என் மலர்
நீங்கள் தேடியது "போலீசார் சஸ்பெண்டு"
- போலீஸ்காரர்கள் சகாய பாரத், ஆராக்கிய அருண் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி மரியச் செல்வி. இவர்களது மகன்கள் சகாயபாரத், ஆரோக்கிய அருண், இருதயராஜ்.
இவர்களில் சகாயபாரத் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீசாக பணியாற்றினார். ஆரோக்கிய அருண் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து போலீசாக இருந்தார். இருதயராஜ் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிகம் லாபம் தருவதாக கூறி பொது மக்கள் மற்றும் போலீசாரிடம் பணத்தை வசூல் செய்தனர். இதுவரை சுமார் ரூ.40 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிகிறது.
ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தனர்.
மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.40 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக ஜோசப், அவரது மனைவி மரிய செல்வி, ஆரோக்கிய அருண், அவரது மனைவி மகாலட்சுமி, இருதயராஜ், அவரது மனைவி ஜெயஸ்ரீ, சகாய பாரத் அவரது மனைவி சமியா உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் போலீஸ்காரர்கள் சகாய பாரத், ஆராக்கிய அருண் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்த இருதயராஜ் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
- நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- கைதி தப்பி ஓடிய விவகாரத்தில், போலீஸ்காரர்கள் செல்வகுமார், கேசவன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சேலம்:
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள பாப்பி செட்டிப்பள்ளி ராசன்னப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் இனோ ஆண்ட்ரூஸ் (வயது 41). இவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் ஈமு கோழி மோசடி வழக்கு தொடர்பாக நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் கோவை டான்பிட் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இனோ ஆண்ட்ரூஸ்-க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 கோடியே 60 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து இனோ ஆண்ட்ரூஸ் தலைமறைவானார். இந்த நிலையில் கடந்த வாரம் சேலம் அன்னதானப்பட்டி லாட்ஜ் ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இனோ ஆண்ட்ரூஸ் பதுங்கி இருந்ததை கண்டு பிடித்தனர்.
அவரை பிடித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து கடந்த கடந்த 30-ம் தேதி அவரை குற்றப்பிரிவு போலீசார் செல்வகுமார், கேசவன் ஆகியோர் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அடுத்த நாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி தெரிவித்தார். இதனால் இனோ ஆண்ட்ரூசை, 2 போலீசாரும் தனியார் லாட்ஜிற்கு அழைத்துச் சென்று இரவு அங்கு தங்கினர். அப்போது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போலீஸ்காரர்களை அறையில் விட்டு விட்டு, நைசாக வெளியே வந்த இனோ ஆண்ட்ரூஸ், கதவை வெளிபக்கமாக பூட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.
அதன் பிறகு போலீசார் எழுந்து பார்த்தபோது அறை கதவு வெளிப்பக்கமாக பூட்டி இருந்ததும், இனோ ஆண்ட்ரூஸ் தப்பிச் சென்று விட்டதும் தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.சிவகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் தனிப்படை போலீசார் தப்பி ஓடிய இனோ ஆண்ட்ரூசை தேடி வருகின்றனர்.
இதனிடையே, கைதி தப்பி ஓடிய விவகாரத்தில், போலீஸ்காரர்கள் செல்வகுமார், கேசவன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- பாபு ஷேக் காட்பாடியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார்.
- சித்தேரி ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள செங்கல் சூளை புதரில் பதுங்கி இருந்த பாபு ஷேக்கை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பாபு ஷேக். இவர் காட்பாடியில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தார்.
அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்வதற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் பாபுஷேக் ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிச் ஓடி விட்டார். தப்பிச்சென்ற பாபு ஷேக்கை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வேலூர் அடுத்த சித்தேரி ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள செங்கல் சூளை புதரில் பதுங்கி இருந்த பாபு ஷேக்கை போலீசார் கைது செய்தனர்.
ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பிச் சென்ற சம்பவத்தில் பணியில் கவனக் குறைவாக இருந்ததாக 4 ஆயுதப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.