search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருபெயர்ச்சி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குரு பார்வை பதியும் இடமெல்லாம் வளம் கொழிக்கும்.
    • வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ந் தேதி புதன்கிழமை அன்று, மாலை 5.21 மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் 2-ம் பாதத்தில் ரிஷப ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார். குரு தன்னுடைய பார்வையால், 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்துவார்.

    இந்த குருப்பெயர்ச்சிக்கு முன்னதாக, குரு சன்னிதியில் கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த குருவானவர், தன்னுடைய பகை கிரகமான சுக்ர வீட்டிற்கு அல்லவா செல்கிறார். அதற்காக நாம் பயப்படவும் தேவை இல்லை. 'குரு பார்க்க கோடி நன்மை' என்றும், குரு சேர்ந்தால் கோடி தோஷம் நிவர்த்தி என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

    எதிரியாக இருந்தாலும் எதிரில் வந்து குரு பார்த்தால், பகை உணர்வு மாறி பாச உணர்வு கூடும். எனவே இந்த குருப்பெயர்ச்சி எல்லோர் வாழ்விலும் எதிர் பாராத மாற்றங்களையும், ஏற்றங்களையும் வழங்கப்போகிறது. குரு பார்வை பதியும் இடமெல்லாம் வளம் கொழிக்கும்.

    இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக, கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய மூன்று ராசிகளையும் குரு நேரடியாக பார்க்கிறார். எனவே அந்தராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும், தொழில் வளம் சிறக்கும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    விரும்பியபடியே காரியம் நடைபெறும். வருமானம் உயரும். வாகன யோகம் வந்து சேரும். செல்வாக்கு மிக்கவர்களாக தேசத்தில் பவனி வரும் வாய்ப்பு உண்டு.

    இவை தவிர, ஜென்ம குருவாக ரிஷபத்திற்கும், அர்த்தாஷ்டம குருவாக கும்பத்திற்கும், அஷ்டமத்து குருவாக துலாத்திற்கும், விரய குருவாக மிதுனத்திற்கும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்களும், வளர்ச்சி பெற நினைப்பவர்களும் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் தசாபுத்தி பலம் பார்த்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட வேண்டியது அவசியம்.

    அவ்வாறு செய்வதால் திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வருமான உயர்வு, வீடு கட்டும் யோகம், வழக்கில் வெற்றி உத்தியோக உயர்வு குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை தக்கவிதத்தில் நடைபெறும்.

    ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் இடையில் வக்ரம் பெறுகிறார். வக்ர காலத்தில் சிலருக்கு வளர்ச்சியும், சிலருக்கு தளர்ச்சியும் ஏற்படும். இதற்கிடையில் 26.4.2025 அன்று ராகு-கேது பெயர்ச்சியும் நிகழ்கிறது. இவற்றைப் பொறுத்தும், சுழலும் மற்ற கிரகங்களின் அமைப்பைப் பொறுத்தும் குருப்பெயர்ச்சி பலன்கள் இப்புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    ரிஷப குருவின் சஞ்சாரம்

    1.5.2024 முதல் 11.6.2024 வரை கார்த்திகை நட்சத்திரக் காலில் குரு பகவான் (சூரியன் சாரம்)

    12.6.2024 முதல் 18.8.2024 வரை ரோகிணி நட்சத்திரக் காலில் குரு பகவான் (சந்திரன் சாரம்)

    19.8.2024 5 7.12.2024 நட்சத்திரக் காலில் குரு பகவான் (செவ்வாய் சாரம்)

    8.12.2024 முதல் 10.2.2025 வரை ரோகிணி நட்சத்திரக் காலில் குரு பகவான் (சந்திரன் சாரம்) வக்ரம்

    11.2.2025 முதல் 4.4.2025 வரை ரோகிணி நட்சத்திரக் காலில் குரு பகவான் (சந்திரன் சாரம்) வக்ர நிவர்த்தி

    5.4.2025 முதல் 11.5.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரக் காலில் குரு பகவான் (செவ்வாய் சாரம்)

    • சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது.
    • குருவுக்கு அதிதேவதை பிரம்மா.

    ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம்.

    பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.

    குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.

    திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.

    சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

    கோவிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.

