என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழு அமைப்பு"

    • மாணவிகளிடம் ஆபாசபேச்சு விவகாரத்தில் கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • இதுதொடர்பான அறிக்கையை வருகிற 17-ந் தேதிக்குள் அளிக்குமாறு கல்லூரி முதல்வர் மேகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் சத்திய சேகரன் என்பவர் மாணவிகளிடம் செல்போ னில் ஆபாசமாகவும், சாதிரீதியாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த பேராசிரியர், மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    பேராசிரியர் சத்தியசேகரன் மீதான புகாரின் பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபாசமாக பேசுதல், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தல் என்பது உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பேராசிரியரை தேடி வருகின்றனர்.

    மேலும் பள்ளி-கல்வித்துறை சார்பில் பேராசிரியர் சத்தியசேகரன் மீதான புகார்கள் மாணவ-மாணவிகளிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. இதுதவிர, அந்த பேராசி ரியர் மீது பள்ளி கல்வித் துறை சார்பில் நடவடிக்கை எடுப்பதற்காக மூத்த பேராசிரியர்களை கொண்ட 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பான அறிக்கையை வருகிற 17-ந் தேதிக்குள் அளிக்குமாறு கல்லூரி முதல்வர் மேகலா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் பரமக்குடி அரசு கலைக்கல்லூரிக்கு மறுதேதி அறிவிக்கப்படாமல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும்.
    • கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும்.

    காங்கயம்

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வரிவிதிப்பு செய்யப்படாத கட்டிடம் மற்றும் ஏற்கனவே வரிவிதிப்பு செய்யப்பட்டு அதன் பின் கூடுதலாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்படாமல் இருந்தால் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும். அவ்வாறு வரியினங்களை செலுத்த முன் வராத பட்சத்தில் குழு ஆய்வு செய்யும்போது கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் 6 ஆண்டுகளுக்கான வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும். எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை.

    ஊதிய உயர்வு உள்ளிட்ட மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை இயக்குனர், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குனர், மருத்துவம், ஊரக நல பணிகள் துறை இயக்குனர் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

    • ஐ.ஜி தலைமையில் குழுவை அமைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு.
    • தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல், பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் பேட்டி.

    கேரள திரைத் துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

    அதன்படி, ஐ.ஜி தலைமையில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவை அமைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

    தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல், பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் பேட்டி அளித்தாலும், புகார் அளிக்க முன்வராததால் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரங்களில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க 7 பேர் கொண்ட குழு உரிய பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    கோவை மாவட்டம் வால்பாறையில் 4 வயது சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளியின் 4 வயது மகள் அப்சராவை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியது.

    சிறுமியின் குடும்பத்திற்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவில் வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.
    • முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்ததற்கு, அன்புமணி எதிர்ப்பு.

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பட்டானூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க.வின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டம் தொடங்கியவுடன், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி குறித்து பேசினார்.

    இதையடுத்து, புதுச்சேரி பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.

    அன்புமணியின் சகோதரி மகன் முகுந்தனுக்கு மாநில இளைஞரணி தலைவராக நியமனம் செய்ததற்கு, அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.

    பா.ம.க. கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் ஆனவருக்கு பதவி அளிப்பதா என மேடையிலேயே அன்புமணி கேள்வி கேட்டார்.

    நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள் என்றும் நான் உருவாக்கிய கட்சி என பல முறை அழுத்தமாக கூறினார்.

    எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என ராமதாஸ் கூறியதும், மேடையிலேயே சரி சரி என அன்புமணி கூறினார்.

    அன்புமணிக்கு முகுந்தன் துணையாக இருப்பார் என ராமதாஸ் கூற, தேவையில்லை என அன்புமணி பதில் கூறினார்.

    சரி சரி என கூறிய அன்புமணியிடம் வெளியேறுவது என்றால் வெளியேறு என்று ராமதாஸ் கூறினார்.

    பனையூரில் எனக்கு அலுவலகம் உள்ளது. அங்கு வந்து தொடர்பு கொள்ளுங்கள் என மைக்கை எறிந்து விட்டு அன்புமணி சென்றார்.

    இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் நேரடி மோதலால் யாரை ஆதரிப்பது என தெரியாமல் பாமக நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இதைதொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணியை சமாதானம் செய்ய குழு ஒன்றை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழுவிற்கு பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமைத் தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அன்புமணியை வரவழைத்து நாளை பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×