search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் திட்டப்பணிகள்"

    • ராஜபாளையம் அருகே செட்டியர்பட்டியில் ரூ.8.70 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.
    • 24 மணி நேர மும்முனை மின் இணைப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் குறிப்பிட்டிருப்பதாவது:-

    ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எனது முயற்சியால் அசையா மணி விலக்கு மேற்குப்பகுதி யில் புதியதாக போர்வெல் அமைக்கப்பட்டதையும் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் சாஸ்தா கோவில் அணை பகுதிக்கு வந்து கொண்டி ருக்கும் குறைந்த அளவு நீர்வரத்தை முறையாக செட்டியார்பட்டி பேரூ ராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சேறுவராயன் கண்மாய்க்கு கொண்டு செல்லும் பணிகளை முடுக்கி விட்டுள்ளேன்.

    நீர் செல்லும் வழிப் பாதையை சீரமைக்கப்பட்டு வருவதை அணையின் உள் பகுதிக்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆலோ சனைகள் வழங்கி உள்ளேன்.ஒரு வாரத்திற்குள் கண்மாய் நிரம்பியவுடன் தற்போது 2 வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வரும் குடிநீரை 3 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்.

    சேத்தூர் மற்றும் செட்டி யார்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வழங்க முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 24 மணி நேர மும்முனை மின் இணைப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது.

    செட்டியார்பட்டி பேரூ ராட்சியில் 2006-ம் ஆண்டு நான் துணை சேர்மனாக இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி யால் செட்டியார்பட்டி பேரூ ராட்சிக்கு சாஸ்தா கோவில் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு 2000 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 3 மடங்காக குடிநீர் இணைப்பு உயர்ந்து 7000 குடிநீர் இணைப்பு உள்ளது. அதனால் தான் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.

    இதனையும் சரி செய்யும் விதமாக செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு முறையாக குடிநீர் வழங்க 8.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக சிறப்பு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். இப்பணியை ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டம் செயல் பாட்டிற்கு வரும்போது செட்டியார்பட்டி பேரூராட்சியில் தினந்தோறும் குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • குடிநீர் திட்டப்பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் குமாா் நகரில் உள்ள வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இப்பணிகளை செப்டம்பா் மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

    திருப்பூர்,

    குடிநீர் திட்டப்பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் குமாா் நகரில் உள்ள வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருப்பூா் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.

    இதில் அவா் பேசியதாவது:-

    திருப்பூா் வடக்கு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூா் ஒன்றியம் பட்டம்பாளையம், சொக்கனூா், மேற்குபதி, வள்ளிபுரம், தொரவலூா், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லூா், காளிபாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம் ஆகிய 10 ஊராட்சிகளுக்கு அன்னூா்-மேட்டுப்பாளையம் குடிநீர் திட்டப்பணிகள் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டன.

    இப்பணிகளை செப்டம்பா் மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

    கூட்டத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் சொா்ணாம்பாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலுசாமி, ஜோதிநாத், ஒன்றிய உதவிப்பொறியாளா்கள் கற்பகம், மகேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • சி.எஸ்.ஐ. சர்ச் சாலை தார்சாலை அமைத்தல் ஆகிய பணிகளின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 10 லட்சம் செல வில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்ட பணியின் தொடக்க விழா கொட்டாரம் மிஷியன் காம்பவுண்ட் பகுதியில் இன்று காலை நடந்தது.

    கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜநம்பி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு புதிய குடிநீர் திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலரும், பேரூர் தி.மு.க. செயலாளருமான வைகுண்டபெருமாள், கொட்டாரம் பேரூராட்சி துணை தலைவி விமலா, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் வசந்தகுமாரி, இந்திரா, பேரூராட்சி பொறியாளர் கமால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நகர்புற சாவைகள் மேம்பாட்டுத் திட்டம் 2023 - 24 கீழ் ரூ.79.95 லட்சம் மதிப்பில் தென்தாமரைகுளம் முஸ்லீம் பள்ளிவாசல் முதல் விஜயநகரி ஜங்சன் வரை தார் சாலை அமைத்தல், மேலசந்தையடி

    சி.எஸ்.ஐ. சர்ச் சாலை தார்சாலை அமைத்தல் ஆகிய பணிகளின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    அமைச்சர் மனோ தங்க ராஜ் பணியை தொடங்கி வைத்தார். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு, வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரை பாரதி, தென் தாமரை குளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகாபிரதாப்,

    பேரூராட்சி உறுப்பி னர்கள் சவுந்தர்ரா ஜன், பூவியூர் காமராஜ். எட்வின் ராஜ், ஆல்வின், கான்ஸ்டன் டைன் பேரூராட்சி செயல் அலுவலர் சந்தோஷ் மற்றும் பொறியாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வா கிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நகராட்சிக்கான குடிநீர் திட்டப்பணிகள், முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பட்டு வருவதை ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியியல் இயக்குநர் , மதுரை மண்டல தலைமை பொறியாளர் மற்றும் நிர்வாகப் பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அருகே வைகை அணை கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள தலைமை நீரேற்றும் நிலையம் மற்றும் குருவியம்மாள்புரம் அருகில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேனி மாவட்டத்தில் வைகை அணை நீரினை ஆதாரமாக கொண்டு ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி- தேனி ஆகிய ஊராட்சி ஒன்றிய ங்களிலுள்ள 250 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள், அதன் நிலை மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து கள பொறியாளர்கள் மற்றும் துறை பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள விதிமுறை களை முறையாக பின்பற்றி குறிப்பிட்ட காலத்திற்குள் பணி களை விரைந்து முடிக்க அலு வலர்களுக்கு அறிவு ரைகளை வழங்கினார்.

    மேலும் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வைகை அணையிலிருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கான குடிநீர் திட்டப்பணிகள், முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பட்டு வருவதை ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இவ்வாய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியியல் இயக்குநர் வேல்முருகன், மதுரை மண்டல தலைமை பொறியாளர் நடராஜன் மற்றும் நிர்வாகப் பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
    • குமரி மாவட்டத்தில் குடிநீரை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குமரி மாவட்டத்தில் ரூ.212 கோடி மதிப்பிலான பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் தொடக்க விழா காட்டாத்துறை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடந்தது.

    விழாவுக்கு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். கலெக்டர் ஸ்ரீதர் வரவேற்றார். பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலை வகித்தார். விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

    அந்த வகையில் ரூ.174 கோடியில் இரணியல் பேரூராட்சி மற்றும் 319 கிராம குடியிருப்புகள், பயன்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்டம், காட்டாத்துறை கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் அபிவிருத்தி செய்தல் மற்றும் பொதுவான சுத்திகரிகப்பு நிலையம் அமைக்கும் கூட்டுகுடிநீர் திட்டம், ரூ.30.94 கோடியில் குழித்துறை நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம், ரூ.3.69 கோடியில் குருந்தன் கோடு ஊராட்சி ஒன்றியம் முட்டம் ஊராட்சியில் உள்ள 3 குடியிருப்பு களுக்கான குடிநீர் திட்டம், ரூ.3.52 கோடியில் தூத்தூர் ஊராட்சியில் 5 ஊராட்சிகளுக்கான குடிநீர் திட்டம் என மொத்தம் ரூ.212 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகள் உள்ளன. மாநிலத்திலேயே 6 சட்டசபை தொகுதிகளில் 51 பேரூராட்சிகள் இருப்பது இங்கு தான். இங்கு 24 மாதங்களில் ரூ.1351.14 கோடி செலவு செய்ய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி தந்துள்ளார். நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ.131.38 கோடியும், 4 நகராட்சிகளுக்கு ரூ.57.50 கோடியும், 51 பேரூராட்சிகளுக்கு ரூ.524.9 கோடியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 638.17 கோடியும் செலவு செய்யப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தில் சாலையை அகலப் படுத்தும் போது குடிசைகளை அகற்ற கூடாது என்று எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கூறி யுள்ளார். எனவே சாலையை அகலப்படுத்தும் போது அகற்றப்படும் வீடுகளுக்கு மாற்று வீடு தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளோம். குமரி மாவட்டத்தில் குடிநீர் ஆதாரம் அதிகம் இருக்கிறது. ஆனால் அதை செயல் படுத்தும் போது பல்வேறு சிரமங்கள் உள்ளன. இங்கு மேடு, பள்ளங்கள் அதிகம் உள்ளன. சாலையை சீரமைக்கும்போது குடிநீர் குழாய்கள் சேதம் அடைகிறது.

