என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருத்தோலை பவனி"

    • கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு இன்று கடைபிடிக்கப்பட்டது.
    • வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

    இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயம் 'கீழை நாடுகளின் லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது.

    இத்தகைய பல்வேறு சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் புனித பயணமாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

    இதனையொட்டி காலை வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு உன்னதங்களிலே ஒசன்னா என பாடல்கள் பாடியவாறு பவனியாக சென்றனர்.

    பவனியானது பேராலயத்தின் முகப்பில் இருந்து தொடங்கி வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பேராலயத்தின் கீழ்க்கோவிலை அடைந்தது. தொடர்ந்து, பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    மேலும், பேராலயத்தில் கொங்கனி, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்தனையும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

    • காந்தி சிலை, தர்மராஜா கோவில் தெரு வழியாக புனித பாத்திமா அன்னை திருத்தலத்தை வந்தடைந்தது.
    • குருத்தோலை பவனியில், ஏராளமான கி்றிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி ஒசாண்ணா பாடலைப் பாடியபடி பவனி வந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசுநாதரை தங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்ட இஸ்ராயேல் மக்கள், தங்கள் கைகளிலே ஒலிவ மரக்கிளைகளை ஏந்திக்கொண்டு, இயேசுநாதரை கழுதை மீது அமர வைத்து எருசலம் நகரில் பவனி வந்தனர்.

    அப்போது, "உன்னதங்களின் ஒசாண்ணா.. ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசீர் பெற்றவர்" எனும் தூதிப்பாடலை பாடியவாறு நகர் வலம் வந்தனர். இந்த நாளை உலகில் உள்ள கிறிஸ்தவ மக்கள், குருத்தோலை ஞாயிறாக கொண்டாடி வருகின்றனர்.

    இதன் படி இன்று, கிருஷ்ணகிரி - பழையபேட்டையில் அமைந்துள்ள புனித இஞ்ஞியாசியார் ஆலயத்தில் இருந்து குருத்தோலை பவனி தொடங்கி, காந்தி சிலை, தர்மராஜா கோவில் தெரு வழியாக புனித பாத்திமா அன்னை திருத்தலத்தை வந்தடைந்தது.

    இந்த குருத்தோலை பவனியில், ஏராளமான கி்றிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி ஒசாண்ணா பாடலைப் பாடியபடி பவனி வந்தனர். பின்னர், தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதே போல் ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை, கந்திகுப்பம், புஷ்பகிரி, எலத்தகிரி என தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது.

    • கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான குருத்தோலை ஞாயிறு நேற்று கொண்டாடப்பட்டது.
    • சங்ககிரி ஐக்கிய சபைகளின் போதகர்கள் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரியில் கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான குருத்தோலை ஞாயிறு நேற்று கொண்டாடப்பட்டது.

    சங்ககிரி ஐக்கிய சபைகளின் போதகர்கள் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. இதில், புனித அந்தோணியார் பேராலயத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் ஏரா ளமானோர் குருத்தோலைகளை கையில் ஏந்தி, புதிய எடப்பாடி சாலை, பவானி மெயின் ரோடு வழியாக பழைய எடப்பாடி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம் வரை ஊர்வலமாகச் சென்றனர். தொடர்ந்து அனைவரும் பிராத்தனை செய்தனர்.   

    ×