என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பல்லக்கு"
- இறைவன் விழாக் காலங்களில் பல்லக்கில் எழுந்தருளும் காட்சி ‘திரோபவக் கோலம்‘ எனப்படுகிறது.
- தேர்த் திருவிழா இந்துக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.
இறைவன் விழாக் காலங்களில் பல்லக்கில் எழுந்தருளும் காட்சி 'திரோபவக் கோலம்' எனப்படுகிறது.
திரோபவம் என்றால் மறைத்தல் என்று பொருள்.
உயிர்கள் பூமியில் வாழ்கின்ற காலத்தில் அறிந்தோ அறியாமலோ வினைகளை செய்கின்றன.
இவ்வாறாகப் பிறவி தோறும் அவை செய்த நன்மை தீமைகளின் அடிப்படையில் இறைவன் அருள்புரிகின்றான்.
மறைப்பு நிலையாக இருந்து இறைவன் அடைவதற்கு அரியவன் என்னும் தத்துவத்தை பல்லக்கு வாகனம் உணர்த்துகின்றது.
தேர்த் திருவிழா இந்துக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழா ஆகும்.
தேரோட்டம் ஏன் திருவிழாக்களில் நடைபெறுகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.
இத் திருவிழாவின்போது தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மக்களுக்கு ஆசீர் வழங்க இறைவனின் திருவருள் எனக் கூறலாம்.
தேர்த் திருவிழா பார்க்கும் ஒவ்வொருவர் மனத்திலும் ஏழுவகைப் பிறப்பையும் மாய மல குணம்
ஏழும் நீக்கப் பெறுவதில் உட்கருத்தே ஏழாம் திருவிழாவாகும்.
மேலும் எந்தத் திருக்கோவிலிலும் இல்லாத பஞ்ச மூர்த்திகளின் திருத்தேரோட்டம் ஒரே நாளில்
நடைபெறுவது இத்திருத்திலத்திற்கு சிறப்பாகும்.
முப்புரம் ஆணவம், கன்மம், மாயை மூன்று அசுரர்கள் - தாருதாக்கன், கமலாக்கன், வித்யூன்மா,
மூவகை ஆன்மாக்கள்- விஞ்ஞானாகலர், பிரனாயகலர், சகலர்.
பரம்பொருளாகிய சிவபெருமானே ஆன்மாக்கட்கு மும்மல பந்த வாதனைகளை நீக்கி
பேரானந்தப் பெருவாழ்வளிப்பவர் என்ற உட்பொருளைத் தேர்திருவிழா விளக்குகிறது.
- 5 ஆயிரம் மாணவ- மாணவிகள் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு நாட்டிய திருவிழா நடந்தது.
- நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், ஆதீன நிர்வாகிகள் பலர் கலந்து கொன்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் குருபூஜை விழா மற்றும் ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. நிறைவு நாள் 11-ம்நாள் திருவிழாவாக ஆதீனகர்த்தர் சிவிகை பல்லக்கில் பட்டின பிரவேசம் செய்யும் நிகழ்ச்சிநேற்று நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை பக்தர்கள் மற்றும் மடத்து சிப்பந்திகள் சிவிகை பல்லக்கில் நான்கு வீதிகளில் சுமந்து வந்தனர். இறுதியாக ஆதீன மடாதிபதியின் ஞான கொலுக்காட்சி நள்ளிரவு நடைபெற்றது.
பீடத்தில் அமர்ந்த ஆதீன மடாதிபதிக்கு திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிராயன் சுவாமிகள் பாவனை அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பித்தார். இறுதியாக விழாவில் பங்கேற்ற சூரியனார்கோயில் ஆதீனம், திருப்பனந்தாள் இளவரசு உள்ளிட்டவர்களுக்கு தருமபுரம் ஆதீன குருமா சன்னிதானம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விடியவிடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து அருளாசி பெற்றனர். இதில் கடந்த மாதம் சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் 5000 மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் பங்கேற்று நடைபெற்ற நாட்டிய திருவிழாவை உலக சாதனை நிகழ்ச்சியாக டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டு பதிவு செய்தது.அதன் தலைவர் கிருத்திகா தேவி உலக சாதனை படைத்த சான்றிதழ்களை தருமபுரம் ஆதீனத்திடம் நேரில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஆதீன நிர்வாகிகள் என திரளாக கலந்து கொன்டனர்.
- 34 ஆண்டுகளுக்கு பிறகு ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது.
