search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்1பி விசா"

    • எச்-1பி விசாவை புதுப்பிக்க வெளிநாட்டினருக்கு சிரமம் இருந்து வருகிறது
    • புது நடைமுறையில் இந்தியர்கள் பெருமளவில் பயன்பெறுவார்கள்

    அமெரிக்காவில் ஹெச்-1பி (H1B) எனப்படும் விசாவை புதுப்பிக்க வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்கள், அந்நாட்டை விட்டு வெளியே சென்றுதான் புதுப்பிக்க வேண்டியுள்ளது. 2004-ல் இருந்து இது நடைமுறையில் உள்ளது.

    ஹெச்-1பி விசா எனப்படுவது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டு பணியாளர்களை (இந்தியா உட்பட), பிரத்யேக திறமை தேவைப்படும் ஒருசில பதவிகளில் பணியில் அமர்த்தி கொள்ள அமெரிக்கா வழங்கும் ஒரு குறுகிய கால அனுமதியாகும். ஆனால், இது குடியுரிமைக்கான அனுமதி அல்ல.

    எனவே ஒவ்வொரு 3 ஆண்டு-கால முடிவிலும் இந்த விசாவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக பயனாளர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் புதுப்பிக்கப்பட்ட தேதியை "ஸ்டாம்பிங்" (stamping) செய்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள நடைமுறையில் இந்த "ஸ்டாம்பிங்" பதிவை அமெரிக்காவிற்குள்ளேயே செய்து கொள்ள அந்நாடு அனுமதிப்பதில்லை.

    இதனால் பயனாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று புதுப்பித்து அதன் பிறகே மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முடிந்தது. இந்த பயணங்களினால் பயனாளர்களுக்கு நேர விரையமும், பொருட்செலவும் ஏற்பட்டு வந்தது.

    இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள பல்லாயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் குறிப்பாக மென்பொருள் துறையை சேர்ந்தவர்கள் அவ்வப்போது முறையிட்டு வந்தனர்.

    அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், விசா புதுப்பிக்கும் முறையில் ஒரு பெரிய மாற்றத்திற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன்படி, இனி இந்தியர்களும், மற்ற வெளிநாட்டவர்களும் அமெரிக்காவிற்குள்ளேயே தங்கள் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற வகையில் ஒரு மாற்றம் கொண்டு வரவிருப்பதாகவும், அதனை குறித்து அறிவிப்பு இந்த வாரம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

    எனினும், இத்திட்டம் உடனடியாக நாடு முழுவதும் கொண்டு வரப்படாமல், "பைலட் பிராஜக்ட் முறை" எனப்படும் சிறிய அளவில் முதலில் ஒரு சில பயனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு, அதில் உள்ள குறைகள் கண்டறிந்து சரி செய்யப்பட்டதும், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.

    அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இந்த செய்தி வெளியாகியுள்ளது.

    • ஒட்டுமொத்தமாக 2022-ம் நிதியாண்டில் எச்-1பி விசா வழங்கப்படும் எண்ணிக்கை 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • பல ஆண்டுகளாக 70 சதவீதத்துக்கு அதிகமாக எச்-1பி விசாக்களை இந்தியர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியர்கள் அதிக அளவு பயன் அடைந்து வருகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் பலர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்கிறார்கள்.

    இதற்கிடையே அமெரிக்காவில் 2022-ம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை மூலம் 4.41 லட்சம் எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 791 விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது 72.6 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக சீனாவை சேர்ந்த 55 ஆயிரத்து 38 பேரும் (12.5 சதவீதம்), கனடாவை சேர்ந்த 4 ஆயிரத்து 235 பேரும் (ஒரு சதவீதம்) எச்-1பி விசா பெற்றுள்ளனர்.

    இதில் ஆரம்ப வேலைக்கான எச்-1பி விசாக்கள் மற்றும் விசா நீட்டிப்புகள் ஆகியவை அடங்கும். ஒட்டுமொத்தமாக 2022-ம் நிதியாண்டில் எச்-1பி விசா வழங்கப்படும் எண்ணிக்கை 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

    2021-ம் நிதியாண்டில் 3.01 லட்சம் இந்தியர்கள் எச்.1பி விசா பெற்றனர். கடந்த நிதியாண்டில் 3.20 லட்சம் பேர் விசாக்கள் பெற்றுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்கள்.

    பல ஆண்டுகளாக 70 சதவீதத்துக்கு அதிகமாக எச்-1பி விசாக்களை இந்தியர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு ஆண்டு இந்தியர்கள் எச்-1பி விசா பெறுவது உயர்ந்தபடி இருக்கிறது.

    அதேவேளையில் சீனர்கள் எச்-1பி பெறுவது 0.1 சதவீதம் மட்டுமே அதிகரித்து இருக்கிறது.

    • வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகிறது.
    • எச்1பி வகை விசாவை வழங்கும் முறையை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள திறமை வாய்ந்த பணியாளர்களை  வேலையில் அமர்த்த இந்த விசாவையே அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிதும் நம்பியுள்ளன. இந்த விசாவை வாங்கிய 6 ஆண்டுகள் கழித்து நிரந்தர குடியுரிமை அல்லது கிரீன் கார்டு பெற முடியும் என்பதால் இதற்கு எப்பொழுதுமே மவுசு அதிகம்.

    இந்த நிலையில் எச்1பி விசா வழங்குவதில் சில நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அரசாங்கத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.

    எனவே இந்த எச்1பி வகை விசாவை வழங்கும் முறையை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த எச்1பி விசாக்கள் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு இதனை நீட்டிக்கலாம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

    • ஒபாமா ஆட்சி காலத்தில் எச்1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணைவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது.
    • அனுமதியை எதிர்த்து சேவ் ஜாப்ஸ் அமெரிக்க அமைப்பு, மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    அமெரிக்காவில் எச்1பி விசா மூலம் வெளிநாட்டினர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவார்கள். இதற்கிடையே ஒபாமா ஆட்சி காலத்தில், எச்1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணைவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியை எதிர்த்து சேவ் ஜாப்ஸ் அமெரிக்க அமைப்பு, மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணைகள் முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    அந்த அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, எச்1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணைவர்கள் அமெரிக்காவில் பணிபுரியலாம் என்று தீர்ப்பளித்தார். நீதிபதி தனது உத்தரவில், "சேவ் ஜாப்ஸ் அமைப்பின் முதன்மை வாதமாக எச்1பி விசா வைத்திருப்பவர்கள் போன்ற வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கியிருக்கும் போது பணிபுரிய அனுமதிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு பாராளுமன்றம் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்தது. ஆனால் குடியேற்றம் மற்றும் குடியுரிமை சட்டத்தின் உரை, வெளிப்படையாக மற்றும் மறைமுகமாக பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்குள் செல்கிறது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு பாராளுமன்றம் வெளிப்படையாக தெரிந்தே அதிகாரம் அளித்துள்ளது" என்று கூறினார்.

    ×