search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக மேயர்"

    • மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

    கோவை:

    தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.

    கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

    மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.

    இந்தநிலையில் மேயர் கல்பனா, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், இதுதொடர்பான கடிதத்தை அவர் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் கோவை அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இதற்காக கல்பனா தற்போது சென்னையிலேயே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக கோவை அரசியல் கட்சியினர் மத்தியிலும், தி.மு.க.வினர் மத்தியிலும் இதுவே பேச்சாக உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சியில் நேற்று நடைபெற இருந்த குறைதீர் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். மேயர் வழங்கிய ராஜினாமா கடிதத்தை ஆணையர் ஏற்றுக் கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை நெல்லை ஆணையருக்கு சரவணன் அனுப்பி வைத்துள்ளார்.

    இதையடுத்து மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரை இப்போதே தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இதற்காக பலர் சென்னைக்கு படையெடுத்துச் சென்றுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

    • ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே கமிஷனரிடம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை வழங்கினர்.
    • மேயர், கவுன்சிலர்கள் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 51 பேரும், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 4 பேரும் இருக்கின்றனர்.

    மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த சரவணன் இருந்து வருகிறார். அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து அவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    இதனால் பலமுறை மாநகராட்சி கூட்டங்கள் உள்ளிட்டவற்றை கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் மக்கள் திட்ட பணிகள் நடைபெறாமல் முடங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    மேலும் ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே கமிஷனரிடம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை வழங்கினர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மாநகராட்சிக்கு நேரில் வந்து அனைவரையும் சமாதானப்படுத்தி சென்றனர்.

    ஆனால் அதன் பின்னரும் தொடர்ந்து மேயர், கவுன்சிலர்கள் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


    இந்த கூட்டத்தில் மொத்தம் 10 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மீதமுள்ள கவுன்சிலர்கள் மேயர் சரவணனை கண்டித்து புறக்கணித்தனர்.

    இந்நிலையில் தி.மு.க தலைமையகத்தில் இருந்து மேயர் சரவணனுக்கு அழைப்பு வந்ததன் பேரில் அவர் கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமிட்டு உள்ளார்.

    அவரை அமைச்சர் கே.என். நேரு நேரில் அழைத்து மாநகராட்சி பிரச்சனை குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார். இந்நிலையில் தற்போது மேயர் சரவணன் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமையிடம் வழங்கி விட்டதாக பரவலான தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கட்சி தலைமையால் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், புதிய மேயரையும் கட்சியே அறிவிக்கும் என்றும் தகவல்கள் பரவலாக இருந்து வருகிறது.

    • திருச்சி பிராட்டியூர் குளம் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரும் பணி ரூ.14 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
    • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ. காலனியில் ரூ.15 லட்சம் செலவில் பொதுமக்களே கட்டமைத்த புதிய இறகு பந்து விளையாட்டு மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.

    திருச்சி:

    திருச்சி பிராட்டியூர் குளம் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரும் பணி ரூ.14 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.

    அதன் பின்னர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ. காலனியில் ரூ.15 லட்சம் செலவில் பொதுமக்களே கட்டமைத்த புதிய இறகு பந்து விளையாட்டு மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி என அனைத்து தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு வழங்கியிருக்கும் திட்டங்களை இன்று தொடங்கி வைக்க இருக்கின்றோம்.

    110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இதனை கலெக்டர் முயற்சியால் டால்மியா சிமெண்ட் நிறுவனம் மூலம் தூர்வாரப்பட்டு பொதுமக்கள் நடப்பதற்கு வசதியாக பேவர் பிளாக் பதித்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளது.

    மணிகண்டம் சேதுராப்பட்டி ஊராட்சியில் ரூ.124 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்ட இருக்கிறோம். மொத்தம் 22 நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகிறது. நாளை மறுநாள் பட்டா வழங்க இருக்கின்றோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் நெல்லை மேயரை மாற்ற கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளார்களே என கேட்டதற்கு, ஒவ்வொரு இடத்திலும் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனை பேசித்தான் தீர்க்க வேண்டும். இந்த பிரச்சனைக்கும் தீர்வு கண்டு தானே ஆக வேண்டும். அவர் தி.மு.க. மேயர் அல்லவா என பதில் அளித்தார்.

    ×