காரணமாக வழக்கமாக கிடைக்கும் மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை.இதனால் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குளச்சல் கடல் பகுதியில் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் மீனவர்கள், வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

    இந்நிலையில் வங்காள விரிகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் நேற்று முதல் பிப். 2-ந் தேதிவரை பலத்த காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதனால் இந்த நாட்களில் ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரை உள்ள கடலோர கிராம விசைப்படகு, கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என குளச்சல் மீன் துறை மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் நடராஜன் அறிவுறுத்தி உள்ளார்.இதற்கிடையே குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல விழா வரும் 5-ந் தேதி நடக்கிறது.

    இதனை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற குளச்சல் விசைப்படகுகள் கடந்த 2 நாட்களாக கரை திரும்பிய வண்ணம் உள்ளது.கரை திரும்பிய விசைப்படகுகள் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.இந்த படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்களை விற்பனை செய்ய நாள் ஒன்றுக்கு 20 விசைப்படகு களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

    நேற்று விசைப்படகுகளி லிருந்து இறக்கப்பட்ட மீன்களில் சூரை, வெளா மீன்கள் அதிகமாக இருந்தன.அவற்றை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் எடுத்து கேட்டு வாங்கி சென்றனர்.நேற்று மீண்டும் மீன்வரத்து தொடங்கியதால் மீன்கள் வழக்கமான விலைக்கு விலை போனது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×