என் மலர்
நீங்கள் தேடியது "கோவில் தேர் திருவிழா"
- தினமும் அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்று வந்தது.
- பாவாடைராயன் நிஷாசனி மற்றும் வல்லாளராயன் கோட்டை எழுத்தில் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந் தேதி இரவு காளி முகம் ஏந்துதல், முத்து பல்லக்குடன் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி மற்றும் மேடை நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தேர் திருவிழா நடைபெற்றது. அம்மன் சன்னதியில் இருந்து புறப்பட்ட தேர் ஊர்வலமாக சென்று மயானத்தை சென்றடைந்தது அங்கு பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த கடலை, பலா, மா, போன்ற விவசாய பொருட்களை கொள்ளை விட்டனர். தொடர்ந்து பாவாடைராயன் நிஷாசனி மற்றும் வல்லாளராயன் கோட்டை எழுத்தில் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
- வெங்கடேஷ்வரா சுவாமியை வீதி வீதியாக மக்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தேர் இழுத்து சென்றனர்.
- 5000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா காமன்தொட்டி ஊராட்சியை சேர்ந்த கோபசந்திரம் கிராமத்தில் தென்பன்ணை ஆற்றுகறையோரம் அமைந்த 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் திருவிழா நடை பெற்றது.
இதனையொட்டி 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகள், பல்லக்குகள், நாடகம், அன்னதானம் என பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது.
பல நாட்களாக வாசனை நிறைந்த வண்ண பூக்களால் அலங்கரிக்கபட்ட வெங்கடேஷ்வரா சுவாமியை வீதி வீதியாக மக்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தேர் இழுத்து சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஆந்திரா, கர்நாடகா, மற்றும் தமிழக பகுதியில் கோபந்திரம், ஒசூர், காமன்தொட்டி, பாத்த கோட்டா, அகரம், தொரப்பள்ளி, பேரண்ட ப்பள்ளி, உத்தன ப்பள்ளி, பீர் ேஜப்பள்ளி, 5000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கோவில் நிர்வா கிகள், தொழில் அதிபர்கள், நாராயண சுவாமி, ராமமூர்த்தி, ேகாபால் மற்றும் முனிராஜ், பி, டி, ஒ, விமல் ரவிக்குமார் மற்றும் நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ காமாட்சி அம்மாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது.
தேர் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 25ம் தேதி முதல் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சாமிகள் ஊர்வலம் வந்தன.
இதில் விக்னேஸ்வரர் மூசிக வாகனம், அன்ன வாகனம்,சிம்ம வாகனம்,கற்பக விருட்ச காமதேனு வாகன சேனை,நாக வாகனம் நடந்தது. இதனைத் தொடர்ந்து 31ம் தேதி திருக்கல்யாண ரிஷப வாகனம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று ஏகாம்பரநாதர் திருக்கோயில் சார்பில் தேர் திருவிழா இன்று நடந்தது.தேர்ரானது கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு எம்.பி.டி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் மீண்டும் தேர் இழுக்கப்பட்டு வாலாஜா பேருந்து நிலையம் வழியாக சோளிங்கர் ரோடு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை சென்றடையும்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.இதில் வாலாஜா தன்வந்திரி பீடம் டாக்டர் முரளிதர சாமிகள், சித்தஞ்சி மோகானந்த சாமிகள், நகரமன்ற தலைவர் ஹரிணி, துணை தலைவர் கமலராகவன், தக்கார் சிவக்குமார், ஆய்வாளர் அமுதா, செயல் அலுவலர் திருநாவுக்கரசு,திமுக நகர செயலாளர் தில்லை, அதிமுக நகர செயலாளர் மோகன், காங்கிரஸ் நகர தலைவர் மணி ஊர் நாட்டாண்மை தாரர்கள்,கோவில் நிர்வாகிகள், வியாபாரிகள், நகரமன்ற உறுப்பினர்கள், வாலாஜா நகர பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பக்தர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.
இவனை தொடர்ந்து நாளை குதிரை வாகனம், 3-ம் தேதி அதிகார நந்தி சேனை, ராவணன் வாகனம், விடையாற்றி உற்சவம், 7-ம் தேதி மாவடி சேவை, 10ம் தேதி மஹா அபிஷேகம், இலட்சதீபம் ஆகியவை நடைபெற உள்ளது.