    முருகன் வணங்கிய சிவன்

    முருகப்பெருமான், அசுரர்களை அழிக்க செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டி சென்றாராம். இதனால் "திருப்படையூர்' எனப்பட்ட தலம் "திருப்பட்டூர்' என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.

    எல்லாமே மஞ்சள் நிறம்

    பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர்.

    பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.

    பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம். அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவ கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது.

    உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரய செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.

    நரசிம்மர் மண்டபம்: நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன.

    நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

    பிரம்மன் வழிபட்ட ளஷாடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது.

    எலும்பு நோய்க்கு பூஜை

    பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது.

    சித்தர்பாடலில் இத்தலம் "பதஞ்சலி பிடவூர்' எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.

    பதஞ்சலியின் ஜீவசமாதி:ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.

    வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்.

    பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.

    பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.

    • குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    சோழவந்தான்

    குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தது. மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபெயர்ச்சி ஆனார். குருபெயர்ச்சி விழா 3 நாள் நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை லட்சார்ச்சனை தொடங்கியது. நேற்று மதியம் வரை லட்சார்ச்சனை நடந்தது.

    நேற்று இரவு 9 அளவில் மணி பரிகார மகா யாக பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதர்பட்டர், ரங்கநாதபட்டர், சடகோப பட்டர், ஸ்ரீ பாலாஜிபட்டர், ராஜாபட்டர் உள்பட 15 அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் ஓதி யாகபூஜை நடத்தினர். இதைத்தொடர்ந்து மகாபூர்ணா குதி நடந்து அர்ச்சகர்கள் புனித நீர் குடங்களை சுமந்து மேளதாளத்துடன் கோவிலை வலம் வந்தனர்.

    குருபகவானுக்கு திரு மஞ்சனம், சிறப்பு அபி ஷேகம், ஆராதனை செய்தனர். குருபகவான்- சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பரிகார ராசிகளுக்கு அர்ச்சனை நடந்தது. குருபெயர்ச்சியை யொட்டி குருவித்துறை கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி யுடன் குருபகவானை தரிசித்தனர். கொரோனோ தொற்றுநோய் காரணமாக அரசு உத்தரவின்படி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையத்துறையினர் ஆகியோர் போலீசாருடன் தடுப்பு வேலி ஏற்படுத்தி பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வரிசையாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சமயநல்லூர் டி.எஸ்.பி. பாலசுந்தர், சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் உள்பட 400-க்கும் மேற்பட்ட போலீசார், சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன் போக்குவரத்து அலுவலர் பழனிமுத்து தலைமையில் தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தானில் இருந்து குருவித்துறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் பாலமுருகன், பணியாளர்கள், நாகராஜ், மணிபிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தட்சிணா மூர்த்தி பகவானுக்கு 21 வகை நறுமண பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அறம் வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாத சுவாமி கோவிலில் தனி சன்னதியாக வீற்றியிருக்கும் தட்சிணா மூர்த்தி பகவான் சன்னதியில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள், தட்சிணா மூர்த்தி பகவானுக்கு 21 வகை நறுமண பொருள் களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, இரவு 10மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினா் செய்தி ருந்தனா்.

    மேலும் செங்கோட்டை அடுத்துள்ள புளியறை சிவகாமி அம்பாள் உடனுறை சதாசிவமூர்த்தி ,தட்சிணா மூர்த்தி கோவிலில் இன்று குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இந்த சிறப்பு குருபெயர்ச்சி வழிபாடு மற்றும் தமிழ் புத்தாண்டை யொட்டி தென்காசி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளாவிலிருந்தும் பக்தா்கள் அதிகளவில் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

    • ஆலங்குடி குருபகவான், திட்டை வசிஷ்டேஸ்வரர், பாடி திருவல்லீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
    • குருபெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு இந்த கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறும்.

    அதன்படி நேற்று (சனிக்கிழமை) இரவு 11.21 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார்.

    இதை முன்னிட்டு, ஆலங்குடி குருபகவான், திட்டை வசிஷ்டேஸ்வரர், பாடி திருவல்லீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

    குருபெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • குருபெயர்ச்சி விழாவையொட்டி திட்டை மற்றும் ஆலங்குடி கோவில்களில் இன்று காலை முதலே பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர்.
    • உள்ளூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் மற்றும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்களில் இன்று இரவு குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

    தஞ்சாவூர் அருகே உள்ள திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில் குரு பரிகார தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு இந்த கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறும்.

