என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "12 மணி நேர வேலை"
- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
- சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும்
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தொழில் பயிற்சி முன்பு நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் நவநீதன் வாழ்த்துரை வழங்கினார்.
மாநிலச் செயலாளர் கோதண்டபாணி தொடக்க உரையாற்றினார். முடிவில் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
இடைச் செல்வர்கள் ரெங்கசாமி, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பை வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் 12 மணி நேர வேலை மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர் புற நூலகர்கள், எம் .ஆர் .பி செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் ஏராளமான தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை மசோதாவால் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி அடையும்.
- எதிர்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது. தோழமை கட்சிகளும் சாதக, பாதகங்களை உணர்ந்து அரசுக்கு எடுத்துக்கூறி இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு தொழில் வர்த்தகர் சங்கத்தின் மாநில தலைவர் விக்கிரமராஜா இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை மசோதாவால் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி அடையும். தமிழகம் ஏற்கனவே அதிகளவு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் பணி செய்தால் அவர்களுக்கான ஊதியமும் அதிகரிக்கும். வேலை வாய்ப்பும் பெருகும். கொரோனா கால கட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும்.
இதனை எதிர்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது. தோழமை கட்சிகளும் சாதக, பாதகங்களை உணர்ந்து அரசுக்கு எடுத்துக்கூறி இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். எந்த நிறுவனமும் தொழிலாளிகள் இல்லாமல் முதலாளிகள் இல்லை. அதேபோல முதலாளிகள் இல்லாமல் தொழிலாளிகளும் இல்லை.
தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டும் 12 மணிநேர வேலை மசோதவை தொழிற்சங்கங்களும், தோழமை கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் மே 5-ந்தேதி ஈரோட்டில் வணிகர் உரிமை முழக்க மாநாடு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 40-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் திண்டுக்கல் மண்டலம் சார்ந்த திண்டுக்கல், பழனி, தேனி, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரம் வணிகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பணிநிறைவு சான்றிதழ்கள் பெற்றால்தான் வணிக கட்டிடங்களுக்கு புதிய மின்இணைப்பு வழங்கப்படும் என்ற மின்சார வாரியத்தின் கொள்கை முடிவை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மண்டல தலைவர் கிருபாகரன், மாவட்ட செயல்தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் மங்களம் அழகு, பொருளாளர் நசீர்சேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசளை மேற்கொண்டனர்.
- அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில், கடந்த 21-4-2023 அன்று "2023 -ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் இன்று (24-4-2023) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசளை மேற்கொண்டனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமுன்வடிவின் முக்கியமான பிரிவுகளில், குறிப்பாக தொழிலாளர் நலன் சார்ந்து, அவர்கள் பணிபுரிவதற்கான உகந்த பணிச்சூழல், தொழிலாளர்களுக்குப் போக்குவரத்து வசதி உள்ளிட்ட தொழிலாளர் நலன்கள் குறித்தும், இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் விரிவாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் உள்ள மிகச்சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்குப் பின்பே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும், எந்தச் சூழ்நிலையிலும், தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது என்றும் அமைச்சர் பெருமக்கள் எடுத்துரைத்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இச்சட்டமுன்வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து, தங்களுடைய கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறதோ, அப்போதெல்லாம். தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது. தற்போது அதே சிந்தனையைத் தாங்கி, கலைஞர் வகுத்துத் 'தந்த பாதையில் அதன் அடியொற்றி இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு ஒரு சட்டமுன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகின்றதோ, அது குறித்து மக்களிடம் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் வரப்பெற்றால், அவற்றைச் சீர்தூக்கி ஆராய்ந்து, அவர்களின் கருத்துக்களுக்கிணங்க, அவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதிலும் அதே அளவு உறுதி காணப்பட வேண்டும்.
அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- தமிழ் நாட்டில் 12 மணி நேர வேலை திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
- 12 மணி நேர வேலை திருத்த சட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 ணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக சட்ட மசோதா சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
மேலும், வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12-ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தன. இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறையின் 12 மணி நேர வேலை திருத்த சட்ட செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- 12 மணி நேர வேலை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12-ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.
- வரும் 27-ம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12-ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. சிஐடியூ மற்றும் ஏஐடியூசி, எச்.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிக்ள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்