என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க சுரங்கம்"

    • மர்ம நபர்கள் சிலர் சுரங்க தொழிலாளர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினர்.
    • உயிரிழந்த 9 பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பாங்குய்:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பாம்பாரி நகரில் சீன நிறுவனத்தால் நடத்தப்படும் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்த தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் சுரங்க தொழிலாளர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினர். கண்இமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தில் சுரங்க தொழிலாளர்கள் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உயிரிழந்த 9 பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

    அதே சமயம் இந்த நாச வேலையின் பின்னணியில் ரஷியாவை சேர்ந்த கூலிப்படை உள்ளதாக பாம்பாரி நகர போலீசார் குற்றம் சாட்டினர்.

    இதனிடையே தங்க சுரங்கத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 சீனர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டுமென தனது குடிமக்களை சீன அறிவுறுத்தியுள்ளது.

    • சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
    • விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் கிழக்கே அமைந்துள்ள சின்குவா பகுதியில் உள்ள தங்கசுரங்கத்தில் தொழிலாளர்கள் சிலர் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் தங்கசுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு சுரங்க வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுரங்க தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் படுகாயமடைந்த 3 பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • சோதனை அடிப்படையில் தங்க சுரங்கங்கள் மூலம் மாதத்திற்கு ஒரு கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    • தங்க சுரங்கங்கள் முழுமையான உற்பத்தியை தொடங்கும் போது ஆண்டுக்கு 750 கிலோ எடையுள்ள தங்கத்தை உற்பத்தி செய்யும்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், ஜோனகிரி, எர்ரகுடி, பகதி ராய் உள்ளிட்ட பகுதிகளில் டெக்கான் கோல்ட் மைன்ஸ் என்ற பெயரில் ஜியோ மைசூர் சர்வீஸ் இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் தங்க சுரங்கங்களை அமைத்து வருகிறது.

    இந்த தங்க சுரங்கங்கள் இந்தியாவின் முதல் பெரிய தனியார் தங்க சுரங்கம் ஆகும். அடுத்த ஆண்டு அக்டோபர், நவம்பருக்குள் தங்க சுரங்கங்கள் உற்பத்தியை தொடங்கும் என நிர்வாக இயக்குனர் ஹனுமா பிரசாத் தெரிவித்தார்.

    சோதனை அடிப்படையில் இந்த தங்க சுரங்கங்கள் மூலம் மாதத்திற்கு ஒரு கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தங்க சுரங்கங்கள் முழுமையான உற்பத்தியை தொடங்கும் போது ஆண்டுக்கு 750 கிலோ எடையுள்ள தங்கத்தை உற்பத்தி செய்யும்.

    தங்க சுரங்கங்கள் அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக அந்நிறுவனம் ரூ.200 கோடியை முதலீடு செய்து உள்ளன என தெரிவித்தனர்.

    • அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு நிறுவனங்கள் சுரங்கம் அமைக்க அதிக அளவில் முதலீடு.
    • கடந்த சில வருடங்களாக சுரங்கங்களின் எண்ணிக்கை அதிரிகத்துள்ளதாக தகவல்.

    தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினேம் நாட்டில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    காவல்துறையினர், ராணுவ அதிகாரிகள், மீட்புப்படை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சுரங்கம் சுரினேமின் தெற்கு மாகாணத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் அமைந்துள்ளது. தங்கம் எடுப்பதற்காக அங்குள்ள சிலரால் தோண்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சுரங்கம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

    இதுதொடர்பாக உறுதியற்ற பல விசயங்கள் உள்ளன என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், "சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது முக்கியமானது" என்றும் தெரிவித்துள்ளார்.

    சுரினேம் நாட்டில் தங்க சுரங்கம் அமைக்க அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. கடந்த சில வருடங்களாக சுரங்கம் தோண்டும் பணி அதிகரித்துள்ளது.