    அதன்படி இன்று (சனிக்கிழமை) இரவு 11.21 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார்.

    குருபெயர்ச்சி விழாவையொட்டி இன்று மாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குரு பெயர்ச்சி அடைந்ததும் குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறும். அதிகாலை 2 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    அப்போது இதில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    குரு பெயர்ச்சி அடைந்த பிறகு திட்டை கோவிலில் லட்சார்ச்சனை மே 1-ம் தேதி மட்டும் நடைபெறவுள்ளது. இதற்காக சிறப்பு கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படுகிறது. அதே போல் குருபெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோமம் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

    இதேப்போல் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆலங்குடியில் அமைந்துள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் (குருபரிகார தலம்) இன்று இரவு 11.21 மணிக்கு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

    அப்போது இதில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவையொட்டி குருபகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை விழா முடிவடைந்தது. இதையொட்டி கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் தட்சிணாமூர்த்தி சன்னதியில் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

    வருகிற 27-ந்தேதி முதல் அடுத்தமாதம் (மே) 1-ந்தேதி வரை 2-ம் கட்ட லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

    குருபெயர்ச்சி விழாவையொட்டி திட்டை மற்றும் ஆலங்குடி கோவில்களில் இன்று காலை முதலே பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர். உள்ளூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆங்காங்கே கட்டைகள் அமைக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    2 மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    குருபெயர்ச்சி விழாவுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக மேலாண் இயக்குனர் எஸ்.எஸ். ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஆலங்குடி, திட்டை மற்றும் சூரியனார் கோவில் ஆகிய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று மற்றும் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) வரை ஆலங்குடிக்கு கும்பகோணம், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதே போல் தஞ்சாவூரில் இருந்து திட்டை கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவிலுக்கும் சிறப்பு பஸ்கள் இயங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குருபெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் ?

    திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் இன்று இரவு 11.21 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார்.

    குருபகவான் பெயர்ச்சி அடைந்த பிறகு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று திட்டை கோவில் சிவாச்சாரியார் சாமிநாதன் கூறிய தகவல்கள் வருமாறு :-

    இன்று இரவு 11.21 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார். அதன் பிறகு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும். தொழில் விருத்தியாகும். இதுவரை தடைப்பட்டு போன திருமணம் கைக்கூடும். பதவி உயர்வு கிடைக்கும். வேலை இல்லாமல் அவதிப்படுவர்களுக்கு விரைவிலே நிரந்தர வேலை கிடைக்கும். தொட்டது எல்லாம் துலங்கும். மேலும் குருபெயர்ச்சி அடைந்தவுடன் மேற்கூறிய ராசிக்காரர்கள் முல்லைப்பூக்களை கொண்டு அர்ச்சனை செய்தால் அவர்களது தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குருவித்துறை குரு பகவான் கோவிலி்ல் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை நடந்தது.
    • சப் இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று காலை லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இதில் வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு பரிகார யாகங்கள், மகா அபிஷேகம் ஆகியவை நடந்தது.

    சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா 22-ந் தேதி நடக்கிறது.
    • காலை 10.45 அளவில் லட்சார்ச்சனை நடக்கிறது.

    சோழவந்தான்

    மதுரைமாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சித்திரரத வல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக இருக்கிறார்.அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

    ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு குரு பெயர்ச்சி விழா 3 நாட்கள் நடைபெறும். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்து குரு பகவானை தரிசித்து செல்வார்கள்.

    இந்த ஆண்டு வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) குருபெயர்ச்சி விழா தொடங்குகிறது. அன்று காலை 10.45 அளவில் லட்சார்ச்சனை நடக்கிறது. 22-ந் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.

    அன்று இரவு 9மணி அளவில் யாகசாலை தொடங்கி 11.24 மணிக்குள் பரிகார மகாயாகம், மஹா பூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடை பெறுகிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் பாலமுருகன், தக்கார் இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம், தீயணைப்பு நிலைய அலுவலர் ரூபன் ஆகியோர் விழா ஏற்பாடு களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×