search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணியர் நிழற்குடை"

    • உடனடியாக அமைக்கப்படு மென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு உறுதியளித்தனர்.
    • பண்ருட்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகேயுள்ள சேமக்கோட்டையில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அங்கிருந்த பஸ் நிறுத்த நிழற்குடை அகற்றப்பட்டது. இதனை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அமைக்கப்படு மென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு உறுதியளித்தனர். இருந்த போதும், சேமக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட வில்லை.

    இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பண்ருட்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தேவராஜ் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சேமக்கோட்டையில் விரைவில் பயணியர் நிழற்குடை கட்டித் தரபடுமென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
    • காளிமுத்து, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நெல்மடூர் கிராமத்தில் எம்.எல்.ஏ. நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதீப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ், பரமக்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு, கிளைச் செயலாளர் முருகவேல், காளிமுத்து, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மர்மநபர்கள், இரும்பு சேர்கள், எவர்சில்வர் பைப்புகளை ஆக்‌ஷா பிளேடு, சுத்தியல் கொண்டு உடைத்து அறுத்து திருடிச் சென்றுள்ளனர்.
    • திருடிச் சென்ற சேர் மற்றும் எவர் சில்வர் பைப்புகளின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு பஸ் நிறுத்தத்தில் ரவிக்குமார் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் 5 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்ட இந்த நிழற்குடை முழுக்க முழுக்க இரும்பு மற்றும் எவர் சில்வர் பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டது. இங்கு பயணிகள் அமர்வதற்கான சேர்கள் இரும்பு மற்றும் எவர்சில்வரால் அமைக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில் நேற்று இரவு முதல் மடப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் லேசான சாரல் மழை பெய்து வந்தது. இதனை தங்களுக்கு சாதக மாக பயன்படுத்திய சில மர்மநபர்கள், பயணியர் நிழற்குடையில் இருந்த இரும்பு சேர்கள், எவர்சில்வர் பைப்புகளை ஆக்ஷா பிளேடு, சுத்தியல் கொண்டு உடைத்து அறுத்து திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை வழக்கம் போல அங்கு வந்த பொதுமக்கள் பயணியர் நிழற்குடையில் சேர்கள் காணமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மடப்பட்டு ஊராட்சி தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஊராட்சி தலைவர் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 


    புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பயணியர் நிழற்குடையில் இருந்த மர்ம நபர்கள் திருடிச் சென்ற சேர் மற்றும் எவர் சில்வர் பைப்புகளின் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும், மடப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடைகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். குடியிருப்பு கள் அதிகம் உள்ள பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸ் துறை சார்பில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்தாலே, குற்றச் சம்பவங்களில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கைது செய்யமுடியுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்குமா என பொது மக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.

    • இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கின்றன.
    • பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் இருந்து வந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்திலிருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது சாலையின் இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைத்தும், ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றியும் அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கடலூர் மஞ்சகுப்பம் ஆல்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக 43 வீடுகள் இடிப்பதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு தலைமையில் பல ஆண்டுகளாக வசித்து வந்த வீடுகளை இடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு மாற்று இடம் வழங்கினால் நாங்கள் உடனடியாக இடத்தை காலி செய்வதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் 43 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் இருந்து வந்த பயணிகள் நிழற்குடை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் முழுவதுமாக இடிக்கப்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து விடிய விடிய காத்திருந்தனர். மேலும் ஏதேனும் வீடுகள் இடிக்கப்பட உள்ளதா? என பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    தற்போது முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

    மேலும் 43 வீடுகளை சேர்ந்த பொதுமக்கள், எங்கள் வீடுகளை இடிக்க வேண்டுமானால் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது போல் எங்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகு எங்கள் வீடுகளை இடிப்பதற்கு அனுமதிப்போம். இதற்கான நடவடிக்கை காலதாமதம் ஆனால் தமிழ்நாடு முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். ஆகையால் மாவட்ட நிர்வாகம் எங்களது அடிப்படை கோரிக்கையான மாற்று குடியிருப்பை உடனடியாக அதற்கான சான்று வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. ஆய்வு
    • ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது

    செய்யாறு:

    செய்யாறு ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அருகில் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிழற்குடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆற்காடு சாலையில் கல்லூரி அருகில் நிழற்குடம் கட்ட இடத்தை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெ.கே. சீனிவாசன், ஞானவேல் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×