என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திராயன்"

    • விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிறுவப்பட்டு சந்திரயான்-3 திட்டம் முழுமை பெற்றது.
    • இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன

    சந்திரனை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-5 திட்டப்பணிக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரோ தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றதற்காக நேற்று நடைபெற்ற வாழ்த்து நிகழ்ச்சியில் பேசிய நாராயணன், 25 கிலோ எடையுள்ள 'பிரயாக்யான்' ரோவரைச் சுமந்து சென்ற சந்திரயான்-3 மிஷன் போலல்லாமல், சந்திரயான்-5 மிஷன் சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய 250 கிலோ எடையுள்ள ரோவரை எடுத்துச் செல்லும்.

    சந்திரயான் என்பது சந்திர மேற்பரப்பை ஆய்வு செய்யும் திட்டம். 2008 ஆம் ஆண்டு வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான்-1, சந்திரனின் வேதியியல், கனிமவியல் மற்றும் புகைப்பட-புவியியல் வரைபடத்தை எடுத்தது.

    2019 இல் ஏவப்பட்ட சந்திரயான்-2, 98 சதவீத வெற்றியைப் பெற்றது. ஆனால் இறுதி கட்டங்களில் இரண்டு சதவீத பணியை மட்டும் முடிக்க முடியவில்லை. இன்னும் சந்திரயான்-2 இல் உள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா நூற்றுக்கணக்கான படங்களை அனுப்பி வருகிறது.

    சந்திரயான்-3 மிஷன் என்பது சந்திரயான்-2 இன் தொடர்ச்சியான பயணமாகும். ஆகஸ்ட் 23, 2023 அன்று நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிறுவப்பட்டு சந்திரயான்-3 திட்டம் முழுமை பெற்றது. 2027-ல் தொடங்கப்படும் சந்திரயான்-4 திட்டம் நிலவில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே மூன்று நாட்களுக்கு முன்புதான் சந்திரயான்-5 திட்டத்திற்கான ஒப்புதல் எங்களுக்குக் கிடைத்தது. ஜப்பானுடன் இணைந்து நாங்கள் அதைச் செய்வோம் என்று நாராயணன் கூறினார்.

     

    மேலும் இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசிய நாராயணன், இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.

    • சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான முன்னேற்பாடு பணிகளையும் இஸ்ரோ செய்து வருகிறது.
    • குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தினை தமிழக அரசு கையகப்படுத்தி கொடுத்துவிட்டது.

    விருதுநகர்:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ஆலோசகர் சிவன் தனது மனைவியுடன் விருதுநகர் வந்தார். அவர்களுடன் முன்னாள் மூத்த இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியனும் விருதுநகர் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காமராஜர் நினைவு இல்லம் சென்று பார்வையிட்டனர். பின்னர் நிருபர்களிடம் சிவன் கூறியதாவது:-

    மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் நிலவை ஆராய்ச்சி செய்யும் சந்திராயன்-3 திட்டம் ஆகியவற்றிற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான முன்னேற்பாடு பணிகளையும் இஸ்ரோ செய்து வருகிறது.

    மற்ற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் நாம் வளர வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டிற்கு தேவையான ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். இந்தியாவில் இருந்து ஏவுகணைகளை விண்வெளிக்கு அனுப்புவதற்கான செலவு குறைவாக உள்ளதால் பல்வேறு நாடுகளும் இந்தியாவில் இருந்து தங்களது ஏவுகணைகளை அனுப்ப முன் வந்துள்ளன்.

    குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தினை தமிழக அரசு கையகப்படுத்தி கொடுத்துவிட்டது. அங்கு கட்டுமான பணிகள் மற்றும் பிற பணிகளை தொடங்குவதற்காக நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அப்பகுதியின் பொருளாதார நிலைமை மேம்பாடு அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
    • இந்தியா விண்வெளியில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2020 மற்றும் 2021-ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் சித்தார்தன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பெங்களூரு விண்வெளி ஆராய்ச்சி மைய நிகழ்ச்சி இயக்குநரும், அரசு என்ஜினீயரிங் கல்லூரியின் முன்னாள் மாணவியுமான நிகர் ஷாஜி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், சிறப்பிடம் பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கினார்.

    பட்டம் பெறுவதற்காக 1,152 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இன்று இளநிலை படிப்பில் 542 பேரும், முதுகலை படிப்பில் 56 பேரும் என மொத்தம் 598 பேர் பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் சிறப்பு விருந்தினர் நிகர்ஷாஜி கூறும்போது, இந்த கல்லூரியின் முன்னாள் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியா விண்வெளியில் முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறது.

    சந்திராயன்-1 மற்றும் சந்திராயன்-2 ஏவியதன் மூலம் உலக அரங்கில் இந்தியா புகழ் பெற்றுள்ளது என்றார்.

    இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • விண்கலத்தை ராக்கெட்டில் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • சந்திராயான்- 3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டரில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளன.

    சென்னை:

    இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர் சந்திரயான்-2 விண்கலம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது.

    எனினும், தொழில்நுட்ப கோளாறால் திட்டமிட்டபடி 'லேண்டர் கலன்' தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான 'ஆர்பிட்டர்' நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. தற்போது ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து, ஆய்வு செய்து வருகிறது.

    இதற்கிடையே, சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கெனவே ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்களை மட்டும் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வருகிற 13-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப் பட உள்ளது. இதற்காக, சந்திரயான்-3 விண்கலம் கடந்த மே இறுதியில் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விண்கலத்தை ராக்கெட்டில் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறுதிக் கட்ட சோதனைகள் நிறைவடைந்த பின்னர், ஏவு தளத்துக்கு ராக்கெட் கொண்டு செல்லப்படும்.

    கடந்த முறை ஏற்பட்ட தோல்வியை அடிப்படையாக கொண்டு லேண்டர் மற்றும் ரோவர் கலன்களில் அதிநவீன வசதிகளுடன், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இது குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறியதாவது:-

    சந்திராயான்- 3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டரில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளன. சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் வேகமாக தரையிறங்கும் போது உடைந்து விடாமல் இருக்கும் வகையில் அதன் கால்கலை வலுவாக வடிவமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தரையிறங்கும் போது விபத்தை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சந்திரயான் -2 தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டு உள்ளன. வினாடிக்கு 2 அல்லது 3 மீட்டர் வேகத்தில் தரையிறங்கினால் கூட அது விபத்துக்குள்ளாகாது. மேலும் பல தடங்கல்கள் ஏற்படுவதை கையாள லேண்டரில் அதிக எரி பொருள்களை சேர்த்துள்ளோம். அதில் இருந்து மீண்டு வருவதற்கான திறன்களும் சேர்க்கப்பட்டு உள்ளது. மற்றொரு அம்சமாக லேசர் டாப்ளர் வேக மீட்டர் எனப்படும் சென்சார் ஒன்றையும் சேர்த்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்திராயன்- 3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட உள்ளது.
    • பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு சந்திரன் தலத்தில் சிறப்பு யாகம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாநில துணை தலைவர் துரை கோவிந்தராஜ்

    வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்- 3 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    அப்பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திங்களூர் கைலாசநாதர் சுவாமி கோவிலில் உள்ள சந்திரன் தலத்தில் சிறப்பு அபிஷேகமும் அதை தொடர்ந்து யாகமும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×