search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
    X

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
    • சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும்

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தொழில் பயிற்சி முன்பு நடைபெற்றது. தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    மாநில செயலாளர் நவநீதன் வாழ்த்துரை வழங்கினார்.

    மாநிலச் செயலாளர் கோதண்டபாணி தொடக்க உரையாற்றினார். முடிவில் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

    இடைச் செல்வர்கள் ரெங்கசாமி, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பை வழங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் 12 மணி நேர வேலை மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர் புற நூலகர்கள், எம் .ஆர் .பி செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணி காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் ஏராளமான தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×