search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் பறித்த கும்பல்"

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி லிப்ட் கேட்டு கைவரிசை
    • சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ரோஸ்மிக்காந்த் (வயது 34). இவர் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தில் அறை எடுத்து தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு ரோஸ்மிக்காந்த் தென்னம்பாளையம் பிரிவில் உள்ள நண்பர் அறைக்கு சென்று மது குடித்தார். பின்னர் அவரது அறைக்கு செல்வதற்காக தென்னம்பாளையம் பிரிவில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி லிப்ட் கேட்டார். அவரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ரோஸ்மிக் காந்தை ஏற்றிச் சென்றார். ஆனால் அந்த வாலிபர் ரோஸ்மிக் காந்த் சொன்ன இடத்தில் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இறங்க முயன்றார்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ரோஸ்மிக் காந்தை மிரட்டி கத்தியை எடுத்து தலை, நெற்றி, மூக்கு, கன்னம் ஆகிய இடங்களில் குத்தினர். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். பின்னர் அவர்கள் ரோஸ்மிக்காந்திடம் ரூ.700 பணத்துடன் இருந்த மணிபர்சை பறித்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்தி விட்டு பணத்தை பறித்து சென்ற 3 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • வாலிபரிடம் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
    • வாலிபரை அடித்து, உதைத்து அவரது செல்போன், பணத்தை பறித்து கொண்டு விரட்டி உள்ளனர்.

    ஈரோடு:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் வேலை தேடி ரெயில் மூலம் சம்பவத்தன்று இரவு ஈரோடு வந்துள்ளார். ஈரோடு ரெயில் நிலையம் நுழைவுப்பகுதிக்கு வந்த அவரிடம் சிலர் பேச்சு கொடுத்துள்ளனர்.

    அந்த கும்பல் அந்த வாலிபரிடம் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர் அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    சிறிது தூரம் சென்றதும் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த வாலிபரை அடித்து, உதைத்து அவரது செல்போன், பணத்தை பறித்து கொண்டு விரட்டி உள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சூரம்பட்டி போலீசார் அந்த வட மாநில வாலிபரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த வாலிபரோ புகார் ஏதும் அளிக்காமல் ரெயில் ஏறி கேரளாவில் உள்ள நண்பரை பார்க்க சென்று விட்டார்.

    • நேற்று இரவு பழனி புறநகர் பகுதியில் மலைக்கோவிலுக்கு பின்புறம் சென்ற போது லாரியை நிறுத்தி விட்டு சென்றபோது மறைந்திருந்த ஒரு கும்பல் கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டனர்.
    • எனவே போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரபடுத்தவும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பழனி:

    திண்டுக்கல்லைச் சேர்ந்த லாரி டிரைவர் ஹரிஹரன் (வயது 25). இவர் எர்ணாகுளத்திற்கு பொருட்களை ஏற்றி சென்று கொண்டு இருந்தார். நேற்று இரவு பழனி புறநகர் பகுதியில் மலைக்கோவிலுக்கு பின்புறம் சென்ற போது லாரியை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்கச் சென்றார். அப்போது மறைந்திருந்த ஒரு கும்பல் ஹரிஹரனை கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிஹரன் தன்னிடம் இருந்த ரூ.2000 பணத்தை கொடுத்தார். இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என சொல்லி விட்டு அக்கும்பல் தப்பி ஓடி விட்டனர். இதனால் ஹரிஹரன் போலீசில் புகார் செய்தால் நேர விரயமாகி விடும் என நினைத்து சென்று விட்டார்.

    பழனிக்கு வரும் வியாபாரிகள், டிரைவர்கள் ஆகியோர் தொடர்ந்து இது போல் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்படுவது அவ்வ ப்போது நடந்து வருகிறது. எனவே போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரபடுத்தியும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×