என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபானக்கடை"

    • காளிகுமாரசாமி கோவிலுக்கு அருகில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.
    • சாலையில் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

    வீரபாண்டி:

    திருப்பூா் வீரபாண்டி அருகே உள்ள பலவஞ்சிபாளையத்தில் இருந்து காளிகுமாரசாமி கோவிலுக்கு செல்லும் சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.இந்தத் சாலையானது தாராபுரம் சாலைக்கு சென்றடைவதால் வாகனப் போக்குவரத்தும் அதிக அளவில் உள்ளது.

    காளிகுமாரசாமி கோவிலுக்கு அருகில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு வரும் மதுப்பிரியா்கள் மதுவை அருந்திவிட்டு காலி பாட்டில்களை சாலைகளில் வீசிச் செல்கின்றனா். மேலும் பகல் நேரங்களில் சாலையோரம் அமா்ந்து மது அருந்துவதால் இந்த சாலையில் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே, மதுபானக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளிநாட்டினருக்காக மதுபானங்கள் விற்பனை செய்ய மதுபானக்கடை ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது.
    • மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே இருப்பார்கள்.

    மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சவுதி அரேபியாவில், முதல் முதலாக மதுபானக்கடையை திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்து உள்ளார்.

    சவுதி அரேபியா நாட்டின் ரியாத் நகரத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மதுபானங்கள் விற்பனை செய்ய மதுபானக்கடை ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது.


     இவர்கள் மது பெற வேண்டும் என்றால் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி குறியீடு பெற்று,'மொபைல் செயலி' மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே இருப்பார்கள். கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் சவுதி அரேபியாவில் மதுபானம் கடை மூலம் விற்கப்படுவது இதுவே முதல்முறை. சவுதிஅரேபியா நாட்டில் முதல் மதுபான கடை திறக்கப்படுவதன் மூலம் இஸ்லாமிய சட்ட கோட்பாட்டில் இருந்து விலகி செல்கிறாரா இளவரசர் முகமதுபின் சல்மான் என கேள்வி எழுந்து உள்ளது.

    • மொத்தம் 27,308 கடைகள் ஒதுக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
    • 3 லட்சத்து 65 ஆயிரத்து 268 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்நாடு, வெளிநாடு மதுபானங்கள் சில்லறை விற்பனை கடைகள் உள்ளிட்ட பல்வேறு வகை சில்லறைகள் கடைகள் திறப்பதற்கு உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உ.பி. மாநில அரசின் கலால்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் எனக் கூறப்பட்ட நிலையில், நாளை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 3 லட்சத்து 65 ஆயிரத்து 268 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்முறை கட்டணமாக 1987.19 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மார்ச் 6-ந்தேதி குலுக்கல் மூலம் விண்ணப்பிதவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்படும் எனத் கலால்துறை ஆணையர் ஆதர்ஷ் சிங் தெரிவித்துள்ளார். மொத்தம் 27,308 கடைகள் ஒதுக்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

    ×