என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாற்றத்திறனாளி"
- மழைநீர் கால்வாய் பணியில் போதுமான தடுப்புகள் அமைக்கப்பட வில்லை என்று தெரிகிறது.
- போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம்:
திருவொற்றியூரை சேர்ந்தவர்கள் ஸ்ரீதேவி(40), கலைவாணி(30). உறவினர்களான இருவரும் மாற்றுத்திறனாளிகள். நேற்று மாலை அவர்கள் இருவரும் 3 சக்கர மொபட்டில் திருவொற்றியூர் நோக்கி சேர்ந்து சென்று கொண்டு இருந்தனர்.
மண்ணடி, வடக்கு கடற்கரை ராஜாஜி சாலையில் சென்றபோது அங்கு சாலையோரம் இருந்த சேதம் அடைந்த பாதாள சாக்கடை மூடியின் மீது மொபட் மோதியது. இதில் ஸ்ரீதேவியும், கலைவாணியும் அருகில் நடைபெற்ற மழை நீர் வடிகால் பணிக்கு போடப்பட்டு இருந்த கான்கி ரீட் கம்பி மீது விழுந்தனர்.
ஸ்ரீதேவிக்கு கை, நெற்றியிலும், கலைவாணிக்கு வயிற்றுப் பகுதியிலும் கம்பி குத்தி பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டுஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சகிச்சை பெற்று வருகிறார்கள். பாதாளசாக்கடை மூடி கடந்த சில நாட்களாக சேதம் அடைந்து உள்ளது. இதனால் அதில் கற்கள் மற்றும் செடிகளை போட்டு வைத்து உள்ளனர். அதன் மீது ஸ்ரீதேவி, கலைவாணி வந்த மொபட் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. மேலும் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணியில் போதுமான தடுப்புகள் அமைக்கப்பட வில்லை என்று தெரிகிறது.
இது குறித்து கொத்தவால் சாவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்த பின்னர் அந்த இடத்தில் புதிதாக பாதாள சாக்கடை மூடி போடப்பட்டு உள்ளது.
- திவாகர் (வயது 8) தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்.
- இவர் தனக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்க மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட ம் திருக்கோவிலூர் கொழுந்தராபட்டு கிராம த்தைச் சேர்ந்த இருதயராஜ் மகன் திவாகர் (வயது 8) தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இவர் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தனக்கு மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு சக்கர நாற்காலி வழங்க மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார்.மனுவை பெற்றுக்கொ ண்ட மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளி சிறுவ னின் மனுமீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிர மணிக்கு உத்தரவிட்டார்.
அதன்படி ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள மூளைமுடக்கு வாதத்தால் பாதிக்கப்ப ட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்கா லியினை ,மாற்றுத்திறனாளி சிறுவனு க்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார். மாற்றுத்தி றனாளி சிறுவன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த உடனே மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகா ரிகளுக்கு உத்தரவி டப்பட்டு மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சிறப்பு சர்க்கர நாற்காலி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மாற்றுத் திறனாளிகள் சங்கம் மற்றும் சக் ஷம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக் கான சுயம்வரம் நிகழ்ச்சி கடலூர் திருப்பாதிரிப்புலி யூரில் நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மணமகன் மற்றும் மணமகள்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
கடலூர்:
சிகரம் உன்னால் முடியும் தோழா மாற்றுத் திறனாளிகள் சங்கம் மற்றும் சக் ஷம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக் கான சுயம்வரம் நிகழ்ச்சி கடலூர் திருப்பாதிரிப்புலி யூரில் நடைபெற்றது. இதற்கு சையத் முஸ்தபா தலைமை தாங்கினார். வள்ளிவிலாஸ் உரிமையா ளர் பாலு, பொருளாளர் குமரவேல், துணைத்தலை வர் சுந்தர மூர்த்தி, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுப்ராயன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மணமகன் மற்றும் மணமகள்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட மணமகன் மற்றும் மணமகள்கள் தங்களுக்கு தகுதியான வாழ்க்கை துணையை தேர்வு செய்தனர்.
முன்னதாக தாமரைச் செல்வன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் , கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சி தலைவர் முத்துக் குமாரசாமி முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், ராஜன், அருண், குளோபல் மனவளர்ச்சி சிறப்பு பள்ளி இயக்குனர் கோபால், கிறிஸ் டாோபர், இக்னைட் முதி யோர் காப்பக இயக்குனர் ஜோஸ் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில் 20வது ஆண்டு விளையாட்டி போட்டி நடந்தது.
- தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.
சென்னை:
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில 20-வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் சென்னை நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜெசிந்தாலாசரஸ் போட்டிகளை தொடங்கி வைத்தார். கருப்பையா முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பா.சிம்மசந்திரன் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மாநில பொது செயலாளர் பொன்னுசாமி வரவேற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. தடகளம், வாலிபால், டென்னிஸ், பேட்மிட்டன், கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.
- திடீரென லாட்ஜில் இருந்த மின்வயரில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது.
- புகை மூட்டத்தில் லாட்ஜ் அறையில் சிக்கி இருந்த மாற்றுத்திறனாளி துரைராஜை பத்திரமாக மீட்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் வீரராகவர் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் அருகே உள்ள லாட்ஜூகளில் அறை எடுத்து தங்குவது வழக்கம்.
இந்நிலையில் சென்னை வண்ணாரப் பேட்டையை சேர்ந்த குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் அவர்கள் சன்னதி தெருவில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தனர். இன்று காலை திடீரென லாட்ஜில் இருந்த மின்வயரில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. இதனால் அறைகளுக்குள் புகை மூட்டம் பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அறைகளில் தங்கி இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவிட்டனர்.
அப்போது வண்ணாரப் பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான துரைராஜ் என்பவர் வெளியே வர முடியாமல் அறையில் சிக்கிக் கொண்டார். புகை மூட்டம் அதிகம் ஏற்பட்டு தீப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் புகை மூட்டத்தில் லாட்ஜ் அறையில் சிக்கி இருந்த மாற்றுத்திறனாளி துரைராஜை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்