    • சட்ட விரோதமாக இயங்கி வந்த திறந்தவெளி தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
    • விபத்து நடந்த தங்கச் சுரங்கத்துக்கு ஆற்றில் படகில் ஒரு மணி நேரம் பயணம் செய்த பிறகே செல்ல முடியும்.

    கராகஸ்:

    வெனிசுலா நாட்டில் சட்ட விரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அங்கோஸ்டுரா நகராட்சியில் புல்லா லோகா என்ற இடத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த திறந்தவெளி தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது தங்கச் சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்தது. அதில் பல தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். விபத்து நடந்த தங்கச் சுரங்கத்துக்கு ஆற்றில் படகில் ஒரு மணி நேரம் பயணம் செய்த பிறகே செல்ல முடியும். இதனால் மீட்புக் குழுவினர் உடனடியாக செல்ல முடியவில்லை. பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    தங்கச் சுரங்கத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்து இருந்தனர்.அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்னும் சிலர் தங்கச் சுரங்கங்களில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

    வெனிசுலாவில் கடந்த 2016-ம் ஆண்டு,புதிய வருவாய் திட்டமாக, நாட்டின் நடுப்பகுதி முழுவதும் ஒரு பெரிய சுரங்க மேம்பாட்டு மண்டலத்தை அந்நாட்டு அரசாங்கம் நிறுவியது. இதையடுத்து தங்கம், வைரங்கள், தாமிரம் மற்றும் பிற கனிமங்களுக்கான சுரங்க நடவடிக்கைகள் தொடங்கின.மேலும் அந்த மண்டலத்திற்கு வெளியே சட்டவிரோத சுரங்கங்கள் பெருகின என்பது குறிப்பிடத்தக்கது.

    • தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக தொழிலாளர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    • அவர்களை வெளியே கொண்டு வருவதற்கு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    தென்ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கங்கள் அதிக அளவில் உள்ளன. தங்கம் வெட்டி எடுத்தபின் இந்த சுரங்கங்கள் கைவிடப்படும். அவ்வாறு கைவிடப்பட்ட சுரங்கங்கள் ஏராளமானவை உள்ளன. அதில் ஜோகன்னஸ்பர்க்கின் தென்மேற்கு பகுதியில் உள்ள மிகவும் ஆழமான பஃப்பெல்போன்டீன் தங்க சுரங்கமும் என்று. இந்த சுரங்கம் சுமார் 2.5 கிலோ மீட்டர் ஆழம் கொண்டது.

    இந்த சுரங்கத்தில் சட்டவிரோதமாக சுரங்க தொழிலாளர்கள் தங்கம் இருக்கிறதா? என தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். இவர்களில் பலர் தாங்களாகவே வெளியே ஏறினர். பலர் சுரங்கத்திலேயே தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

    சுரங்கத்தில் தங்கியிருந்தவர்களை குற்றவாளி என போலீசார் அறிவித்தனர். இதனால் வெளியேறிவர்களை கைது செய்து வந்தனர். இதனால் கைதுக்கு பயந்து உள்ளேயே இருந்ததாக கூறப்படுகிறது.

    அவர்கள் வெளியேறுவதற்காக சுரங்கத்திற்குள் உணவு பொருட்கள் அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் போலீசார் இன்று சுரங்கத்திற்குள் உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இறந்து போன 78 பேர் உடல்களை சுரங்கத்தில் இருந்து மீட்டனர். ஏற்கனவே 9 உடல்கள் மீட்கப்பட்டிருந்தது. இதனால் 87 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

    போலீசார் தரப்பில் மீட்புப்பணி முழுமையாக முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது. சுரங்கத்தில் யாரும் இல்லை என நம்பப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அதேவேளையில் சுரங்கத் தொழிலாளர்கள் சார்பில், போலீசார் உணவு பொருட்கள் செல்வதை நிறுத்தியதால் உள்ளே இருந்தவர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    ×