என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வணிகர் தினம்"
- வணிகர் தினத்தை முன் னிட்டு விடுமுறை அறிவிக்கப் பட்டு இருந்தது
- 75 சதவீத கடைகள் அடைக்கப் பட்டு இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்
ஆம்பூர்:
வணிகர் தினத்தை முன் னிட்டு ஆம்பூரில் கடைக ளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டு இருந்தது.
அதன்படி நேற்று நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்துக்கடை, பால் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறந்திருந்தன. பஜார் பகுதி யில் உள்ள காய்கறி மார்க் கெட் முழுவதுமாக மூடப் பட்டு இருந்தது.
மேலும் பஜாரில் அனைத்து ஜவுளிக்கடைகளும், மளிகைக்கடைகளும் அடைக்கப் பட்டு இருந்தன.
சுமார் 75 சதவீத கடைகள் அடைக்கப் பட்டு இருந்ததாக வியாபாரி கள் தெரிவித்தனர்
- மாநாட்டில் கலந்துகொள்ள கடைகளை அடைத்து விட்டு மாநாட்டுக்கு சென்றுள்ளனர்.
- செங்கல்பட்டு நகரமே வெறிச்சோடி காணப்படுகின்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5 வணிகர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். இன்று ஈரோட்டில் வணிகர் சங்கம் சார்பில் 40-வது வணிகர் தின மாநாடு நடைபெற்று வருகிறது.
இதையொட்டி செங்கல்பட்டில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வணிகர்கள், வியாபாரிகள் செங்கல்பட்டில் இருந்து ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள கடைகளை அடைத்து விட்டு மாநாட்டுக்கு சென்றுள்ளனர். கடை தொழிலாளர்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.
குறிப்பாக செங்கல்பட்டு நகரில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பழைய ஜி.எஸ்.டி. சாலை, மணிகூண்டு, காய்கறி மார்கெட், சின்ன மணிக்கார தெரு, பெரிய மணிக்கார தெரு, ராஜாஜி தெரு, உள்ளிட்ட தெருக்களில் உள்ள 2 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் வணிகர் தினத்தை கொண்டாடும் விதமாக மூடப்பட் டுள்ளது. இதனால் செங்கல்பட்டு நகரமே வெறிச்சோடி காணப்படுகின்றது.
+3
- 40-வது மாநாட்டை குறிக்கும் வகையில் 40 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.
- மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
ஈரோடு:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது வணிகர் தினத்தையொட்டி வணிகர் உரிமை முழக்க மாநாடு இன்று ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் தொடங்கியது. மாநாட்டுக்கு மாநிலத்தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை தங்கினார்.
மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து வணிகக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. 40-வது மாநாட்டை குறிக்கும் வகையில் 40 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.
மாநிலத்தலைவர் விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் வணிகக்கொடியை ஏற்றி வைத்தனர்.
அகில இந்திய வணிகர் சம்மேளனம் தேசிய தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டினை தொடங்கி வைத்தனர். ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதைத் தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 39-வது வணிகர் தினம் மாநில மாநாட்டை சிறப்பாக திருச்சியில் நடத்திய நிர்வாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
இதனைத்தொடர்ந்து மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
முன்னதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாநாட்டு திடலில் அமைந்துள்ள ஷாப்பிங் ஸ்டால்களை நேற்று மாலை திறந்து வைத்தார். தமிழக அனைத்து சிறு, குறு நிறுவனங்கள் தங்களின் நிறுவனப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 115-க்கும் மேற்பட்ட ஷாப்பிங் ஸ்டால்களை அமைத்துள்ளன. அந்த ஸ்டால்களை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்.
- தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் தங்களது குடும்பத்துடன் வந்தனர்.
- மாநாட்டையொட்டி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு:
ஈரோடு சித்தோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் இன்று 40-வது வணிகர் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் தங்களது குடும்பத்துடன் வந்தனர். மாநாட்டையொட்டி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு வ.உ.சி. காய்கறி பெரிய மார்க்கெட் வணிகர் மாநாட்டையொட்டி இன்று அடைக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஈரோட்டில் புகழ்பெற்ற கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) இன்று அடைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இதேப்போல் கொங்காலம்மன் கோவில் வீதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மளிகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாநகர் பகுதி முழுவதும் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், மால்கள் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.எம்.கே.ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேப்போல் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சத்தியமங்கலம், கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை என மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் அனைத்தும் வணிகர் மாநாட்டையொட்டி அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதே நேரம் பால் பூத்துகள், மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன.
- மாநாட்டு திடலில் 20 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதுடன் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி என 3 லட்சம் பேருக்கு மாநாட்டில் உணவு வழங்கப்படுகிறது.
சென்னை:
மே 5 வணிகர் தினத்தையொட்டி வணிகர் சங்கங்கள் நாளை மாநாடுகள் நடத்துகின்றன. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் மாநாடு நடைபெறுகிறது. பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நடத்தும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, வெள்ளக் கோவில் சாமிநாதன், பி.மூர்த்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி விருதுகள் வழங்குகிறார்கள்.
பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்புரை நிகழ்த்த மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா மாநாட்டு தீர்மானங்களை பிரகடனபடுத்தி முன் மொழிந்து பேசுகிறார். வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடத்தப்படும் இந்த மாநாட்டில் வணிகர்களின் உரிமையை வென்றெடுக்க பேரமைப்பின் கள நிகழ்வினை முன்னிறுத்தும் மாநாடாக இது நடத்தப்படுகிறது. இதில் வெளிநாடு தொழில் முனைவோர்களும் பங்கேற்க உள்ளனர். அகில இந்திய வணிகர் சம்மேளன தேசிய தலைவர் பார்டியா, தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் பாராட்டுரை வழங்குகிறார்கள்.
மாநாட்டு திடலில் 20 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதுடன் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி என 3 லட்சம் பேருக்கு மாநாட்டில் உணவு வழங்கப்படுகிறது.
மாநாட்டையொட்டி நாளை (5-ந்தேதி) தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள், மொத்த சில்லரை வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர். இதையொட்டி இன்று (4-ந்தேதி) மாநாட்டு திடலில் சிறு-குறு நிறுவனங்கள் தங்களது நிறுவன பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் (கண் காட்சி) அமைத்துள்ளன. இதை இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைக்கிறார்.
ஈரோடு மாவட்டத் தலைவர் சண்முகவேல் தலைமையில் கோவை மண்டலத் தலைவர் சூலூர் சந்திரசேகரன் வணிக கொடியை ஏற்றி வைக்கிறார். சங்க தலைமை செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், கே.ஜோதிலிங்கம், ஆம்பூர் கிருஷ்ணன் அமல்ராஜ் உள்ளிட்ட மண்டல தலைவர்கள், வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் உள்பட பலர் மாநாட்டு பணிகளை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்