என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிப்பர் லாரி பறிமுதல்"
- டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்ததில் அர்ஜுனன் அனுமதியின்றி செம்மண் வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது.
- அவரை மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கொட்ட பள்ளனூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது30). இவர் அதே பகுதியில் செம்மண்ணை வெட்டி டிப்பர் லாரியில் கடத்தி சென்றார். அப்போது அவர் திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் செல்லும்போது மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்ததில் அர்ஜுனன் அனுமதியின்றி செம்மண் வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே அவரை மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் அர்ஜூனன் மீது வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரியையும், கடத்தி சென்ற செம்மண்ணையும் பறிமுதல் செய்தனர்.
- பவானி போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.
- டிப்பர் லாரியில் கிராவல் மண் அனுமதியின்றி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.
பவானி:
பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் பவானி சப்-இன்ஸ்பெ க்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொ ண்டனர். அப்போது ஈரோடு மெயின் ரோடு செல்லியாண்டியம்மன் கோவில் ஆர்ச் பகுதியில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்ட னர்.
அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொ ண்டனர். டிப்பர் லாரியில் 3 யூனிட் கிராவல் மண் அனுமதியின்றி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் லாரி டிரைவர் தளவாய்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜை (40) கைது செய்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள அந்தியூரை சேர்ந்த லாரி உரிமையாளர் ரமேஷ் மற்றும் இடத்தின் உரிமை யாளர் பெரியசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- போலீசார் டிப்பர் லாரியையும், நுரம்பு மண்ணையும் பறிமுதல் செய்தனர்.
- சந்தோஷ் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு எட்டிமரத்துப்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி நுரம்பு மண்ணை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் டிப்பர் லாரியையும், நுரம்பு மண்ணையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் லாரியை ஓட்டிவந்த முத்துகவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த டிரைவர் முத்து (வயது26), உடன் வந்த எட்டிமரத்துபட்டியைச் சேர்ந்த சந்தோஷ் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் அங்குள்ள தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அனுமதியின்றி 2 யூனிட் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீசார் திருவண்ணாமலை சாலை பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அங்குள்ள தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி போலீசார் வழிமறித்தபோது திடீரென்று லாரியில் இருந்து டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் லாரியை சோதனை போலீசார் செய்தனர். அதில் அனுமதியின்றி 2 யூனிட் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் அத்திபள்ளியைச் சேர்ந்த லாரி டிரைவர் விக்ணேஷ் வண்டியில் மண் வெட்டி கடத்தியது தெரியவந்தது.
இதைத்ெதாடர்ந்து போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள டிப்பர் லாரி உரிமையாளர் அஜீத்குமார், டிரைவர் விக்ணேஷ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
- தாரமங்கலம் பகுதியில் செம்மண் கடத்துவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில், உரிய சீட்டு இல்லாமல் செம்மண் ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் செம்மண் கடத்துவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சேலம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை தனி தாசில்தார் செல்வகுமார் தலைமையில் தாரமங்கலம்-சங்ககிரி நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில், உரிய சீட்டு இல்லாமல் செம்மண் ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த நங்கவள்ளி எல்லகுட்டையூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 48) மற்றும் அதன் உரிமையாளர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்