என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பட்டாசு குடோன்"
- ராஜமாணிக்கம் (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழிந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல மற்றும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூர் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (16.5.2024) மாலை சுமார் 5.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அதிகாலை நேரம் என்பதாலும் ஊருக்கு சற்று ஒதுக்கு புறம் பட்டாசு குடோன் இருந்ததாலும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.
- வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பென்னாகரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் லட்சுமணன் (வயது 50). இவர் எம்.கே.நகரில் பேரூராட்சி வளமீட்பு பூங்கா அருகில் தனக்கு சொந்தமான நிலத்தில் சிறிய அளவிலான பட்டாசு குடோன் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் இந்த பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது.
இது குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக விரைந்து வந்த நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான மூத்த தீயணைப்பு அலுவலர் நரசிம்மன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர்.
இந்த வெடி விபத்தில் பட்டாசு குடோன் தரை மட்டமானது. அதிகாலை நேரம் என்பதாலும் ஊருக்கு சற்று ஒதுக்கு புறம் பட்டாசு குடோன் இருந்ததாலும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.
வெடி விபத்து குறித்து தகவலறிந்து வந்த பென்னாகரம் டி. எஸ்.பி மகாலெட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் மகாலிங்க மூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் வெடிவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் சமீப காலமாக பட்டாசு குடோன் செயல்படாமல் இருந்துள்ளது என்பதும், இந்த குடோனில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு போலீசாரால் கைப்பற்றபட்ட வெடி பொருட்கள் குறித்தான வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பென்னாகரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வெடிவிபத்து நடந்ததால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.
- ஆய்வு செய்துகொண்டிருந்தபோது பட்டாசு வெடித்து 3 அதிகாரிகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
- படுகாயம் அடைந்த அதிகாரிகள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பட்டாசு குடோனை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர். ஆய்வு செய்துகொண்டிருந்தபோது பட்டாசு வெடித்து 3 அதிகாரிகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
நிலவரி திட்ட டி.ஆர்.ஓ மற்றும் தாசில்தார், தேன்கனிக்கோட்டை தாசில்தார், குடோன் மேனேஜர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த அதிகாரிகள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- வெடிவிபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து தருமபுரி மாவட்ட தடயவியல் நிபுணர்கள் நேற்று தடயங்களை சேகரித்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று திடீரென்று வெடிவிபத்து நடந்து 9 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தால் 15 பேர் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், வெடிவிபத்தால், பட்டாசு குடோனை சுற்றி இருந்த 5 கட்டிடங்கள் இடிந்து சேதமானது. இதேபோல் அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், சுவர் உடைந்து சேதமானது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரிகள் பழையபேட்டை பகுதியில் விபத்த இடத்தில் சுற்றியுள்ள குடியிருப்பு வீடுகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வெடிவிபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிவிபத்தில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு இன்று அமைச்சர் சக்கரபாணி அரசு அறிவித்த நிதிஉதவிக்கான காசோலையை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நடந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து தருமபுரி மாவட்ட தடயவியல் நிபுணர்கள் நேற்று தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து ஆய்வறிக்கை இன்று அவர்கள் தாக்கல் செய்தனர். அதில் இந்த வெடிவிபத்துக்கு ஒட்டலில் உள்ள சிலிண்டர் வெடித்ததால் தான் அருகில் இருந்த பட்டாசு குடோன் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெடிபொருட்கள் உரசியதில் திடீரென பட்டாசு வெடித்து குடோனில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், வரதைய்ய பாலம் மண்டலம், குவ்வகுளி பகுதியில் கல்யாண் குமார் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
பட்டாசு தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் அருகில் உள்ள குடோனில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெடிபொருட்கள் உரசியதில் திடீரென பட்டாசு வெடித்து குடோனில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது.
இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பூமி அதிர்ந்தது. வெடி விபத்தில் வீடுகள் குலுங்கின.
அப்போது பட்டாசு சேமிப்பு கிடங்கில் வேலை செய்து கொண்டிருந்த சாது நாகேந்திரா (வயது 31), எல்லக்கட்டாவை சேர்ந்த சங்கரய்யா (30), ஏழுமலை (45) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மற்றொரு தொழிலாளி வீரராகவ் மற்றும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கல்யாண் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தொழிலாளர்களின் உடல் பாகங்கள் அங்குள்ள மரக்கிளைகளில் தொங்கியது. இது வெடி விபத்தின் கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்தியது.
விபத்தில் காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு திருப்பதி உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்தில் பலியானவர்களின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்க அனுமதி இல்லை. பட்டாசு சேமித்து வைக்க மட்டுமே அனுமதி உள்ளது. பட்டாசு சேமிப்பு தொடங்கியதற்கான உரிமம் ஏற்கனவே காலாவதியாகி விட்டது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யாமலேயே பட்டாசு தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
அடிக்கடி பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்வதில்லை எனவும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர்.
பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
- அவர்களின் நிலை என்ன? என தெரியவில்லை.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இன்று மதியம் வைரம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
அந்தப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டிருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசு விபத்து நடந்த குடோனில் 2 பேர் சிக்கியிருப்பதாக தெரிகிறது. அவர்களின் நிலை என்ன? என தெரியவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்