என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன் ரஷியா போர்"

    • உக்ரைனுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு அதிபர் புதின் ஒப்புதல்.
    • இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

    சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உக்ரைனுடனான போர் நிறுத்தத்துக்கு அதிபர் புதின் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

    அப்போது பேசிய அதிபர் புதின், இந்தப் போர் நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும். இந்த பிரச்சனையின் மூல காரணங்கள் நீக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நடுவே உக்ரைன், ரஷியா பரஸ்பரம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளன.

    ரஷியாவின் வோல்கொகர்ட், வரோன்சி, பெல்ஹொரொட், ரோஸ்டவ், கர்ஸ்க் உள்ளிட்ட பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. 126 டிரோன்கள் ஏவப்பட்ட நிலையில் இவை அனைத்தும் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

    அதேபோல், உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. 178 டிரோன்கள் ஏவப்பட்ட நிலையில் இவற்றில் பெரும்பாலானவை நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைனும் தெரிவித்துள்ளது.

    • ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது.
    • ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கடந்த மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    பெர்லின்:

    ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. சமீப ஆண்டுகளாக ஜெர்மனியுடன் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய அளவில் வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ளும் நாடாகவும் சீனா இருந்து வருகிறது.

    ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கடந்த மாத இறுதியில் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில், பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.

    ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஜெர்மனி திகழ்கிறது என்று பிரதமர் மோடி பேசும்போது குறிப்பிட்டார். இந்தப் பயணத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளேன். இந்த முக்கிய விஷயத்தில் தனிப்பட்ட முறையில் நானே செயல்படுவேன் என அதிபர் ஸ்கால்ஸ் கூறினார். இதன்பின், நாடு திரும்பிய அவர் இரு தினங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். இதில், வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபர் பைடனை நேரில் சந்தித்துப் பேசினார்.

    சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகள், ரஷியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்க கூடும். ஆனால், அதில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்ட ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் நடந்து வரும் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதங்களை சீனா வழங்கினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஆனால், சீனா அப்படி செய்யாமல் அதில் இருந்து விலகி இருக்கும் என்றே நான் நேர்மறையாக எண்ணுகிறேன் என அவர் கூறியுள்ளார்.

    ஒருவேளை ரஷியாவுக்கு ஆயுதங்களை சீனா வழங்கினால் அந்நாடு மீது தடை விதிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதுபோன்று நடக்கக்கூடாது என நாங்கள் தெளிவுப்பட கூறி வருகிறோம். இந்த விவகாரத்தில் எங்களது கோரிக்கை வெற்றி பெறும் என்று நல்ல முறையிலேயே எண்ணுகிறேன். ஆனால், இந்த விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்தி, மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் சீனா அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • வடகொரியா ராணுவம் உக்ரைனில் தாக்குதலை தொடங்கும் வரை காத்துக்கொண்டிருப்பீர்களா?
    • நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை வழங்கவும். அது அவசியமானது.

    உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் இந்த சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தபோது உக்ரைன் தப்பிக்காது என்ற கருத்து இருந்தது.

    ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியால் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக சண்டையிட்டு வருகிறது. இந்த சண்டையில் ரஷியாவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வரும் நிலையில் வடகொரிய ரஷியாவுக்கு ஆதரவாக சண்டையிட 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. இதை ஆதாரத்துடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார்.

    இந்த நிலையில வடகொரிய துருப்புகளுக்கு எதிராக நீண்டு தூரம் சென்று தாக்கும் ஏவுகணை தாக்குதல் அவசியம் என ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் ஆதரவு அளித்து வரும் நாடுகளை, "வடகொரியா ராணுவம் உக்ரைனில் தாக்குதலை தொடங்கும் வரை காத்துக்கொண்டிருப்பீர்களா?" எனக்குற்றம் சாட்டினார். அத்துடன் அதற்குப் பதிலாக நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை வழங்கவும். அது அவசியமானது.

    மேலும், "ரஷியா அதன் எல்லையில் உள்ள முகாம்கள் அனைத்திலும் வட கொரியா வீரர்களை குவித்து வைத்திருப்பதை நாங்கள் காண்கிறோம். நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் இருந்தால், நாம் தடுப்பு நடவடிக்கையாக தாக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
    • உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது.