    எனவே சிரமங்களை நீக்கி குமரி மாவட்டத்தில் குடிநீரை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்றபோது குடிநீர் வழங்கல் துறை 26-வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது அந்த துறை இந்தியாவில் முதல் இடம் பிடித்துள்ளது. அதற்கான விருதை வாங்கி வந்துள்ளோம்.

    குமரி மாவட்டத்தில் கையளவு இடம் கூட கொடுக்க மாட்டார்கள். ஆனால் தற்போது மலையில் அருமையாக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு இடம் கொடுக்கப்பட் டுள்ளது. குறைவான செல வில் நிறைவான திட்டமாக இந்த திட்டம் உருவாகி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி னார். முன்னதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியபோது, குமரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் எதையும் போராடிதான் பெற வேண்டிய நிலை இருந்தது. போராடியதால் என் மீது 30 வழக்குகள் போடப் பட்டுள்ளன. ஆனால் தற்போது அப்படி இல்லை. குமரி மாவட்டத்துக்கு கேட்கின்ற நிதியை முதல்-அமைச்சர் அளித்து வரு கிறார். விரைவில் தன்னி றைவு பெற்ற மாவட்டமாக குமரி மாவட்டம் உருமாறும்" என்றார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, ராஜேஷ்குமார், பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, சென்னை பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குர்ராலா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், குழித் துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி உள்பட பலா் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் வசதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக மாவட்ட பஞ்சாயத்து நிதியிலிருந்து ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • நொச்சிகுளம் ஊராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் அங்கு உள்ள வீடுகளுக்கு குடிநீர் சீராக கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    பாளை யூனியன் நொச்சிகுளம் பஞ்சாயத்தில் மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட நாகசுதர்சனா நகர், வெங்கடாச்சலபதி நகர், ஆதிபராசக்தி நகர் ஆகிய 3 நகரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வற்காக குடிநீர் திட்டப்பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு ஏற்கனவே குடிநீர் வசதி பற்றாக்குறை இருந்தது.

    ஆகவே அதனை நிவர்த்தி செய்வதற்காக மாவட்ட பஞ்சாயத்து நிதியிலிருந்து ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நொச்சிகுளம் ஊராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் அங்கு உள்ள வீடுகளுக்கு குடிநீர் சீராக கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் போர்வெல் கணேசன், ஆரோக்கிய எட்வின், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், அருண்தவசு, மகேஷ்குமார், லிங்கசாந்தி, ஜான்ஸ் ரூபா, சத்தியவாணிமுத்து, தனிதங்கம், நொச்சிகுளம் ஊராட்சிமன்ற தலைவர் வேலம்மாள் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார்.
    • மாநகராட்சி கமிஷனர் பவுன் குமார் ஜி.கரியப்பனவர், மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில்

    மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டில் கொண்டு வர மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளு டன் தொடர்ந்து ஆலோசனை நடத்தியும், பணிகளை நேரடியாக சென்றும் ஆய்வு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை வெள்ளியங்காடு நால்ரோடு மற்றும் 60 அடி சாலையில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார்.

    அப்போது முடிக்க படாத பணிகளை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் பவுன் குமார் ஜி.கரியப்பனவர், மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    ×