என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாராளுமன்ற கூட்டத்தொடர்"
- பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
- அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது.
புதுடெல்லி:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது.
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பி.க்களும், இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஓரளவு சம பலத்துடன் இருக்கிறார்கள். இதன் காரணமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடக்கத்தில் இருந்தே மிக கடுமையாக அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 23 கட்சி களும் தேர்தலின் போது பல தொகுதிகளில் ஒருங்கி ணைந்து செயல்பட்டதால் வெற்றி பெற முடிந்தது. அந்த அடிப்படையில் பாராளுமன்றத்துக்குள்ளும் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்து இருக்கி றார்கள்.
குறிப்பாக முக்கிய கொள்கைகளில் ஒருமித்த கருத்துடன் செயல்பட எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். அதை இன்றுமுதல் அரங கேற்றும் நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் மேற்கொண்டனர்.
அவர்களது திட்டப்படி இன்று பகல் 11 மணிக்கு பாராளுமன்ற கூட்டம் தொடங்கும் முன்பு கூட்டணியில் உள்ள 234 எம்.பி.க்களும் பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டனர். வழக்கமாக பாராளுமன்ற கூட்டத்துக்கு எம்.பி.க்கள் ஒவ்வொருவராக வருவது உண்டு.
அதை மாற்றி எதிர்க் கட்சிகள் தங்களுக்கு இருக்கும் வலிமையை முதல் நாளே ஆளும் கட்சிக்கும், நாட்டு மக்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக வித்தியாசமான நடை முறையை கையில் எடுத்தன. அதன்படி அவர்கள் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு காந்தி சிலை இருந்த பகுதியில் ஒன்று திரண்டு அணிவகுத்தனர்.
பிறகு அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக அணி வகுத்து பாராளுமன்றத்துக்கு சென்றனர். அவர்கள் கைகளில் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஏந்தி இருந்தனர். இதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்தை ஆளும் கட்சி இஷ்டத்துக்கு மாற்றி அமைக்க முடியாது என்பதை சூசகமாக உணர்த்தும் வகையில் தங்களது செயலை வெளிப்படுத்தினார்கள்.
பாராளுமன்றத்துக்குள் சென்று அமர்ந்ததும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். முதல் நாளே இன்று அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தற்காலிக சபாநாயகருக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த தலா ஒரு எம்.பி.க்கள் சேர்க்கப்பட்டு இருந்தனர். ஆனால் அந்த குழுவில் இடம் பெற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மறுத்துவிட்டனர்.
இதுதான் ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ள முதல் ஒருங்கிணைந்த எதிர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதே பாணியில் தொடர்ந்து செயல்பட எதிர்க்கட்சி தலைவர்கள் சம்மதித்து உள்ளனர்.
எனவே பாராளுமன்றம் நடக்கும் நாட்களில் கூச்சல்-குழப்பம் மற்றும் விவாதத்துடன் கூடிய அமளிக்கு பஞ்சமே இருக்காது.
- தொடர் முழுவதும் இந்திய பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது
- பிரதமர் மோடி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்
வரும் ஏப்ரல்-மே மாத இடையில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த ஜனவரி 31 அன்று பாராளுமன்றத்தின் 17-வது மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
கடந்த பிப்ரவரி 1 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இக்கூட்டத்தொடர் முழுவதும் இந்திய பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தொடரின் கடைசி அமர்வு இன்று நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கும், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, "இந்த அமர்வில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன" என தெரிவித்தார்.
இதையடுத்து, பட்ஜெட் தொடர் நிறைவடைந்து, முதலில் மக்களவையும், பிறகு மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன.
இத்துடன் 17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரும் நிறைவுக்கு வந்தது.
மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், 17-வது அவையில், கடந்த 5 வருட காலங்களில், 222 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 12 மணிக்கு விவாதம் நடத்தலாம் என்று சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.
- எதிர்க்கட்சிகள் பிரதமர் விளக்கம் அளிக்க கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.
மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் முதல் நாளிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
2-வது நாளான வெள்ளிக்கிழமை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பினர். மணிப்பூர் ரத்தம் சிந்துகிறது என்ற முழக்கத்துடன் அவையின் மைய பகுதியில் முற்றுகையிட்டனர். இதனால் இரு அவைகளின் நடவடிக்கைகளும் 2-வது நாளாக முடங்கி இருந்தன.
இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று 3-வது நாளாக அமளி நிலவியது.
பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி முறையிட்டார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 12 மணிக்கு விவாதம் நடத்தலாம் என்று சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.
இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனடியாக விவாதம் நடத்த வேண்டும். பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறும்போது, மணிப்பூர் விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் பிரதமர் விளக்கம் அளிக்க கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவையை 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
12 மணிக்கு பிறகு பாராளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தை எழுப்பினார்கள். இதை தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை 2-வது முறையாக அவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தன.
பாராளுமன்ற மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரத்தில் அமளி காணப்பட்டது. மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த கோரி 11 கட்சிகள் நோட்டீஸ் அளித்தன.
இது தொடர்பாக அவை தலைவர் ஜெகதீப்தன்கருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்ஒபிரையலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியால் அவை முதலில் 12 மணி வரையும், 2-வது முறையாக 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் கடும் அமளியில் ஈடுபட்டார். அவை தலைவர் இருக்கை அருகே சென்று அமளி செய்தார்.
இதைத் தொடர்ந்து சஞ்சய்சிங்கை சஸ்பெண்டு செய்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப்தன்கர் உத்தரவிட்டார். மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
- ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. உறுப்பினராக கருதக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற அவைக்கு தகவல் தெரிவித்தார்.
- நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறவில்லை.
திண்டுக்கல்:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தை சுமூகமாக நடத்தவும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைக்கவும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை சார்பில் இதுகுறித்து அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கவும், விவாதங்களில் பங்கேற்குமாறும் அமைச்சர் பிரகலாத்ஜோஷி, தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து தான் அந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக ரவீந்திரநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் உள்ள ஒரே எம்.பி. தேனி பாராளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத். இவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ரவீந்திரநாத் தனது வேட்புமனுவில் பொய்யான தகவல்களை அளித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பளித்தார்.
ஏற்கனவே ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. உறுப்பினராக கருதக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற அவைக்கு தகவல் தெரிவித்தார். இருந்தபோதும் ரவீந்திரநாத் அ.தி.மு.க. உறுப்பினராகவே தொடர்ந்து செயல்பட்டார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர். ரவீந்திரநாத்துக்கு மேல்முறையீடு செய்யும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஒரு மாதம் நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார். அதற்கான முயற்சியில் ரவீந்திரநாத் இறங்கி உள்ள நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
தற்போது அ.தி.மு.க. பிரதிநிதியாக ரவீந்திரநாத் அழைக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ந் தேதி வரை நடைபெற்றது.
- மணிப்பூர் கலவரம் விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.
புதுடெல்லி:
2023-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ந் தேதி வரை நடைபெற்றது. 2-வது அமர்வு மார்ச் 13-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற்றது. அதானி விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன.
இந்த நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை (வியாழக்கிழமை) கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மணிப்பூர் கலவரம் விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைத்தேயி, குகி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. 2 மாதங்களாக நடந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது தொடர்பாக எதிர்கட்சிகள் ஏற்கனவே விமர்சனம் செய்து இருந்தன. பாராளுமன்றத்தில் மணிப்பூர் கலவர பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷத்துடன் எழுப்பும்.
மேலும் விலைவாசி உயர்வு, விசாரணை அமைப்புகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்று பட்டுள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பாராளுமன்றத்தில் பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பாராளுமன்ற கூட்டத்தில் நடைபெறும் இந்த கூட்டத் தொடர் 15 அமைப்புகளை கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளன. மேலும் 7 பழைய மசோதாக்கள் விவாதத்துக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
டிஜிட்டல் தனிநபர் தரவு மசோதா, வன (பாதுகாப்பு) திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா. தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் ஆகும் என்று கருதப்படுகிறது.
பாராளுமன்றம் சுமூகமாக நடைபெறுவதற்காக பாராளுமன்றம் கூடுவதற்கு முந்தைய தினம் அனைதது கட்சி கூட்டம் நடைபெறும். அதன்படி மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடக்கிறது.
- ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
- அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டு குழு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய ஜனநாயகம் சீர் குலைந்து வருவதாகவும், அதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று லண்டனுக்கு சமீபத்தில் சென்ற ராகுல்காந்தி பேசி இருந்தார்.
