search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாட்டு பயிற்சி"

    • தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
    • தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து இப்பயிற்சியை நடத்த உள்ளது.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திறன்மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து இப்பயிற்சியை நடத்த உள்ளது.

    இலவசம்

    பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வித் தகுதி 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மற்றும் ஐடிஐ படித்தவர்களாக இருக்கலாம். வயது 18-ல் இருந்து 40-க்குள் இருத்தல் வேண்டும்.

    இதில் கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் உள்ளிட்ட தொழில்களுக்கு கட்டணம் இன்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

    சான்றிதழ்

    ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியானது, தையூரில் அமைய உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறும் தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

    வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து, 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும். பயிற்சியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும்.

    பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் திறன் மேம்பாடடு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சிகள் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் தொடங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு ஏற்காடு மெயின் ரோடு, கோரிமேடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.  

    • ஐ.டி.ஐ.-க்களில் படித்து வரும் மாணவர்களுக்கு வளாக பயிற்சி மற்றும் பயிற்றுநர்களுக்கான பயிற்சி வழங்க வேண்டும்.
    • இளைஞர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்கி, தங்கள் நிறுவனங்களுக்கு ஏற்ற திறன் பெற்ற பணியாளர்களை தயார்படுத்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 3 பொறியியல் மற்றும் 15 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட திறன் பயிற்சி துறை சார்பாக மாவட்ட திறன் குழுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கிடும் விதமாக வேளாண்மை, எலக்ட்ரானிக்ஸ் ஹார்வேர், ஆட்டோமோடிவ், உணவு பொருட்கள் தயாரிப்பு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 24 துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கிடும் விதமாக ரூ.15 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை மாவட்ட திறன் குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மாவட்டத்தில் நான் முதல்வன் திட்தட்தின் கீழ் 3 பொறியியல் கல்லூரிகள் 15 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள், ஐ.டி.ஐ.-க்களில் படித்து வரும் மாணவர்களுக்கு வளாக பயிற்சி மற்றும் பயிற்றுநர்களுக்கான பயிற்சி வழங்க வேண்டும்.

    மேலும், வளர்ந்து வரும் தொழிற்நுட்பங்களுக்கேற்ப அதிக வேலைவாய்ப்பு மிகுந்த துறைகளில் இளைஞர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்கி, தங்கள் நிறுவனங்களுக்கு ஏற்ற திறன் பெற்ற பணியாளர்களை தயார்படுத்த வேண்டும்.

    ஓசூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நவீன தொழிற்நுட்பத்திற்கு ஏற்ற நீண்ட கால மற்றும் குறுகிய கால திறன் பயிற்சிகள் வழங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், தொழிற் நிறுவனங்கள் தொழிற் பழகுநர் பயிற்சி சட்டத்தை அமுல்படுத்தி, தொழில் பழகுநர் பயிற்சி இளைஞர்களுக்கு அதிக அளவில் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில், உதவி இயக்குனர் (திறன் மேம்பாடு) பன்னீர்செல்வம், ஓசூர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் ஜெகநாதன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×