search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்- லைவ் அப்டேட்ஸ்
    X

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்- லைவ் அப்டேட்ஸ்

    • அதானி மீது புகார் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்.
    • வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு திட்டம்

    2024-ம் ஆண்டிற்கான இந்திய பாராளுமன்றத்தின் கடைசி மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    Live Updates

    • 25 Nov 2024 12:14 PM IST

      எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • 25 Nov 2024 12:04 PM IST

      அதானி, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு. புதன்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் அவை கூடும் என அறிவிப்பு

    • 25 Nov 2024 11:23 AM IST

      வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கான பாராளுமன்ற கூட்டுக்குழுவில் இடம் பிடித்துள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர்.

    • 25 Nov 2024 11:19 AM IST

      எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மணிப்பூரில் நடைபெற்ற கற்பழிப்பு, கொலை மற்றும் அங்கு சட்டம் ஒழங்கு சீர்குலைந்துள்ளது தொடர்பாக பிரச்சனை எழுப்பும்படி கேட்டுள்ளோம். நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. காற்று மாசு வடக்கு இந்தியாவை மிக மிக மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுப்பவும் கேட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.

    • 25 Nov 2024 11:14 AM IST

      மறைந்த மக்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி தெரிவித்த நிலையில், அவை 12 மணி வரை ஒத்திவைப்பு

    • 25 Nov 2024 11:10 AM IST

      ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என குரல் எழுப்புவோம் என்று அம்மாநில பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி. சஸ்மித் பத்ரா தெரிவித்தார்.

    • 25 Nov 2024 11:02 AM IST

      இந்திய பாராளுமன்றத்தின் இந்த ஆண்டின் கடைசி கூட்டத் தொடரான குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

    • 25 Nov 2024 11:01 AM IST

      எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்குள் விவாதம் நடத்த ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் தடையை ஏற்படுத்துவதன் மூலம் நேரத்தை வீணடிக்கின்றனர் என ஆர்.எல்.எம். எம்.பி. உபேந்திரா குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

    • 25 Nov 2024 10:58 AM IST

      முக்கியமான பிரச்சனையில் இருந்து மத்திய அரசு நழுவி ஓடக்கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் என காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் தெரிவித்தார்.

    • 25 Nov 2024 10:57 AM IST

      காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

    Next Story
    ×