என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாடல் அழகி"
- சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பஞ்சாபை சேர்ந்த 20 வயது மாடல் அழகியான ரேச்சல் குப்தா போட்டியிட்டார்.
- வெற்றி பெற்ற ரேச்சல் குப்தாவுக்கு முன்னாள் அழகி மகுடம் சூட்டினார்.
பாங்காங்:
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் சர்வதேச அழகி போட்டியான 'மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2024' போட்டிகள் நடந்தது. முன்னதாக அந்தந்த நாடுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்று மகுடம் சூடிய 70 அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பஞ்சாபை சேர்ந்த 20 வயது மாடல் அழகியான ரேச்சல் குப்தா போட்டியிட்டார். பாரம்பரிய உடை, நவநாகரிக உடை உள்ளிட்ட தகுதி சுற்றுக்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்தன. அனைத்து சுற்றுக்களிலும் அதிக புள்ளிகள் பெற்று ரேச்சல் குப்தா முதலிடம் பிடித்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சிஜே ஒபைசா என்பவர் 2-ம் இடம் பிடித்தார். இதனால் 'மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல்-2024' வெற்றியாளராக ரேச்சல் குப்தா அறிவிக்கப்பட்டார்.
வெற்றி பெற்ற ரேச்சல் குப்தாவுக்கு முன்னாள் அழகி மகுடம் சூட்டினார். 12 ஆண்டுகளாக நடைபெறும் இந்த 'மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல்' போட்டியில் இந்திய அழகி வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும்.
- சோய் சூன்-ஹ்வா தனது வெள்ளை முடி மற்றும் இளமை உணர்வுடன், சக போட்டியாளர்களிடையே தனித்து நிற்கிறார்.
- சோய் மாடலிங்கில் வெற்றிகரமான வாழ்க்கையை தொடர்ந்தார்.
தென்கொரியாவை சேர்ந்த 80 வயதான மாடல் அழகி சோய் சூன்-ஹ்வா மிஸ் யுனிவர்ஸ் கொரியா போட்டியில் மிகவும் வயதான போட்டியாளர் என்ற வரலாறு படைத்துள்ளார்.
சோய் சூன்-ஹ்வா தனது வெள்ளை முடி மற்றும் இளமை உணர்வுடன், சக போட்டியாளர்களிடையே தனித்து நிற்கிறார். பல தசாப்தங்கள் இளையவர். ஆனால் அவர் வயது வெறும் எண் என்பதை நிரூபிப்பதில் உறுதியாக இருக்கிறார்.
1952ம் ஆண்டு முதல் மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு 1943-ல் சோய் பிறந்தார். வரும் நவம்பரில் மெக்ஸிகோவில் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ் இறுதிப்போட்டியில் தென் கொரியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினால் சரித்திரம் படைக்க உள்ளார். அவர் திங்கட்கிழமை உலக அழகி கிரீடத்திற்காக 31 பெண்களுடன் போட்டியிடுகிறார்.
வயதான போதிலும் சோய் தனது திறன்களில் நம்பிக்கையுடன் இருக்கிறார். மற்றும் வரவிருக்கும் போட்டியில் கலந்து கொள்ள உற்சாகமாக இருக்கிறார்.
80 வயதான ஒரு பெண்மணி எப்படி இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்? அந்த உடலை அவள் எப்படி பராமரித்தாள்? உணவு முறை என்ன? என உலகையே திகைக்க வைக்க விரும்புகிறேன் என்று சோய் சூன்-ஹ்வா கூறினார்.
சோய் மாடலிங்கில் வெற்றிகரமான வாழ்க்கையை தொடர்ந்தார். தனது 50 வயதில் நிதி சிக்கல்களை எதிர்கொண்டார். மருத்துவமனை பராமரிப்பாளராக பணிபுரிந்துள்ளார். ஒரு நோயாளியின் ஊக்கத்தால், 72 வயதில் அவர் மீண்டும் மாடலிங் பயிற்சியைத் தொடங்கி உள்ளார்.
முதன்முறையாக வயது கட்டுப்பாடுகளை நீக்கி அனைத்து வயது பெண்களுக்கும் கதவுகளைத் திறந்திருக்கும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் நான் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று சோய் கூறினார்.
- அறையில் இருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- போதை பொருட்கள் வியாபாரிகள் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.
திருவனந்தபுரம்
கேரள மாநிலம் கருகப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் அந்த லாட்ஜில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு அறையில் கேரள மாநிலம் வரபுழாவை சேர்ந்த மாடல் அழகியான அல்கா போனி(வயது22), இடுக்கியை சேர்ந்த ஆஷிக் அன்சாரி(22), சூரஜ்(26), பாலக்காட்டை சேர்ந்த ரஞ்சித்(24), முகமது அசார்(18), திருச்சூரை சேர்ந்த அதுல்(18) ஆகிய 6 பேர் தங்கியிருந்தனர். அந்த அறையில சோதனை செய்தபோது கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தன.
