search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் மரணம்"

    • டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது சதீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.
    • சதீஸ்வரன் இறப்புக்கு 2 மணி நேரமாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அலைக்கழித்தது தான் காரணம்.

    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மகன் சதீஸ்வரன் (வயது 37). இவர் சென்னையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

    ஊருக்கு வந்திருந்த சதீஸ்வரன், இன்று காலையில் வீட்டில் டீ குடிக்கும் போது மயங்கி விழுந்தார். உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் அது வராததால், சதீஸ்வரனை ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர். பின்னர் 108 ஆம்புலஸ்சு மூலம் செண்பகராமன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது சதீஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இது அவரது உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் கூறுகையில், 108 ஆம்புலன்சு டிரைவரின் அலட்சியம் தான் சதீஸ்வரன் உயிரை பறித்து விட்டது. அவர் மயங்கியதும் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தோம்.

    ஆனால் வரவில்லை. ஆட்டோவில் சென்ற போது, ஆம்புலன்சை நடுவழியில் பார்த்தோம். அதன் டிரைவர் பரிசோதித்து பார்த்து விட்டு, சதீஸ்வரனுக்கு நாடி துடிப்பு சரியாக இல்லை. வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்றார்.

    அதன்படி வீட்டுக்கு வந்த நிலையில், சதீஸ்வரன் உடலில் அசைவுகள் காணப்பட்டன. எனவே மீண்டும் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அப்போது 108 ஆம்புலன்சு டிரைவர், எங்களை மறித்து சதீஸ்வரனை ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த போதே சதீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    சதீஸ்வரன் இறப்புக்கு 2 மணி நேரமாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அலைக்கழித்தது தான் காரணம். சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருந்தால் அவர் பிழைத்து இருப்பார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள செம்பரக்கல் பகுதியை சேர்ந்தவர் பரீத் (வயது49). இவர் கேரள அரசு போக்குவரத்து கழக தம்பனூர் சென்ட்ரல் பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பஸ்சை ஓட்டிச்சென்றார்.

    கருநாகப்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரீத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்பு நெஞ்சுவலி தாங்க முடியாமல் பஸ்சுக்குள்ளேயே சுருண்டு படுத்தார். இதையடுத்து அவர் கருநாகப்பள்ளி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பின்பு மேல்சிகிச்சைக்காக வந்தனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதும், பரீத் தான் ஓட்டிவந்த பஸ்சை கவனமாக மெதுவாக ஓட்டிச்சென்று ரோட்டோரமாக நிறுத்தி விட்டார். இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்து வந்த 30 பயணிகள் தப்பினர்.

    பயணிகளை காப்பாற்றி விட்டு, தனது உயிரை விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிரைவர் பரீத்தின் மறைவுக்கு கேரள போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • பஸ் நிலைதடுமாறி தாறுமாறாக செல்லவே கண்டக்டர் மற்றும் பயணிகள் கூச்சலிட்டனர்.
    • திடீரென விழித்த போது பஸ் பள்ளத்தில் கவிழ்வது போல் செல்லவே உடனடியாக பஸ்சில் இருந்து தங்கபாண்டியன் கீழே குதித்தார்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள நாயக்கர் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (43). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதுரையில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி அரசு பஸ்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் கண்டக்டராக பழனி செட்டிபட்டியை சேர்ந்த வினோத்குமார் (30) என்பவர் இருந்தார். பஸ் கொண்டமநாயக்கன்பட்டி 8கண் பாலத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தபோது தங்க பாண்டியன் கண் அயர்ந்து விட்டார்.

    அப்போது பஸ் நிலைதடுமாறி தாறுமாறாக செல்லவே கண்டக்டர் மற்றும் பயணிகள் கூச்சலிட்டனர். திடீரென விழித்த போது பஸ் பள்ளத்தில் கவிழ்வது போல் செல்லவே உடனடியாக பஸ்சில் இருந்து தங்கபாண்டியன் கீழே குதித்தார். கட்டுப்பாட்டை இழந்து சென்ற பஸ் அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது.

    இதனால் தங்கபாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்டக்டர் வினோத்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், பஸ் பலத்த சேதமடைந்த நிலையிலும், அதில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசில் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்சா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி இளங்கோவன் உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராசிபுரம்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு 9 மணியளவில் நாமக்கல் செல்லும் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த இளங்கோவன் (49) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் மற்றொரு டிரைவராக சிவக்குமார் என்பவரும் இருந்தார்.

    விழுப்புரம் வரை இளங்கோவன் பஸ்சை ஓட்டி வந்த நிலையில் சோர்வாக இருந்ததால் பஸ்சின் பின் சீட்டில் உறங்க சென்று விட்டார். இதையடுத்து சிவக்குமார் பஸ்சை ஓட்டி சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் சேந்தமங்கலம் பிரிவு அருகே பஸ் வந்தபோது, இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை மீட்டு ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் உயிரிழந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெருமந்தூர் பகுதியில் இயங்கும் அரசு மணல் குவாரியில் மணல் எடுக்க வந்தார். பின்னர் அவர் லாரியின் மேல் தூங்கினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    சென்னை, அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயத48). மணல் லாரி டிரைவர். இவர் திருவள்ளூரை அடுத்த பட்டறை பெருமந்தூர் பகுதியில் இயங்கும் அரசு மணல் குவாரியில் மணல் எடுக்க வந்தார்.

    பின்னர் அவர் லாரியின் மேல் தூங்கினார். இந்த நிலையில் குமார் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×