பாராளுமன்ற 2-வது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இந்த விவகாரத்தை பா.ஜ.கவினர் கிளப்பினார்கள். ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் அதானி பிரச்சினையை கிளப்பினார்கள். இதனால் இரு அவைகளும் முதல் நாளே முடங்கியது.
ராகுல்காந்தி, அதானி பிரச்சினையால் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் 2-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டன. ராகுல்காந்தி, அதானி விவகாரத்தால் பாராளுமன்றம் இன்று 3-வது நாளாக முடங்கியது.
பாராளுமன்ற மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி பிரச்சினையை கிளப்பினார்கள். அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். கூட்டுக்குழு விசாரணை கோரி அவர்கள் கைகளில் பதாகைகளை வைத்து இருந்தனர்.
சபையின் மைய பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பதிலடியாக கோஷமிட்டனர். ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
எதிர்க்கட்சி, ஆளும்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக சபாநாயகர் ஓம்.பிர்லா வால் அவையை நடத்த முடியவில்லை. யாரும் அமைதி அடையாததால் அவர் அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார்.
மேல்சபையிலும் இதே விவகாரத்தால் அவை நடவடிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி பிரச்சினையை கிளப்பினார்கள். இதனால் அவையில் கூச்சல்- குழப்பம் நிலவியது.
இதைதொடர்ந்து அவைத் தலைவர் 2 மணி வரை சபையை ஒத்திவைத்தார். ராகுல்காந்தி, அதானி விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று 2 மணி வரை முடங்கின.
- ஆளுநரின் அதிகாரம் குறித்து அரசியல் சாசன வடிவமைப்பில் அம்பேத்கர் தெளிவாக கூறியுள்ளா்.
- தமிழகத்தில் தேர்தல் இல்லை என்பதால் குடியரசு தலைவர் உரையில் திருவள்ளுவரை மறந்துவிட்டார்.
மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார். அப்போது அவர், "இந்த நாடு ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது. மாநிலங்களின் உரிமைகளை பறிக்க முயற்சிகளை செய்கிறீர்கள். மக்கள் நல அரசு என்பதற்கும் இலவச திட்டங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்துக்கொள்ள மறுக்கிறீரகள்.
நாங்கள் மாநிலங்கள் சமூக நீதிக்கான மாடல்களை உருவாக்க முடிகிறது. ஆனால் உங்களால் அது முடியவில்லை.
தமிழக சட்டசபையில் இயற்றிய 20க்கும் மேற்பட்ட சட்ட வரைவுகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மட்டும் நிற்கவில்லை. மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநர்கள் இதையே பின்பற்றுகிறார்கள். மாநில ஆளுநர்கள் மத்திய அரசின் கருவியாக பயன்படுத்தப்படுகின்றனர். ஆளுநர்களுக்கு தனிப்பட்ட எந்த விருப்ப உரிமையும் இல்லை.
ஆளுநரின் அதிகாரம் குறித்து அரசியல் சாசன வடிவமைப்பில் அம்பேத்கர் தெளிவாக கூறியுள்ளா். கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவத்தை ஆளுநர்களுக்கு உணர்த்த வேண்டும்.
தமிழகத்தில் தேர்தல் இல்லை என்பதால் குடியரசு தலைவர் உரையில் திருவள்ளுவரை மறந்துவிட்டார். மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
சுமார் 4 கோடி இந்திய இளைஞர்கள் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
எங்களது பரிந்துரைகளை மத்திய அரசு காது கொடுத்து கேட்பதில்லை. சட்டங்கள் பற்றி விவாதம் செய்ய நேரம் ஒதுக்குவதில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு பேசினார்.
- மக்களவை 2 மணிக்கும், மாநிலங்களவை 2.30 மணிக்கும் கூட்டம் தொடங்கியது.
- இரு அவைகளும் வரும் 6ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டது.
2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நேற்று காலை பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல், இன்று காலை வழக்கம்போல் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டம் தொடங்கியது. அப்போது, அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரையிலும், மாநிலங்களவை 2.30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின்னர் மக்களவை 2 மணிக்கும், மாநிலங்களவை 2.30 மணிக்கும் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் வரும் 6ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டது.
- பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் இன்று காலை கூட்டம் தொடங்கியது.
- எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் இரு அவைகளிலும் கடும் அமளி.
2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நேற்று காலை பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் கூட்டம் தொடங்கியது. அப்போது, அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரையிலும், மாநிலங்களவை 2.30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்