என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேயிலை செடி"

    • தேயிலை மற்றும் காய்கறி விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
    • நீர் பனிப்பொழிவு மற்றும் உறைபனி தாக்கம் அதிகமாக இருந்தது.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை மற்றும் காய்கறி விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

    இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. மேலும் பனிமூட்டம் மற்றும் போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால், தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கியது. ஆனாலும் தேயிலை விளைச்சல் போதுமானதாக இருந்தது வந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் முழுவதும் நீர் பனிப்பொழிவு மற்றும் உறைபனி தாக்கம் அதிகமாக இருந்தது.

    இதன் காரணமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகள் அனைத்தும் கருகின.

    விவசாயிகள் கவலை இதற்கிடையில், பனியின் தாக்கத்தில் இருந்து தேயிலை செடிகளைப் பாதுகாக்க, தண்ணீர் வசதி உள்ள பகுதிகளில் விவசாயிகள் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வந்தனர். மேலும் சிலர் செடி, கொடிகள் மற்றும் தோகைகளை தேயிலை செடிகள் மீது பரப்பி வைத்து தேயிலை செடிகள் கருகாமல் பாதுகாத்து வந்தனர்.

    ஆனாலும் கடும் பனிப்பொழிவு காரணமாக மிளிதேன், கேர்கம்பை, கீழ்கோத்தகிரி, ஒன்னட்டி, பனிப்பள்ளம், குடுமனை, பனஹட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள தேயிலை செடிகள் கருகி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துளள்னர்.

    மேலும் மழை பெய்தால் மட்டுமே மீண்டும் தேயிலை செடிகள் பசுமைக்கு திரும்பும் என்பதால் விவசாயிகள் மழைக்காக காத்திருக்கின்றனர்.

    இதுகுறித்து தேயிலை விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு பனிக்காலம் தாமதமாக தொடங்கியது. பகலில் வெயில் அடித்தாலும் இரவில் உறைபனியின் தாக்கம் இருந்ததால், தேயிலை கொழுந்துகள், செடிகள் கருகின. இதனால் சாகுபடி குறைந்துள்ளதுடன், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இனி மழை பெய்து பசுமை திரும்பி செடிகளில் கொழுந்து விட்டால் மட்டுமே பச்சை தேயிலையை பறிக்க முடியும். இதற்கு 4 மாதங்கள் வரை ஆகும். எனவே மழைக்காக எதிர்பார்த்துள்ளோம் என்று தெரிவித்தனர் 

    • 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தேயிலை பயிரிடப் பட்டு ள்ளது.
    • வால்பாறையில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து உள்ளது.

    பொள்ளாச்சி

    கோவை மாவட்டம் வால்பாறையில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது.

    30-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட் களில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தேயிலை பயிரிடப் பட்டு ள்ளது.

    இது தவிர சிறிய அளவில் காப்பி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப் பட்டுள்ளன.

    வால்பாறையை படும் சுற்றி உள்ள எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலை த்தூள் கோவை, கொச்சி, குன்னூர்போன்ற ஏல மையங்கள் மூலம் வெளிநா டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் பருவ மழைக்கு பின்னர் வால்பாறையில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து உள்ளது.

    இரவு முதல் காலை வரை பனிப்பொழிவும், பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. தொடரு ம் இந்த காலநிலை மாற்றத்தால், தேயிலை செடிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் துளிர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து, ஸ்பிரிங்லர் மூலம் காலை, மாலை நேரங்களில் தண்ணீர் தெளித்து தேயிலை மகசூலை அதிகரிக்கும் பணியில் தேயிலை தோட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளனர். 

    • நீலகிரி மாவட்டத்தில் தற்போது நீர் பனிப்பொழிவு மற்றும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
    • உறைபனியின் தாக்கத்தால் தேயிலை மகசூல் குறைவதுடன், விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டமும் ஏற்படும்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த தேயிலை விவசாயத்தில் 63 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர்.

    மாவட்டத்தில் 16 அரசு கூட்டுறவு தொழிற்சாலைகளும், 110 தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது நீர் பனிப்பொழிவு மற்றும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    இந்த பாதிப்புகளில் இருந்து, தேயிலை செடிகளை பாதுகாக்க தேயிலை எஸ்டேட் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி, அதனை பாதுகாத்து வருகின்றனர்.

    ஆனால் சிறு விவசாயிகள் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் முன்னெச்சிக்கை நடவடிக்கையாக தேயிலை அறுவடை செய்கின்றனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு,குறு விவசாயிகள் தாழ்வான பகுதிகளில் பயிரிட்டுள்ள தேயிலையை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் உறைபனி அதிகளவில் விழத் தொடங்கி விடும். அவ்வாறு விழுந்தால் தேயிலை செடிகள் பாதிக்கப்படும். குறிப்பாக தாழ்வான பகுதியில் உள்ள செடிகள் தான் அதிக பாதிப்புக்குள்ளாகும். எனவே முன்கூட்டியே தேயிலை செடிகளில் உள்ள இலைகளை நாங்கள் அறுவடை செய்து வருகிறோம்.

    அறுவடைக்கு பின்னர் உடனடியாக செடிகளை கவாத்து செய்து முறையாக பராமரித்தால் மட்டுமே அடுத்த 3 மாதத்துக்கு பின்னர் மகசூல் கிடைக்கும். அதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்கி உள்ளோம்.

    உறைபனியின் தாக்கத்தால் தேயிலை மகசூல் குறைவதுடன், விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டமும் ஏற்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×