search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.ஜி.பி. சைலேந்திரபாபு"

    • போலீஸ் பணிக்கு விரும்பி வந்தீர்களா என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கேட்டார்.
    • சென்னையில் இருப்பதைப் போல் இந்தக் கட்டிடத்தை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    ஊட்டி

    தமிழ்நாட்டில் காவல்துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார். பயிற்சி வகுப்பு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் சரிபார்ப்பு செயல்பாட்டில், போலீஸ் துணை சூப்பிரண்டுகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு வந்தார்.

    வரும் வழியில் குன்னூர், வெலிங்டன், ஊட்டி மத்திய போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்தார். போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆவணங்களை ஆய்வு செய்தார். போலீஸ் பணிக்கு விரும்பி வந்தீர்களா என்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கேட்டார். மேலும் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து ஊட்டி மத்திய போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள, நீலகிரி மாவட்ட முதல் போலீஸ் நிலைய பாரம்பரிய கட்டிடத்தை பார்வையிட்டார். மேலும் சென்னையில் இருப்பதைப் போல் இந்தக் கட்டிடத்தை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையம் சார்பில் காவல்துறை சமூக நிதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவலர்களுக்கு, பழங்குடியினர் சான்று மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்களை கையாளுவது குறித்து 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் 1.2 சதவீதம் பழங்குடியினர் உள்ளனர். கடந்த ஆண்டு இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக 75 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு பழங்குடியினர் சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களில், 2,600 பேருக்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் உயர் கல்வி போட்டி தேர்வுகளில் அவர்கள் பணிகளில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    2,300 வரவேற்பு அதிகாரிகள் போலீசார் மற்றும் பொதுமக்களுடன் நல்லுறவு பேணும் வகையில் போலீஸ் நிலையங்களில் 2300 வரவேற்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் அவர்களுக்கு தெரிந்த மொழியில் கணிவாக பேசி, புகார்களை பதிவு செய்வது குறித்து 3 மாத பயிற்சி அளிக்கப்பட்டது.

    காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டால் தான் சிறப்பாக பணியாற்ற முடியும். தற்போது தமிழ்நாடு காவல்துறையில் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டு, முழு திறன் கொண்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு 10 ஆயிரம் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், 3500 காவலர்கள் தேர்வாகி பயிற்சியில் சேர்ந்துள்ளனர். 2500 பேர் நியமிக்கப்பட உள்ளனர். உதவி ஆய்வாளர்கள் 1000 பேர் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர். 444 உதவி ஆய்வாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 600 உதவி ஆய்வாளர்கள் காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்கவுள்ளது. இனி 6 மாதங்களுக்கு பிறகுதான் மீண்டும் ஆட்கள் தேர்வு நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணி, ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா, இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

    • மூதாட்டிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்த ஏட்டு தேசிங்கு மூதாட்டியை பத்திரமாக காப்பகம் ஒன்றில் சேர்த்தார்.
    • சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் போலீசாரையும் சிறப்பாக பணியாற்றும் காவலர்களையும் நேரில் அழைத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடர்ந்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சென்னை மாம்பலம் சிவபிரகாசம் சாலையில் கடந்த மாதம் 28-ந்தேதி வயதான மூதாட்டி ஒருவர் தவித்துக்கொண்டிருந்தார். இது தொடர்பாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். காக்கும் கரங்கள் செயலி மூலமாகவும் மூதாட்டியின் நிலை பற்றி புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஏட்டு தேசிங்கு உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டிக்கு உதவி செய்தார். அவரது பெயர் மற்றும் விவரங்களை கேட்டார். அப்போது மூதாட்டி தனது பெயர் ஜெயம்மா என்று தெரிவித்தார். மற்ற விவரங்களை அவரால் கூற முடியவில்லை.

    இதை தொடர்ந்து மூதாட்டிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்த ஏட்டு தேசிங்கு அவரை பத்திரமாக காப்பகம் ஒன்றில் சேர்த்தார். இது பற்றி தெரியவந்ததும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஏட்டு தேசிங்கை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது சிறப்பாக பணியாற்றி இருக்கிறீர்கள். இதுபோன்ற பணிகள் தொடரட்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

    டி.ஜி.பி. சைலேந்திரபாபு இதுபோன்று சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் போலீசாரையும் சிறப்பாக பணியாற்றும் காவலர்களையும் நேரில் அழைத்து தொடர்ந்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்டார்.
    • போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உள்ளிட்ட போலீசாரையும் பாராட்டினார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் மற்றும் கூட்டங்களை முடித்து கொண்டு திடீரென நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஈரோடு வந்தார்.

    அப்போது அவர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அதில் காவல் நிலைய பதிவேடுகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்றும், போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பதிவேடுகளை முறையாக பராமரித்து வருவதையும், போலீஸ் நிலையத்தின் செயல்பாடு குறித்தும் பாராட்டி வெகுமதியளித்தார்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உள்ளிட்ட போலீசாரையும் பாராட்டினார்.

    • கடந்த 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டது.
    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழக டி.ஜி.பி. சைலேந் திரபாபு ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

    ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கள் தங்கதுரை (ராமநாதபுரம்), செல்வராஜ் (சிவகங்கை) உள்ளிட்ட போலீஸ் அதிகா ரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் திருடுபோன ரூ.46 லட்சம் மதிப்புள்ள 146 பவுன் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து 2 மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.

    முன்னதாக ராமநாத புரம் வந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, போலீஸ் சூப்பிரண்டுகள் ெ தங்கதுரை, செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்ட சைலேந்திரபாபு சிறப்பாக பணியாற்றிய 30 போலீசாருக்கு சான்றிதழ் களை வழங்கினார்.

    தொடர்ந்து டி.ஜி.பி. நிருபர்களிடம் கூறியதா வது:-

    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் திருடுபோன ரூ.46 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதே போல் கடந்த 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பிற மாநிலத்தவர் தாக்கப்படுவது போல் பொய்யான தகவலை சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இவ்வாறு 2 வீடியோக்களை முகம்மது ரஸ்பி என்பவர் பதிவிட்டுள்ளார். இவர் வெளியிட்ட வீடியோவில் ஒன்று பிற மாநிலத்தவர் அவர்களுக்குள் மோதிக்கொண்ட சம்பவம், மற்றொன்று கோவையில் உள்ளூர்காரர்கள் மோதிக்கொண்டது. இதுபோன்ற தவறான வீடியோ வெளியிட்ட முகம்மது ரஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதே போன்று தவறான செய்திகள் வெளியிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகள் போலீஸ் அதிகாரிகளை தாக்கினால் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும் கைது செய்ய தயங்கமாட்டார்கள். ராமநாதபுரத்தில் 1200 போலீசார் பணியாற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியன் விரைவில் வரவுள்ளது.

    காவல்நிலைய துன்பு றுத்தல்கள் இந்தாண்டு ஏதும் நடைபெறவில்லை. சென்ற ஆண்டு 4 நிகழ்வுகள் நடைபெற்றன. தற்போது பொதுமக்களிடம் போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் குற்றவாளிகளிடம் அறிவியல் பூர்வமாக விசாரணை மேற்கொள்ளப்படுவதால் துன்புறுத்தல்களுக்கு வேலை இல்லை. 18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனங்கள் ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×