இதையடுத்து மாடல் அழகி உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் அறையில் இருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட போது மாடல் அழகி உள்ளிட்ட 6 பேரும் போதையில் இருந்துள்ளனர். அவர்கள் போதை பொருட்களை பெங்களூருவில் இருந்து கொண்டு வந்து கேரளாவில் விற்பனை செய்து வந்திருக்கின்றனர்.
அவர்களது செல்போன் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்த போதை பொருட்கள் வியாபாரிகள் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அதனடிப்பைடையில் இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
- அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் இது பற்றி பெற்றோர் தாய்லாந்தில் உள்ள தூதரகத்தில் தகவல் கொடுத்தனர்.
- அடையாளம் தெரியாத பிணம் போல அவரது உடல் பஹ்ரைன் சல்மானியா ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது.
பஹ்ரைன்:
தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைகன் கென்ன கம் ( வயது 31). மாடல் அழகியான இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பஹ்ரைன் நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
பஹ்ரைனில் அவருக்கு ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதனால் அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வருவதாக கைகன் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இவர் சமூக வலை தளங்களில் சுறு சுறுப்பாக இருந்து வந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் சமூகவலை தளங்களில் பதிவடுவதை நிறுத்தினார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் இது பற்றி பெற்றோர் தாய்லாந்தில் உள்ள தூதரகத்தில் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் மாடல் அழகி கைகன் கென்னகம் பஹ்ரைனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் இருப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அடையாளம் தெரியாத பிணம் போல அவரது உடல் பஹ்ரைன் சல்மானியா ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது. அவரது உடலில் எந்த காயமும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். அவரது கையில் டாட்டூ வரைந்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அது தங்களது மகள் தான் என கைகனின் பெற்றோர் ஒத்துக்கொண்டனர்.
மகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட் டியுள்ளனர். இது தொடர்பாக தூதரகத்திலும் புகார் மனு கொடுத்து உள்ளனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய்லாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக வெளிநாடுகளில் மாடல் அழகிகள் மற்றும் நடிகைகள் இளம் வயதில் மரணத்தை தழுவுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- டெலிகிராம் என்ற செயலி மூலம் நேகா என்கிற மெகர் என்ற பெண் தன்னை தொடர்பு கொண்டார்.
- வீடியோக்களை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளனர்.
பெங்களூரு:
சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள், குற்றச்சம்பவங்கள் குறித்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை அறியாமல் மோசடி கும்பலின் வலையில் சிக்குபவர்கள் பல லட்சங்களை இழந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில், டெலிகிராம் என்ற செயலி மூலம் நேகா என்கிற மெகர் என்ற பெண் தன்னை தொடர்பு கொண்டார். பின்னர் வாட்ஸ்-அப் மூலம் இருவரும் பேச ஆரம்பித்தோம்.
அப்போது அவர் எனது கணவர் துபாயில் பணிபுரிகிறார். இதனால் நான் தனிமையில் தவிக்கிறேன். உங்களுடன் உடலுறவில் ஈடுபட விரும்புகிறேன் என கூறியதோடு அவரது புகைப்படங்கள் மற்றும் முகவரியை கூறினார்.
அதன்படி சம்பவத்தன்று நான் மெகர் வீட்டுக்கு சென்றபோது அங்கு அடையாளம் தெரியாத 3 பேர் திடீரென நுழைந்து ஏன் இங்கு வந்தீர்கள் என கூறி என்னை தாக்கினர்.
பின்னர் என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து ரூ.3 லட்சம் தராவிட்டால் நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலமாக அழைத்து செல்வோம் என மிரட்டினார். இரவு வரை என்னை சிறைப்பிடித்து வைத்திருந்த அந்த கும்பல் என்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டுகளை பறித்து கொண்டதோடு கூடுதலாக ரூ.2 லட்சம் கேட்டனர்.
அப்போது என்னுடைய கிரெடிட் கார்டு வீட்டில் இருப்பதாக கூறி நான் வீட்டுக்கு முயன்றபோது ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பித்தேன். என்னை கடத்தி தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அந்த வாலிபரை கடத்தி தாக்கி பணம் பறித்த கும்பலை சேர்ந்த சரண பிரகாஷ், அப்துல் காதர், யாஷின் என்பது தெரிய வந்தது. அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட நேகா என்ற மெகர் மும்பையை சேர்ந்த மாடல் அழகி என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்று அவரை பிடித்தனர்.
மாடல் அழகி நேகா ஹனிடிராப் முறையில் தொழில் அதிபர்கள், வாலிபர்கள் என 50-க்கும் மேற்பட்டோரிடம் செல்போன் செயலிகள் மூலம் உரையாடி உள்ளார்.
