என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வளர்ச்சிப் பணிகள்"
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- 27-வது வார்டு ஆசாரிமார் பெரிய தெருவில் ரூ.5.10 லட்சத்தில் தார் சாலை
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிவிளை அம்மன் கோவில் மேலத் தெரு பகுதியில் ரூ.2.50 லட்சத்தில் கான்கிரீட் தளம், 32-வது வார்டு சைமன் நகரில் ரூ.51 லட்சத்தில் தார் சாலை, 33-வது வார்டு கம்பர் தெருவில் ரூ.5.81 லட்சத்தில் கான்கிரீட் தளம், 50-வது வார்டு வெள்ளாரன்விளையில் ரூ.27 லட்சத்தில் கான்கிரீட் தளம், 41-வது வார்டு வட்டவிளை, சானல் கரை பகுதியில் ரூ.1.80 லட்சத்தில் மழைநீர் வடிகால் ஓடை பக்க சுவர், 40-வது வார்டு பைத்துமால் நகரில் ரூ.7.50 லட்சத்தில் தார் தளம், 27-வது வார்டு ஆசாரிமார் பெரிய தெருவில் ரூ.5.10 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜசீலி, இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர் கோபால சுப்பிரமணியன், தி.மு.க செயற்குழு உறுப்பினர் சாதாசிவன், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மல்லாபுரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நடைபெற்றது.
- வளர்ச்சிப் பணிகளை திட்ட இயக்குனர் செல்வராணி ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் மல்லாபுரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நடைபெற்றது. மேலும் இந்த திட்டத்தில் 15-வது நிதிக்குழு மல்லாபுரம் பள்ளி கட்டிடம் தடுப்பு சுவர், வடிக்கால் வாய்க்கால் சிமெண்ட் சாலைகள், மயானத்தில் சுற்றுசுவர் சிறு பாலம் பணிகள், ஓடையில் 8 தடுப்பணை பணிகள், குளம் தானியக்களம், நடுநிலைப்பள்ளி மற்றும் ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெறும் சமையல் கூடம் பழுது நீக்கம் செய்தல் போன்ற பணிகளை திட்ட இயக்குனர் செல்வராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செல்வகணேஷ், செல்வதுரை, ஒன்றிய பொறியாளர் ஹரிகிருஷ்ணன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நேரு, வட்டார ஒருங்கிணைப்பாளர் சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன், துணைத் தலைவர் ராதிகா பாஸ்கரன், ஊராட்சி செயலர் திருமால்வளவன், தொழில் நுட்ப உதவியாளர் நாராயணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் திட்ட இயக்குனர் செல்வராணி அனைவரிடமும் பணி முன்னேற்றம் குறித்து அறிவுரை வழங்கி, பணிகளை சிறப்பாக செய்யுமாறு கூறினார்.
- ரூ.18.89 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- மாணவ, மாணவிகளை புத்தகம் வாசிக்க சொல்லி அவர்களுடன் கலந்துரையாடினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, போகலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிவயல் ஊராட்சி அனுசியாபுரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.11.92 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணிகள், எட்டிவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பாடுகளை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் மாணவ, மாணவிகளை புத்தகம் வாசிக்க சொல்லி அவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.76 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டும் பணி, தென்னவனூர்-வீரவனூர் இணைப்பு சாலையில் ரூ.11.56 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணி, சத்திரக்குடி கிராமத்தில் 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி, தீயனூர் சமத்துவ புரத்தில் ரூ.45.74 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளில் பழுது நீக்கம் செய்யும் பணி, போகலூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு சுகாதாரத் தலைப்பு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.
பின்னர், எட்டிவயல் முதல் இதம்பாடல் வரை நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் இருவழி சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப நிலையத்தில் ஆய்வு செய்து, அங்கு வந்த கர்ப்பிணிகளிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் தொடர்பாகவும், பரிசோதனை முறைகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன் சிவசாமி, பரமக்குடி, வட்டாட்சியர் ரவி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்