என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாம்பு கடித்து பலி"
- பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே பார்கவி இறந்து விட்டதாக கூறினர்.
- பாம்பு கடித்து இளம் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு ஊராட்சி, மேட்டு தெருவில் வசித்து வருபவர் வாசுதேவன் விவசாயி ஆவார். இவரது மகள் பார்கவி (வயது23) நர்சிங் கோர்ஸ் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். விடியற்காலை 2 மணி அளவில் பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. இதனால் அலறி துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே பார்கவி இறந்து விட்டதாக கூறினர்.
இந்தச் சம்பவம் குறித்து வாசுதேவன் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக இறந்தது.
- ஜீப் வடிவிலான ஆம்புலன்சு ஏற்பாடு செய்யப்பட்டு, தினமும் மலை கிராமத்திற்கு சென்று வர உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலை, அத்திமரத்துகொல்லை கிராமத்தை சேர்ந்த விஜி-பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை கடந்த 27-ந் தேதி பாம்பு கடித்தது.
முறையான சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக இறந்தது.
இந்த சம்பவம் எதிரொலியாக தமிழக அல்லேரி மலைக்கு ஆம்புலன்சை உடனடியாக வழங்க முதலமைச்சர் கலெக்டருக்கு உத்தரவிட்டார். அதன்படி அல்லேரி மலை கிராமத்திற்கு சென்று வரும் வகையில் ஜீப் வடிவிலான ஆம்புலன்சு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து அல்லேரி மலைக்கு ஜீப் வடிவிலான ஆம்புலன்சை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-
அல்லேரி மலை வாழ் மக்களுக்கு எளிதில் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், ஆம்புலன்சு சேவை தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி ஜீப் வடிவிலான ஆம்புலன்சு ஏற்பாடு செய்யப்பட்டு, தினமும் மலை கிராமத்திற்கு சென்று வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆம்புலன்சு மூலம் அல்லேரி மலையில் உள்ளவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் கீழே அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இதன்மூலம் உயிரிழப்புகள் போன்ற அசம்பாவிதம் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஷம் உடல் முழுவதும் பரவியதால் இறந்தது
- சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் கோரிக்கை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி விஜி.
இவரது மனைவி பிரியா இவர்களின் மகள் தனுஷ்கா (வயது 1½) குழந்தை நேற்று இரவு வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.
இரவு நேரம் என்பதால் அருகே இருந்த காட்டுப்பகுதியில் இருந்து பாம்பு ஒன்று ஊர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது.
இதனைப் பார்க்காத குழந்தை அருகே சென்ற உடன் பாம்பு குழந்தையை கடித்தது.
குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அவரை பாம்பு கடித்ததை பார்த்துள்ளனர்.
உடனடியாக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். சாலை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரம் ஆகியுள்ளது. அப்போது விஷம் உடல் முழுவதும் பரவி குழந்தை செல்லும் வழியிலேயே இறந்தது.
எனவே சாலை வசதி இல்லாத காரணத்தால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் குழந்தை இறந்து விட்டதாக பெற்றோர் கூறினர்.
மேலும் தகவலறிந்த அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைக்குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உடனடியாக அல்லேரி, அத்திமரத்து கொல்லை மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தாய்க்கு தீவிர சிகிச்சை
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த சிக்கனாங் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் விவசாயி. இவரது மனைவி தவமணி (வயது 40). இவர்களது மகன் ஹரிஹரன் (17).
நேற்று இரவு ஹரிகரனும், தவமணியும் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர். அப்போது அதிகாலை வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு இருவரையும் கடித்துள்ளது. இதில் வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறி துடித்தனர்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே ஹரிகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தவமணி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று ஹரிஹரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்