- பல்லக்கு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தங்கியது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கரந்தை கருணாசுவாமி கோவில் எனப்படும் வசீடேஸ்வரர் கோவிலில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது.
கண்ணாடி பல்லக்கில் சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன் ஆகியோரும், வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டர், அருந்ததி அம்மன் ஆகியோரும் எழுந்தருளினர்.
பின்னர் சுங்கான் திடல், பள்ளி அக்ரஹாரம், திட்டை, குலமங்கலம், கூடலூர், குருங்கலூர் வழியாக சென்ற பல்லக்கு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தங்கியது.
நேற்று காலை மீண்டும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து பல்லக்கு புறப்பட்டு பக்தர்கள் புடைசூழ சின்ன அரிசிக்கார தெரு, கீழவாசல் ,அரண்மனை உள்பட பல்வேறு இடங்களின் வழியாக சென்று கருணாசுவாமி கோவிலுக்கு இரவில் சென்று அடைந்தது.
இதனைத் தொடர்ந்து பல்லக்கில் உள்ள சுவாமி, அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தினமும் சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.
- நாளை (5-ந் தேதி) பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த கரந்தையில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி கோவில் என்கிற வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களில் ஒன்றாகும். தேவார பாடல் பெற்ற வைப்பு தலமாகவும் விளங்கி வருகிறது.
வைகாசி விசாக பெருவிழா
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா மற்றும் ஏழூர் பல்லக்கு விழா கடந்த மாதம் (மே) 20-ந் தேதி அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.
34 ஆண்டுகளுக்கு பிறகு..
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு, சுவாமி- அம்பாள் கண்ணாடி பல்லக்கிலும், வெட்டிவேர் பல்லாக்கிலும் உலா வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழா கடந்த 1988-ம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இவ்விழா நடைபெறவில்லை. தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இந்த பல்லக்கு விழா நடைபெற்றது.
பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி- அம்பாள்
முன்னதாக அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் சோமாஸ்கந்தர்,
பெரியநாயகி அம்மன், கந்தர் மற்றும் தனி அம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளினர். இதேபோல், வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டர்,
அருந்ததி அம்மன் சுவாமிகள் எழுந்தருளினர். இதனையடுத்து சுவாமிகளுக்கு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி
பின்னர், சிவ வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கண்ணாடி பல்லக்கு மற்றும் வெட்டிவேர் பல்லக்கை தோளில் சுமந்தபடி கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.
பின்னர், பல்லக்குகள் ஏழூர் சப்தஸ்தான தலங்களான வசிஷ்டேஸ்வரர் கோவில் (கரந்தை),
தஞ்சபுரீஸ்வரர் கோவில் (வெண்ணாற்றங்கரை), வசிஷ்டேஸ்வரர் கோவில் (திருதென்குடி திட்டை), சொக்கநாதர் கோவில் (கூடலூர் திருக்கூடலம்பதி), ராஜராஜேஸ்வரர் கோவில் (கடகடப்பை), கைலாசநாதர் கோவில் (திருப்புன்னைநல்லூர்), பூமாலை வைத்தியநாதர் கோவில் (கீழவாசல்) ஆகிய ஏழு ஊர்களுக்கும் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது. பல்லக்கு கோவிலை வந்தடைந்ததும் நாளை (5-ந் தேதி) பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் பேரூர் கட்டளை தம்பிரான் சிவப்பிரகாச அடிகளார், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் மூர்த்தானந்தர் மற்றும் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றது.
தஞ்சாவூர்:
திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா கொடி ஏற்றம் கடந்த 25-ந்தேதி தொடங்கியது.
29-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெற்றது. அப்போது 6 ஊர்களிலிருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது.
3-ந்தேதி தேரில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற்றது.
6-ந்தேதி சப்தஸ்தான பெருவிழாவையொட்டி ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் சிவாச்சாரியர்கள் வேத பாராயணம் முழங்க புறப்பட்டு சென்றனர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லை ஸ்தானத்தில் சங்கமித்தது.
இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது. நேற்று தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது மழை பெய்தது. இந்த மழையிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றது.நேற்று இரவு காவேரி ஆற்றில் வாணவேடிக்கையும், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீன சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
திருவையாறு தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் சமேத ஐயாறப்பர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா மே 6-ந் தேதி நடக்கிறது.7-ந் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன், 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலி ன்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு போலீசார் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்