search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம் இங்கிலாந்து தொடர்"

    • முதலில் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.
    • இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக லித்தன் தாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    மிர்புர்:

    வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், இன்று மூன்றாவது ஆட்டம் நடைபெற்றது.

    முதலில் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் லித்தன் தாஸ் 57 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். நஜ்முல் உசைன் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் டேவிட் மலன் 53 ரன்களும், கேப்டன் பட்லர் 40 ரன்களும் அடித்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களே சேர்த்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

    இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக லித்தன் தாஸ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக நஜ்முல் உசைன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 117 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • வங்காளதேச அணியின் மெஹிதி ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    டாக்கா:

    வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் இடையிலான 2வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வங்காளதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் சால்ட் 25 ரன்னும், டக்கட் 28 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேச அணியின் மெஹிதி ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்காளதேசம் களம் இறங்கியது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், அந்த அணியின் ஷாண்டோ நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.

    இறுதியில், வங்காளதேச அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. அத்துடன், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 156 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேச அணி 157 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    சட்டோகிராம்:

    இங்கிலாந்து அணி வங்காளதேசம் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்தது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்களை எடுத்தது. கேப்டன் ஜோஸ் பட்லரும் 67 ரன்னும், பில் சால்ட்டு 38 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் ஹசன் மக்முத் 2 விக்கெட்டும், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், ஷகிப் அல்-ஹசன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 30 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 51 ரன் விளாசினார். ரோனி தலுக்தர் 21 ரன்னும், லிட்டன் தாஸ் 12 ரன்னும், தவ்கித் ஹிரிடாய் 24 ரன்னும் எடுத்தனர்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாம்பியன் இங்கிலாந்தை வங்காளதேச அணி முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது. ஷகிப் அல்-ஹசன் 34 ரன்களுடனும், அபிப் ஹூசைன் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். வங்காளதேச வீரர் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 246 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 196 ரன்களில் ஆல் அவுட்டானது.

    சட்டோகிராம்:

    வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. ஒருநாள் தொடரின் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 48.5 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷகிப் அல் ஹசன் 75 ரன், முஷ்பிகுர் ரஹீம் 70 ரன், ஷாண்டோ 53 ரன்கள் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 247 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 43.1 ஓவரில் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 38 ரன்னும், பிலிப் சால் 35 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 34 ரன்னும் எடுத்தனர்.

    இதன்மூலம் வங்காளதேச அணி 50 ரன் வித்தியாசத்தில் வென்று ஆறுதல் வெற்றியை தேடிக்கொண்டது.

    வங்காளதேச அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டும், தைஜூல் இஸ்லாம், எபடாட் ஹோசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இப்போட்டியில் தோற்றாலும் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.

    ×