search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.4 லட்சம் மோசடி"

    • அப்துல் காதர் (44) இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 தவணைகளாக 91.1/2 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.4லட்சத்து11 ஆயிரத்து 280 பணத்தைப் பெற்றுள்ளார்.
    • நகைகளை சோதித்து பார்த்த போது அனைத்தும் கவரிங் நகை என்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் ஓமலூர் மெயின் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தங்க நகை அடமான நிறுவனத்தில் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர் (44) இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 தவணைகளாக 91.1/2 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.4லட்சத்து11 ஆயிரத்து 280 பணத்தைப் பெற்றுள்ளார்.

    சமீபத்தில் அந்த நகைகளை சோதித்து பார்த்த போது அனைத்தும் கவரிங் நகை என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் மதியழகன் (40) என்பவர் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோசடி செய்த நைஜீரிய வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு கைது செய்தனர்.
    • இவ்வழக்கில் நைஜீரிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    திண்டுக்கல்:

    நிலக்கோட்டை அருகே பள்ளபட்டிைய சேர்ந்தவர் வெங்கடாஜலபதி(45). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனால் வெளிநாட்டில் வேலை குறித்து இணையதளத்தில் தேடினார்.

    அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு லிங்க் வந்தது. அதை பின்பற்றிய வெங்கடா ஜலபதி எதிர்முனையில் பேசிய நபர் கனடாவில் வேலை உள்ளது என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய வெங்கடாஜலபதி அவர் கூறிய வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்து 4 ஆயிரத்தை செலுத்தினார்.

    ஆனால் அதன்பின்னர் வேலை குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும் அந்த நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வெங்கடாஜலபதி திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடாஜலபதியிடம் போனில் பேசியது நைஜீரியாவை சேர்ந்த உச்சண்ணா கிறிஸ்டியன்(45) என தெரியவந்தது.

    ஈேராடு மாவட்டம் பெருந்துறையில் பதுங்கி யிருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் ேஜ.எம்.1 கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா மோசடி செய்த வாலிபர் உச்சண்ணா கிறிஸ்டியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • குமார்-விஜயலட்சுமி தம்பதியினர், இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
    • கால்நடை உதவியாளர் பணிக்கான ஆணையை, ரூ.4 லட்சம் வழங்கினால் நான் வாங்கி தருகிறேன் என்றார். இதனை நம்பி, ஓமலூர் அங்காளம்மன் கோவில் அருகே 4 லட்ச ரூபாயை கொடுத்தோம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த குமார்-விஜயலட்சுமி தம்பதியினர், இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

    அதன்பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த 2015-ம் ஆண்டு எனது மனைவிக்கு கால்நடை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தேன்.

    அப்போது பண்ணப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார், அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரின் அறிமுகத்தில் வேல்முருகன் என்பவர் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலையின் மைத்துனர் எனக்கூறினார்.

    மேலும், நீங்கள் விண்ணப்பித்த கால்நடை உதவியாளர் பணிக்கான ஆணையை, ரூ.4 லட்சம் வழங்கினால் நான் வாங்கி தருகிறேன் என்றார். இதனை நம்பி, ஓமலூர் அங்காளம்மன் கோவில் அருகே 4 லட்ச ரூபாயை கொடுத்தோம். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அரசு வேலை வாங்கித் தரவில்லை. பணமும் திருப்பி தரவில்லை.

    இது குறித்து கேட்டதற்கு பணமும் தர முடியாது வேலையும் வாங்கி தர முடியாது என கூறி, சமூகத்தின் பெயரை கூறி இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் எங்கு புகார் கொடுத்தாலும் உன்னால் ஒன்று செய்ய முடியாது எனவும் தெரிவித்தார். கடனைப் பெற்று, பணத்தை கொடுத்து தவித்து வருகிறோம்.

    கடந்த 8 ஆண்டாக அவரிடம் இருந்து பணத்தை வாங்க முடியவில்லை. இது குறித்து ஓமலூர் போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்.

    அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    ×