search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போரட்டம்"

    • எமெர்ஜென்சி சேவைகளை தவிர்த்து வழக்கம்போல் நடைபெறும் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது.
    • மருத்துவ சங்கங்களோடு சேர்ந்து மருத்துவர்கள் நாடு முழுவதும் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட [பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது. குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையில் இந்த வழக்கை மேற்கு வங்க அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது .

    இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் இன்று நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. நாளை[ஆகஸ்ட் 17] காலை 6 மணி முதல் [ஆகஸ்ட்18] காலை 6 மணி வரை நாடு முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த 24 மணிநேரத்தில், எமெர்ஜென்சி சேவைகளை தவிர்த்து வழக்கம்போல் நடைபெறும் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது.

    அம்ரிஸ்தரில் பஞ்சாப் அரசு மருத்துவமனை கல்லூரி, ரெசிடெண்ட் டாக்டர் அசோசியேசன் உள்ளிட்டவை இன்று முதலே காலவரையின்றி இந்த சேவைகளை நிறுத்தியுள்ளன.

    மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரி, பஞ்சாப் மாநிலத்தில் PCMS உள்ளிட்ட மருத்துவ அமைப்புகள், சிவில் மருத்துவமனை, குரு நானக் மருத்துவமனை பயிற்சி ஜூனியர் மருத்துவர்கள், டெல்லியின் RMS மருத்துவமனை மருத்துவர்கள், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ரெசிடெண்ட் டாக்டர் அசோசியேசன் மருத்துவர்கள், ஹைதராபாத்தில் இயங்கி வரும் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள், மும்பையில் செயல்படும் மருத்துவமனை டாக்டர்கள், கால்கத்தாவில் உள்ள பல்வேறு மருத்துவர்கள் என நாடு முழுவதும் இன்று தீவிரமான போராட்டம் நடந்து வருகிறது. 

    • நேதன்யாகு போரை சரிவர கையாளவில்லை என்று மக்கள் கொதிப்பில் உள்ளதாக தெரிகிறது.
    • நேதன்யாகு இல்லத்தின் அருகே திரண்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டத்தொடங்கினர்.

    பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரின் விளைவுகள் விபரீதமானதாக மாறி வருகிறது. இஸ்ரேலிலும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போரை சரிவர கையாளவில்லை என்று மக்கள் கொதிப்பில் உள்ளதாக தெரிகிறது. அவ்வப்போது அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கொந்தளிப்பான சூழ்நிலையை கட்டுப்படுத்த கடுமையான நடவைடிகைகளை நேதன்யாகு மேற்கொண்டு வருகிறார்.

     

    அந்த வகையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் அல் - குத்ஸில் திரண்ட சுமார் 1,30,000 போராட்டக்காரர்கள் இஸ்ரேலில் புதிதாக தேர்தல் நடத்த வலியுறுத்தியும், காசாவில் பிணைகக் கைதிகளாக மீதமுள்ள 100 இஸ்ரேலியர்களை விரைவில் மீட்க கோரியும் போராட்டம் நடத்தினர்.

     

    இந்த போராட்டத்தை  ஒடுக்க இஸ்ரேல் போலீசார் கடுமையான முறைகளை பிரயோகித்தது  சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் பாரிஸ் சதுக்கத்தில் உள்ள பிரதமர்நேதன்யாகு இல்லத்தின் அருகே திரண்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டத்தொடங்கினர்.

     

    அப்போது போலீஸ் ஒருவர் போராட்டக்காரிடம் மிகவும் கீழ்த்தரமான வகையில், ' நான் உன் தாயை பலாத்காரம் செய்வேன்' என்று மிரட்டியுள்ளார். போராட்டக்காரர்கள் சிலரை போலீஸ் கும்பல் ஆக்ரோஷமாக கையாளும் சமபாவங்கள்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று போராட்டம் நடந்த இடங்களிலெல்லாம் போலீசின் கடுமையான அணுகுமுறையை இஸ்ரேல் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. 

    • சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
    • அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    ஈரானில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தத்தப்பட்டு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எதிர்ப்புக்குரல் எழுந்து வந்தது. அப்படி அரசின் அடிப்படைவாதத்தை எதிரித்து குரல் கொடுத்துவந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பெண்கள் ஹிஜாப் அணிய நிர்பந்திக்கப்படுவதற்கு எதிராகவும் அந்நாட்டின் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடிவந்த பெண் பத்திரிகையாளரும் சமூக செயல்பாட்டாளருமான நர்கிஸ் முகமதி கடந்த 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உலக அளவில் பேசுபொருளானது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வருவதால் சிறையில் உள்ள அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே ஈரான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

     

    இந்நிலையில்தான் நர்கிஸ் முகமதி அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்த குற்றத்திற்காக 1 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் 6 முறை அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக 16 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த விசாரணையில் அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்ட நிலையில் தற்போது மேலும் 1 வருடம் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.

    சமீப காலங்களாக பெண்களின் ஆடை விஷயத்தில் மிகவும் கடுமை காட்டி வரும் ஈரான் அரசு பொது இடங்களில் சிசிடிவி கண்கணிப்பு மூலமும் எந்நேரமும் தீவரமாக கண்காணித்து வருகிறது . இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து நர்கிஸ் வெளியிட்ட வீடியோவில் பெண்களுக்கு எதிரான தீவிரமான போரை இரான் அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது என்று தெரிவித்திருந்தார். 

     

    முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாத காரணத்தால் இளம்பெண் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஹிஜாபுக்கு எதிரான கிளர்ச்சி மிகப்பெரிய அளவில் வெடித்தது. இருப்பினும் போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குறையை பிரயோகப்படுத்தி ஈரான் அடிப்படைவாத அரசு கிளார்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்தது குறிப்பிடத்தத்க்கது. 

     

    • 5000 இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்கள் மூலம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    5000 இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்கள் மூலம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று கம்போடியாவில் 300 இந்தியர்கள் தங்கள் கையாள்களுக்கு எதிராக 'கிளர்ச்சி' செய்ததாக ஆந்திரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வெளி நாட்டில் கைது செய்யப்பட்டனர்.

    ஆந்திராவைச் சேர்ந்த 150 இளைஞர்கள் கம்போடியாவில் =ஒரு வருடமாக சிக்கிக் கொண்டுள்ளனர், அங்கு சீன ஏஜெண்டுகளால் சிறைபிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மற்றும் டாஸ்க் கேம் மோசடி, பங்குச் சந்தை மோசடி உள்ளிட்டவற்றை செய்ய சீன ஏஜெண்டுகளால் வற்புறுத்தப் படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஏ ரவிசங்கர் கூறுகையில், இந்த கடத்தப்பட்ட இந்தியர்கள் கம்போடியாவில் உள்ள ஜின்பே மற்றும் கம்பவுண்ட், சிஹானூக்வில் ஆகிய இடங்களில் பெரிய அளவிலான கலவரங்களை ஏற்படுத்தினர். இது சைபர் குற்றங்களுக்கான மையமாக கூறப்படுகிறது.

    காவல்துறையின் எண்களுக்கு போன் செய்து அதுதொடர்பான வீடியோக்களை அனுப்பியுள்ளனர். நேற்று சுமார் 300 இந்தியர்கள் கம்போடியாவில் தங்கள் ஏஜெண்டுகளுக்கு எதிராக பெரிய அளவில் 'கிளர்ச்சி' செய்தனர் என்று தெரிவித்தார். மேலும் அவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    முன்னதாக சிங்கப்பூரில் டேட்டா என்ட்ரி வேலை வாங்கித்தருவதாக கூறி இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களைக் கடத்துவதாக மே 18 அன்று, விசாகப்பட்டினம் காவல் துறையினர் சுக்கா ராஜேஷ், எஸ் கொண்டலா ராவ் மற்றும் எம் ஞானேஷ்வர் ராவ் ஆகியோரை மனித கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

    • போராட்டத்தில் விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடி பறக்கவிட்டனர்.
    • ஒரு நாள் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி ஊராட்சி, நாகமங்களம் ஊராட்சி பகுதிகளான விளைநில பகுதிகளில் 6-வது சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் அப்பகுதியில் விவசாயிகள், கட்சியினர் பல்வேறு ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.

    நேற்று நடந்த 61-வது நாளாக போராட்டத்தில் விவசாய உபகரணங்கள் களப்பை மற்றும் கருப்பு கொடி பறக்கவிட்டனர்.

    இந்த நிலையில் உத்தனப்பள்ளி பகுதியில் இன்று ஒரு நாள் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவிய நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ×