search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொற்கோவில்"

    • 200க்கும் மேற்பட்ட மரபு காய்கறிகளினுடைய கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற உள்ளது.
    • 10 விவசாயிகளை தேர்ந்தெடுத்து "மண்ணை காக்கும் விவசாயிகளுக்கு மண் காப்போம் விருதுகள்" வழங்கப்பட இருக்கிறது.

    ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் அமைந்துள்ள ஶ்ரீ நாராயணி மஹாலில் வரும் ஜூலை-28 ஆம் தேதி நடைபெற உள்ள இந்நிகழ்வை பாராளுமன்ற உறுப்பினர் திரு. கதிர் ஆனந்த் தொடங்கி வைக்கிறார்.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூர் முத்தண்ணா நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைப்பெற்றது. இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் பங்கேற்று பேசினார்.

    அவர் பேசுகையில், " ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 15 வருடங்களாக நம் மண்ணை காக்கும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை எடுத்து சென்ற வண்ணம் உள்ளது. இவ்வியக்கத்தின் மூலம் இதுவரையில் 25,000 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 8,000 விவசாயிகளுக்கு மேல் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்திய அரசு சமீபத்திய பட்ஜெட்டில் வரும் இரண்டு ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் நோக்கமும் அது தான். எனவே இயற்கை விவசாயத்தை மென்மேலும் விரிவுப்படுத்தும் நோக்கத்தோடு ஒவ்வொரு பயிருக்கு ஏற்றவாறான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இது ஆடி பட்டம் காலம் என்பதால் நெல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த நெல் திருவிழா நடத்தப்படுகிறது.

    மேலும் நெல் விவசாயத்தை பல வருடம் செய்த போதிலும், போதிய வருவாய் இல்லாமல் விவசாயிகள் சோர்வாக உள்ளனர். அதே வேளையில் சில முன்னோடி விவசாயிகள் நெல் விவசாயத்தை வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் செய்து வருகின்றனர். நெல் விவசாயத்தை எவ்வாறு லாபகரமாக செய்ய முடியும் என்பது குறித்த தங்களின் அனுபவங்களை முன்னோடி நெல் விவசாயிகள் இந்த "பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா" வில் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் என ஏராளமானோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர். குறிப்பாக மரபு வழி கால்நடை மருத்துவரானபுண்ணியமூர்த்தி, பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம், நெல் வயலில் மீன் வளர்த்து அசத்தி வரும் விவசாயி பொன்னையா மற்றும் மதிப்பு கூட்டல் மூலம் பல லட்சங்களில் வருவாய் ஈட்டும் தான்யாஸ் நிறுவனர் திரு. தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.


    மேலும் இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக பொதுமக்களையும், விவசாயிகளையும் இணைக்கும் வகையிலான விவசாயிகளின் நேரடி சந்தை நடைபெற உள்ளது. இந்த சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெற உள்ளன. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், நாட்டு காய்கறிகள் மற்றும் அதன் விதைகள், நம் மரபு திண்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளன.

    அது மட்டுமின்றி பாரம்பரிய நெல்லை பரவலாக்கம் செய்ய உதவும் வகையில் விதை நெல்லும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் நெல் விவசாயிகளுக்கு பயன்படும் எளிய கருவிகளின் கண்காட்சி மற்றும் விற்பனை, நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி மற்றும் 200க்கும் மேற்

    பட்ட மரபு காய்கறிகளினுடைய கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற உள்ளது.

    மேலும் கூடுதல் சிறப்பாக இத்திருவிழாவில் இயற்கை முறையில் சிறப்பாக செயல்படும் 10 விவசாயிகளை தேர்ந்தெடுத்து "மண்ணை காக்கும் விவசாயிகளுக்கு மண் காப்போம் விருதுகள்" வழங்கப்பட இருக்கிறது. இந்த பிரம்மாண்ட திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 8300093777, 9442590077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்." இவ்வாறு அவர் பேசினார்.

    • பஞ்சாப் செல்லும் அவர் பொற்கோவில் சென்று பிரார்த்தனை செய்கிறார்.
    • விவசாயிகள் போராட்டம் நடத்தும் நேரத்தில் மம்தா பயணம் மேற்கொள்கிறார்.

    மேற்கு வங்காள முதல் மந்திரியாக இருக்கும் மம்தா பானர்ஜி வருகிற 21-ந்தேதி பஞ்சாப் மாநிலம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் செல்லும் அவர் பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அத்துடன் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி டெல்லி மற்றும் பஞ்சாபில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மம்தா பானர்ஜி அங்கே செல்கிறார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 8-ந் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு அழைத்து செல்லப்படும்.
    • அடுத்த மாதம் 12-ந் தேதி மாலை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு மீண்டும் வந்தடைகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு நேரடியாக சுற்றுலா ரெயிலை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இயக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ( ஐ.ஆர்.சி.டி.சி ) முடிவு செய்துள்ளது.

    பாரத் கவ்ரவ் சுற்றுலா ரெயில் வரிசையில் இயக்கப்படும் இந்த ரெயில் வரும் ஜூலை 1-ம் தேதி திருவனந்தபுரம், கொச்சுவேலியில் காலை புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திற்கு அன்று மாலை வந்து சேரும்.

    பின்னர் அங்கிருந்து ஆன்மிக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை வழியாக ஜூலை 3-ம் தேதி ஹைதராபாத் நகரில் டெக்கான் சார்மினார், கோல்கொண்டா, ஜூலை 5-ம் தேதி ஆக்ராவில் தாஜ்மகால், மதுராவில் கிருஷ்ணர் பிறப்பிடம், ஜூலை 6-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் மாதா வைஷ்ணவ் தேவி கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு ள்ளது.

    பின்னர், அங்கிருந்து 8-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோயில் மற்றும் இந்திய, பாகிஸ்தான் எல்லையான இட்டாரி (வாஹா) பார்த்த பின்னர் புதுடெல்லியில் குதுப்மினார், இந்தியா கேட், இந்திராகாந்தி அருங்காட்சியகம், அஷர்தம் கோயில், லோட்டஸ் கோயில் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும்.

    அதன் பின்னர் இந்தச் சிறப்பு சுற்றுலா ரெயில் அடுத்த மாதம் 12-ம் தேதி மாலை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு மீண்டும் வந்தடைகிறது. இந்த ரெயிலில் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. ஒரு நபருக்குச் சாதாரண படுக்கை வசதி ரூ. 22,350-ம், குளிர்சாதன படுக்கை வசதியுடன் ரூ.40,380-ம் எனக் கட்டணம் நிர்ணயி க்கப்பட்டுள்ளது.

    கூடுதல் விபரங்கள் மற்றும் முன்பதி விற்கு 82879 31965 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகி ப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    • பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அமைந்துள்ளது.
    • கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் அமிர்தசரசில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அமைந்துள்ளது. நேற்று இதன் அருகே உள்ள ஹெரிட்டேஜ் தெருவில் மர்ம பொருள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியது.

    இது பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்ற பீதி பொதுமக்கள் மத்தியில் நிலவியது. ஆனால் இது குண்டு வெடிப்பு அல்ல. ஒரு ஓட்டலில் கியாஸ் கசிவால் ஏற்பட்டது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் நேற்று சம்பவம் நடந்த ஹெரிடேஜ் தெருவில் மீண்டும் மர்மபொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த வெடிச்சத்தம் அருகில் உள்ள பகுதிக்கும் கேட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    வெடித்த மர்மபொருள் என்னவென்று தெரியவில்லை. அதன் மாதிரியை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் ஒருவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் அமிர்தசரசில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    ×