    மாஸ்கோ:

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.

    உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டிருந்தது.

    உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது.

    இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது. இதனால் தற்போது இருப்பதை விட சர்வதேச அளவில் பதற்றத்தை இந்த நடவடிக்கை இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளார் என கிரெம்ளின் அரண்மனை செய்தி தொடர்பாளர்

    டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மேலும், அதிபர் புதின் இந்தியா வரும் தேதிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது.
    • தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுகிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. ரஷியாவை எதிர்த்து போரிடும் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.

    ரஷியாவுடன் இணைந்து வடகொரிய படைகள் தாக்க உள்ளதால், தொலைதூரத்தில் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசு உக்ரைனுக்கு அனுமதி அளித்தது.

    இதனால் அதிபர் புதின், ரஷிய படைகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளதால் போர் தீவிரமடைந்துள்ளது.

    எந்நேரமும் உக்ரைனில் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், உக்ரைன் வாழ் அமெரிக்கர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களை கடந்து நீடித்து வருகிறது.
    • இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.

    கீவ்:

    ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.

    சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷியா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

    மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார்.

    உக்ரைன் தாக்குதல்களுக்கு பழிவாங்குவதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் சபதம் செய்துள்ளார்.

    இந்நிலையில், உக்ரைன் ராணுவம் நாடு முழுவதும் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளன.

    இதுதொடர்பாக உக்ரைன் ராணுவம் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள செய்தியில், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ரஷியாவின் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகளைக் குறிக்கிறது. தங்குமிடங்களுக்கு விரைந்து செல்லும்படி பொதுமக்களை வலியுறுத்தி உள்ளது. இந்த ராணுவ எச்சரிக்கை உளவுத்துறை மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது என பதிவிட்டுள்ளது.

    உக்ரைன் சக்திவாய்ந்த ஏவுகணைகளைப் பயன்படுத்திய பின், தகுதியான பதிலடி என்ற ரஷியாவின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ஒரே நாளில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
    • கடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பறிக்கப்படாமல் இருந்திருந்தால் உக்ரைன் போர் வந்திருக்காது என்றார் புதின்.

    மாஸ்கோ:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டார். அவர் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.

    உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் டிரம்ப், ஒரே நாளில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், நான் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் ஏற்பட்டிருக்கவே இருக்காது. இந்த அபத்தமான போரை உடனடியாக நிறுத்தவேண்டும். உடனடியாக அதை நிறுத்துவதற்கு ரஷியா முன்வர வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிரம்பின் வெற்றி பறிக்கப்படாமல் இருந்திருந்தால், அப்போது அதிபராக இருந்திருந்தால் 2022-ல் உக்ரைன் போர் வந்திருக்காது. டிரம்ப் புத்திசாலி நபர் மட்டுமல்ல, ஒரு நடைமுறை சார்ந்த நபரும் கூட. அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்த ரஷியா தயாராக உள்ளது என தெரிவித்தார்.

    • ரஷிய அதிபர் புதினுடன் சற்று முன் தொலைபேசி வாயிலாக பேசினேன்.
    • ஆக்கப்பூர்வமாகவும் நீண்ட உரையாடலாகவும் இது இருந்தது என்றார்.

    வாஷிங்டன்:

    ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அமெரிக்கா- ரஷியா சிறைக்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசினர்.

    இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    ரஷிய அதிபர் புதினுடன் சற்று முன் தொலைபேசி வாயிலாக பேசினேன். ஆக்கப்பூர்வமாகவும் நீண்ட உரையாடலாகவும் இது இருந்தது.

    உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு நாடுகள், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, டாலரின் சக்தி என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம்.

    இரு நாடுகளின் பலம் மற்றும் பயன்கள் குறித்தும் இருவரும் உரையாடினோம். உக்ரைன் உடனான போரால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை நிறுத்த வேண்டும் என்பதை இருவரும் முதலில் ஒப்புக்கொண்டுள்ளோம். இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளோம்.

    அமெரிக்காவுக்கு புதினும், ரஷியாவுக்கு நானும் செல்ல ஒப்புக்கொண்டுள்ளோம். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

    ×