search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருவாய் துறை"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம மக்களுக்கு வருவாய் துறை சான்றுகள் கிடைக்கப்பெறுகிறதா? என்பது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
    • அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கேட்டறிந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூர், புல்லமடை, எருமைப்பட்டி ஊராட்சிகளில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கிராம மக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் திருவாடனை ஊராட்சி ஒன்றியம், மருங்கூர் ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் பெற்று பயன்பெறுகிறீர்களா? என்று கேட்டறிந்ததுடன், மேலும் பல்வேறு துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பயனா ளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற கலெக்டர் குடும்ப உறுப்பினர்களிடம் தங்களுக்கு தேவையான வருவாய்த்துறை சான்றுகள் உரிய காலத்தில் கிடைக்கப்பெறுகிறதா? என்றும், நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியாக பொருட்கள் வழங்கப்படுகிறதா? குடிநீர் வழங்குவதன் விவரம் போன்றவற்றை பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    தங்களுக்கு தேவையான கோரிக்கைகளில் கால தாமதம் ஏற்பட்டால் இதுகுறித்து எனக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தர விடப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், புல்லமடை ஊராட்சி மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் எருமைப்பட்டி ஊராட்சியில் பொது மக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் பயன் குறித்து கேட்டறிந்த கலெக்டர் விஷ்ணுசந்திரன் தங்களின் அத்தியாசிய கோரிக்கைகளை உடனுக்குடன் ஆய்வு செய்து உரிய தீர்வு வழங்கப்படும் என்றார்.

    அதேபோல் தகுதியுடைய நபர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

    • ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதியதாக தாலுகா பிரித்து கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் அறிவிப்பு செய்தார்.
    • புதியதாக உருவாக்கப்பட்ட வாணாபுரத்துக்கு அதே ஊரிலேயே தாலுகா தலைநகரமும் செயல்படும். வரும்

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதியதாக தாலுகா பிரித்து கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் அறிவிப்பு செய்தார். அதன்படி புதியதாக உருவாக்கப்பட்ட வாணாபுரத்துக்கு அதே ஊரிலேயே தாலுகா தலைநகரமும் செயல்படும். வரும் மே மாதத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அதனை தொடங்கி வைக்கவும் உள்ளார்கள். அதேபோல் புதிய தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகப் பணிகளுக்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான திட்ட அறிக்கையும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் அளிக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. மேலும் புதிய தாலுக்கா அமைப்பதற்கான அனைத்து பூர்வாங்க பணிகளும் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு உத்தரவின் பேரில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர். ஆனால் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சில விஷமிகள் வாணாபுரம் தாலுகாவின் தலைநகர் வேறெங்கோ செல்வதாக தவறான தகவல்களை பொதுமக்களிடத்தில் பரப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கி றேன். தவறான தகவல் பரப்புவோர் மீது மாவட்ட காவல்துறையின் வாயிலாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • அனைத்து கோரிக்கைகளின் மீது உரிய ஆணைகள் வழங்க வேண்டும்

    கடலூர்:

    தமிழ்நாடு வருவா ய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். துணை தாசில்தார் உள்ளிட்ட பதவி உயர்வு பட்டியல் திருத்தத்தின் காரணமாக பதவி இறக்கம் பெரும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்க வேண்டும்.

    அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும். அரசு டன்பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீது உரிய ஆணைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கடலூர் மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் ஒரு மணி நேரம் தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர் வரை பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பூபாலச்சந்திரன் வரவே ற்றார். ஆர்ப்பாட்டத்தில் தாசில்தார் ஸ்ரீதரன், துணை தலைவர் ராஜேஷ் பாபு, மத்திய செயற்குழு உறுப்பினர் ரத்தினகுமரன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவில் வட்ட தலைவர் பார்த்திபன் நன்றி கூறினார்.

    • தனது ஊழியரின் விரோத போக்கை கண்டித்து கடலூர் கலெக்டர் அலுவலக வளாக த்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தனி துணை கலெக்டரை கண்டித்து வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    கடலூர்:

    தமிழ்நாடு வருவாய்து றை அலுவலர் சங்கம் சார்பில் கடலூர் தனி துணை கலெக்டர் கீதா தனது ஊழியரின் விரோத போக்கை கண்டித்து கடலூர் கலெ க்டர் அலுவலக வளாக த்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலா ளர் ஆறுமுகம் முன்னி லை வகித்தார். துணைத்த லைவர் ராஜேஷ் பாபு வரவேற்றார். ஆர்ப்பா ட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் பூபாலச்சந்திரன், இணைச் செயலாளர்கள் சிவக்குமார், சக்திவேல், சஞ்சய், சதாசிவம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இதில் வட்டத் தலைவர்கள் ராஜேந்திரன் சீனிவாசன் கமலநாதன் ஆனந்தகுமார் விக்னேஷ் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக கோரி க்கை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் ரத்தினகுமரன் நன்றி கூறினார்.

    ×