search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமச்சந்திரன்"

    • 17 பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்படுவோருக்கு 45 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
    • விருதுகள் சென்னையில் செப்டம்பா் 27-ந்தேதி நடைபெற உள்ள உலக சுற்றுலா தினவிழாவில் வழங்கப்படும்.

    ஊட்டி,

    தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், பயண பங்குதாரா், விமான பங்கு தாரா், தங்குமிடம், உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம்,

    சுற்றுலாவை ஊக்குவிக்கும் சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், சுற்றுலாப் பிரிவுகளின் ஏற்பாட்டாளா், சாகசம் மற்றும் தங்கும் முகாம்களுக்கான சுற்றுலா ஏற்பாட்டாளா், சமூக ஊடகங்களில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்துபவா், சுற்றுலா வழிகாட்டி, தமிழகத்தின் சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் ஆகியவை உள்பட 17 பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்படுவோருக்கு 45 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    அதன்படி 2022-2023-ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் பெற விரும்பு வோர் விண்ணப்பிக்கலாம். இதற்காக அவர்கள் சுற்றுலா இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து வருகிற 15-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    அப்படி அனுப்பப்படும் விண்ணப்பங்கள், விருது குழுவினரால் பரிசீலிக்கப் பட்டு தோ்வு செய்யப்படும் நபா்களின் விவரம் உரிய வா்களுக்கு தெரிவிக்கப்படும்.

    இந்த விருதுகள் சென்னையில் செப்டம்பா் 27-ந்தேதி நடைபெற உள்ள உலக சுற்றுலா தினவிழாவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் ரூ.53.65 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
    • விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை மற்றும் பேரூராட்சித் துறை சாா்பில் அதிகரட்டி பேரூராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேமந்தாடா முதல் பூசானிதுறை வரை ரூ.28.65 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை பணிகள் முடிந்து உள்ளது

    இதேபோல சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் தூரட்டி கிராமத்தில் தாா் சாலை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் ரூ.53.65 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

    இதனைத் தொடா்ந்து, கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட தூரட்டியில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூட சமையலறை மேற்கூரை பணி, 2022-2023 நகா்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.87.50 லட்சம் மதிப்பில் அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டேரி முதல் கேத்தி பாலாடா வரை மற்றும் கோடேரி கிராம தாா் சாலை மேம்பாட்டுப் பணி, தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் ரூ.24.50 லட்சம் மதிப்பில் வளம் மீட்புப் பூங்காவில் கான்கிரீட் தரைத்தளம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி ஆகியவை உள்பட மொத்தம் ரூ.1.22 கோடி மதிப்பில் நடை பெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மேற்கண்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

    முன்னதாக, அதிகரட்டி தோ்வு நிலை பேரூராட்சி வளம் மீட்புப் பூங்காவில் உரம் விற்பனை நிலையத்தை திறந்துவைத்த அமைச்சர், அங்கு உள்ள விவசாயிகளுக்கு உரங்களை வழங்கினார். மரக்கன்றுகளை நடவு செய்தார். ஜெகதளா, உலிக்கல், அதிகரட்டி ஆகிய பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை ஆய்வு செய்த சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன், சிறப்பாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்கள் 4 பேருக்கு உடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.

    இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் குன்னூா் வருவாய் கோட்டாட்சியா் பூஷணகுமாா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) இப்ராகிம் ஷா, கேத்தி மற்றும் அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) நடராஜன், ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலா் சதாசிவம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • நீலகிரி மாவட்டத்திற்கு மழை மிக அவசியம்.
    • நீலகிரியில் தென்மேற்கு பருவமழையால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை.

    ஊட்டி:

    நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.58 லட்சம் செலவில் குன்னூர் தாலுகா பந்துமை முதல் ரேலியா டேம் வரை தார்ச்சாலை, பந்துமையில் ரூ.4 லட்சம் மதிப்பில் வெள்ளத்தடுப்பு சுவர், அருவங்காடு ஒசட்டியில் ரூ.12 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், காரக்கொரையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தரைமட்ட நீர்தேக்கதொட்டியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கூடலூர், ஊட்டி, குந்தாவிலும், வடகிழக்கு பருவமழை கோத்தகிரி, குன்னூரிலும் அதிகமாக பெய்யும்.

    கடந்த வருடம் 239 மி.மீட்டர் மைம், நடப்பாண்டில் 264.2 மி.மீட்டர் மழை இன்று வரை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு மழை மிக அவசியம். கூடலூரில் பெய்து வரும் இந்த மழையால் அந்த பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது.

    தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டதால் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    இதன் ஒருபகுதியாக பேரிடர் மீட்பு குழுவினர் உஷார்படுத்தப்பட்டனர். அனைத்து துறை ஊழியர்களும் தயார்நிலையில் இருந்தனர். இதனால் நீலகிரியில் தென்மேற்கு பருவமழையால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை.

    மழை தொடங்குவதற்கு முன்பாகவே கூடலூர், ஊட்டியில் மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டதால் இந்த பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு எதுவுமில்லை.

    இருந்தபோதிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 12 ஆயிரம் மணல் மூட்டைகளும், தீயணைப்புத்துறை மூலம் பவர்சா கருவிகளும் தயார்நிலையில் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன், கோத்தகிரி தாசில்தார் கோமதி, ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • தொடர்ந்து மழை பெய்ததால் மதியம் வரை மக்கள் சிரமப்பட்டனர்.
    • நேற்றிரவும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய லேசான மழை பெய்தது.

    சென்னை:

    சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    கோயம்பேடு, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், பெரிய மேடு, வேப்பேரி, கிண்டி, வேளச்சேரி, அடையார், ஓ.எம்.ஆர். சாலை, சோழிங்கநல்லூர், கிண்டி, ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி, அம்பத்தூர் உள்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால் மதியம் வரை மக்கள் சிரமப்பட்டனர். மாலையில் தான் தண்ணீர் வடிந்து நிலைமை சரியானது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்ததால் சென்னை மழை பாதிப்பை அங்கிருந்தபடியே கேட்டு அமைச்சர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தார். போர்க்கால அடிப்படையில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

    அதன் அடிப்படையில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் அதிகாரிகளுடன் மழை பாதிப்பு நிலவரங்களை பார்வையிட்டு தேவையான பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்றிரவும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய லேசான மழை பெய்தது. இதனால் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மூத்த அமைச்சர்கள் கண்காணிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர்களை சென்னையிலேயே இருந்து மழை பாதிப்புகளை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    அதன்படி ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று அமைச்சர்கள் மழை பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    • உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
    • நவதிருப்பதி நவகைலாயங்கள் கோவில்களுக்கும் சுற்றுலா வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லையில் கொக்கிரகுளம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட தமிழ்நாடு ஓட்டலை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தமிழ்நாடு முழுவதும் 28 ஓட்டல்களை நடத்தி வருகிறது. நெல்லை நெல்லையப்பர் கோவில், பாபநாசம் கோவில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில், கிருஷ்ணாபுரம் கோவில், திருக்குறுங்குடி கோவில், உவரி கப்பல் மாதா கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    நவதிருப்பதி நவகைலாயங்கள் கோவில்களுக்கும் சுற்றுலா வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புத்தக கண்காட்சியை சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்ச்நதிரன் நேற்று நேரில் பார்வையிட்டார்.
    • தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புத்தக விழாவானது நடத்தப்பட்டு வருகிறது.

    ஊட்டி,

    ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இந்த புத்தக கண்காட்சியை சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்ச்நதிரன் நேற்று நேரில் பார்வையிட்டார். நிகழ்ச் சிக்கு கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதா வது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோ சனைப்படி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து படிக்க ஆர்வம் மற்றும் பழக்கம் வர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புத்தக விழாவானது நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் முதலாவது புத்தக திருவிழா நடந்து வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரும் பசியோடு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் காமராஜர் மதிய உணவு திட்டத்தினை கொண்டு வந்தார். அதன்பின்னர் சத்துணவு திட்டம் போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். வாழ்வில் ஒரு மனிதனுக்கு கல்வி அறிவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். புத்தகம் படிப்பது என்பது மிகவும் அவசியம்.

    அனைத்து வகை புத்தகங்கள் உள்ளன. இதில் அறிவு, கல்வி, தொழில் சார்ந்த புத்தகம் படிப்பது அவசியமாகும். இதில் எதை படிக்கின்றோமோ அதற்கேற்றார் போல நமது அறிவு வளர்வது மட்டு மின்றி தொழிலும் அமையும். எனவே தினமும் புத்தகம் படிக்கும் பழக்கத்தினை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் நம்மிடையே நினைவாற்றல் ஆனது அதிகரிப்பதோடு வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு வர முடியும்.

    எனவே மாணவ- மாணவிகளாகிய நீங்கள் உங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ அதனை எடுத்து படித்து அறிவினை வளர்த்து நாட்டிற்கு ஒரு வழிகாட்டியாக முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×