அப்போது கொஞ்சி குலாவி பேசி அவர்களை தனது வலையில் வீழ்த்தி உள்ளார். பின்னர் அவர்களை வீட்டுக்கு வரவழைத்து உள்ளார். அங்கு வருபவர்களை வீட்டு வாசலுக்கு பிகினி உடையில் கிளுகிளுப்பாக சென்று வரவேற்று உள்ளே அழைத்து சென்று விடுவாராம். ஏற்கனவே வீட்டிற்குள் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி உள்ள நிலையில் வீட்டுக்குள் வருபவர்களை நேகா பிகினி உடையில் கட்டி அணைத்ததும் அதனை சரண பிரகாஷ், அப்துல் காதர், யாஷின் ஆகிய 3 பேரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளனர். இதுவரை அந்த கும்பல் 50-க்கும் மேற்பட்ட வாலிபர்களிடம் ரூ.35 லட்சத்திற்கும் மேல் பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயந்துபோன மாடல் அழகி சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
- பீகார் மாநிலத்தில் தன்வீர் கான் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ராஞ்சி:
பீகார் மாநிலம் பகலாப்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது மாடல் அழகி தற்போது மும்பையில் வசித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு நிறுவனத்தில் மாடலிங் தொழில் செய்து வந்தார். அப்போது அந்த நிறுவன அதிபரான தன்வீர் கானுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி அவர் மாடல் அழகியை விதவிதமாக ஆபாச படம் எடுத்ததாக கூறப்படுகிறது
சில மாதங்களுக்கு முன்பு தன்வீர் கான் மாடல் அழகியை பாங்காங் அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. பின்னர் அவரை மிரட்டி ஒரு ஆண்டுக்கு மேலாக பாலியல் தொல்லையும் கொடுத்து வந்தார். மேலும் மாடல் அழகியை மதமாற்றம் செய்யவும் முயற்சி செய்தார்.
இதுபற்றி வெளியில் சொன்னால் தன்னிடம் உள்ள ஆபாச படங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்ப போவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன மாடல் அழகி சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார். ஆனால் நண்பர் ஒருவர் அறிவுரை கூறியதால் அவர் தற்கொலை முயற்சியை கைவிட்டார்.
பின்னர் இது குறித்து மாடல் அழகி மும்பை வெர்சோவா போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடந்தது ஜார்க்கண்ட் மாநிலம் என்பதால் மும்பை போலீசார் இந்த வழக்கை ராஞ்சிக்கு மாற்றினார்கள். போலீசர் தன்வீர் கான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் அவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
அவரை ராஞ்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என அவர் போலீசில் தெரிவித்து உள்ளார். தன் நிறுவனத்தில் அந்த பெண் மாடலிங் தொழில் செய்து வந்ததாகவும், அவரால் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார். இது பற்றி அந்த பெண்ணிடம் கேட்டதற்கு அவர் என்னுடைய நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டி வந்தார் என்று தன்வீர் கான் குறித்து போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. இதில் யார்? சொல்வது உண்மை என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தை தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மாநில அரசு சார்பில் திரைப்பட நகர் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள பிலிம் சிட்டியில் அமைந்துள்ள ஸ்டூடியோவில் நேற்று பேஷன்ஷோ நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் ஏராளமான மாடல் அழகிகள் விதவிதமான ஆடை அணிந்து 'ரேம்ப்வாக்' வந்தனர்.
24 வயதான வன்சிகா சோப்ரா என்ற மாடல் அழகி ரேம்ப்வாக் சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த இரும்பு தூண் ஒன்று மேலிருந்து சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் வன்சிகா சோப்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
மின் விளக்குகளுக்காக அந்த இரும்புதூண் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், எதிர்பாராத விதமாக அந்த தூண் மேலிருந்து சரிந்து விழுந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் பாபிராஜ் என்ற வாலிபர் காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டுவருகிறது. இந்த விபத்தை தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பேஷன்ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. எனவே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.
- இந்த கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- முன்னாள் கணவர், கணவரின் சகோதர், தந்தை உள்ளிட்டோரிடம் விசாரணை
ஹாங்காங்:
ஹாங்காங் நாட்டில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் அபி சோய் (வயது 28). சர்வதேச அளவில் புகழ் பெற்ற அவர், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்த 2023-ம் ஆண்டுக்கான எலீ சாப் ஸ்பிரிங் சம்மர் ஹாடி கோட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கடந்த வாரம், எல்அபிசியல் மொனாக்கோ என்ற பேஷன் செய்தி இதழின் டிஜிட்டல் முகப்பு பக்கத்தில் அவரது படம் இடம் பெற்றிருந்தது. சமூக ஊடகத்திலும் பிரபல நபரான அவர், இன்ஸ்டாகிராமில் 1 லட்சம் பாலோவர்களை கொண்டு உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவரிடம் இருந்து பிரிந்து விட்டார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அவர் காணாமல் போனார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், போலீசார் நேற்று முன்தினம் தாய் போ மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் உள்ள அவரது உடல் பாகங்களை மீட்டனர். அவரது 2 கால்களும் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்தன. தலை, உடல் பகுதி மற்றும் கைகளை போலீசார் தேடி வருகின்றனர். அவரை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
மாடல் அழகி அபியின் முன்னாள் கணவர், கணவரின் சகோதர், தந்தை உள்ளிட்டோரை போலீசார் பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். முன்னாள் மாமியாரும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்