என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நான் முதல்வன் திட்டம்"

    • மாணவர்கள் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
    • நீங்கள் வென்றால் மட்டும் போதாது, மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் நடக்க வேண்டும்.

    சென்னை பசுமை வழிச்சாலையில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    * தி.மு.க. ஆட்சியில் கல்வியை மேம்படுத்தி மாணவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டோம்.

    * எப்படிப்பட்ட தேர்வாக இருந்தாலும் அதனை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என நினைத்தோம்.

    * மாணவர்கள் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.

    * மாணவர்கள் மீதும், நான் முதல்வன் திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.

    * நான் முதல்வன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் சிறப்பாக நிறைவேறி வருவதில் மகிழ்ச்சி.

    * சாமானிய வீடுகளில் இருந்து வந்து வென்ற உங்களை பாராட்டுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்

    * நீங்கள் வென்றால் மட்டும் போதாது, மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் நடக்க வேண்டும்.

    * யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிகள் குறைந்த நேரத்தில் நீங்கள் கவலையை தீர்த்துள்ளீர்கள்.

    * அதிகாரம் என்பது அனைவருக்கும் சமம், அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது, அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2021-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 27 தமிழர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கினோம்.

    2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23-ம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர் ஆவார். அதேபோல, இந்திய அளவில் 39-ம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற 50 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    * 2021-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 27 தமிழர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது 57 தமிழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    * தேர்ச்சி பெற்ற 57 பேரில் 50 பேர் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள்.

    * ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கினோம்.

    * தேர்ச்சி பெற்ற மாணவர்கள் டெல்லி செல்ல தலா ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் தேர்ச்சி.
    • தமிழில் தேர்வு எழுதிய காமராஜ், தங்கபாண்டியன் ஆகிய இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    UPSC தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர் ஆவார்.

    இதுபற்றி சிவச்சந்திரன் கூறுகையில், "யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்வில் வெற்றிபெற நான் முதல்வன் திட்டம் உதவிகரமாக இருந்தது" என்றார்.

    அதேபோல், இந்திய அளவில் 39ஆம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 50 பேரில் 18 பேர் முழுநேர உறைவிட பயிற்சி மேற்கொண்டவர்கள் ஆவர். மேலும் தமிழில் தேர்வு எழுதிய காமராஜ், தங்கபாண்டியன் ஆகிய இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    எது மகிழ்ச்சி?

    நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த #நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் #UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

    பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • மாதம் ரூ.16000 சம்பளத்தில் பணிபுரிய 78 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
    • நிகழ்ச்சியில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ப. மரியதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி உலகநாத அரசினர் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் முதல் கட்ட பயிற்சிக்காக, வங்கி, நிதி, சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) ஆகிய பாடங்களை கல்லூரியில் கணினி சாராத மூன்றாமாண்டு பயிலும் 122 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.

    அவர்களுக்கு செப்டம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை பயிற்சியளிக்கப்பட்டது. மாதிரி தேர்வு ஏப்ரல் 2023ல் நடத்தப்பட்டு (IIFL) சமஸ்தா, புளுசிப், பேங்க்பஸார் மற்றும் முத்தூட் நிதி நிறுவனங்களில் மாதம் ரூ.16000த்தில் பணிபுரிய 78 மாணவர்களுக்கு கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் மா.திருச்சேரன் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ப. மரியதாஸ், வணிக கூட்டுறவியல் தலைவர் தி.கிருபாநந்தன், பொருளியல் துறைத்தலைவர் முனைவர் பா.எழிலரசு, வரலாற்று துறைத்தலைவர் முனைவர் சு.ஜெகஜீவன்ராம், உடற்கல்வி இயக்குனர் முனைவர் சுருளி முருகாநந்தன் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை சண்முகப்பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியினை திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மரிய இராயப்பன் ஏற்பாடு செய்திருந்தார்.

    • பயிற்சி வகுப்பை கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • சுமார் 150 மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை முழு நேர அரசு பொதுநுாலக கட்டிடத்தில் நான் முதல்வன் திட்டம் வாயிலாக சுமார் 150 மாணவர்களுக்கு மத்திய தேர்வாணயம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற செயலாளா் மயிலேறும்பெருமாள், பயிற்சி அலுவலா் சதாசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரம்யா வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் நுாலக வாசகர் வட்ட செயலாளா் செண்பக குற்றாலம், நூலகர் ராமசாமி, நுாலக அரசுத்தேர்வு பொறுப்பாளா் விழுதுகள்சேகர் உள்பட பலா் கலந்து கொண்டனா். பயிற்சி வகுப்பில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 590 மாணவர்கள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட் னர்.

    நாகர்கோவில் :

    நான் முதல்வன் திட்டம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவ லக சிறு கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத் துக்கு மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

    நான் முதல்வன் திட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் குமரி மாவட்டத் தில் உள்ள 59 அரசு மேல்நிலைப்பள்ளி ணகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 590 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட் னர். பெற்றோரை இழந்த மாணவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள், நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள் போன்றோர் கள் அழைத்து செல்லப்பட்ட னர்.

    இந்த கல்வி ஆண்டில் (2023-2024) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 59 அரசு மேல்நிலைப்பள்ளி களி லிருந்து குறைந்தபட்சம் பள்ளிக்கு 35 மாணவர்கள் வீதம் மொத்தம் 2,065 மாணவர்கள் வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளுக்கு களப்பயண மாக அழைத்து செல்ல திட்டமிடப்பட் டுள்ளது. மாணவர்கள் கல்லூரி களுக்கு வரும்போது அவர்களை பேராசிரி யர்கள், நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் வரவேற்று கல்லூரியில் உள்ள அனைத்து உட்கட்ட மைப்பு வசதிகள், நூலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் போன்றவற்றை காண்பித்து மாணவர்க ளுக்கு ஆர்வமூட்டி அவர்களை கல்லூரியில் சேர தூண்ட வேண்டும்.

    70 மாணவர்களுக்கு 1 பஸ் வீதம் அரசு பஸ்கள் வசதி செய்யப்படும்.

    கூடுதல் பஸ்கள் தேவைப்படின் களப்ப யணம் மேற்கொள்ளப்படும் கல்லூரிகள், கல்லூரி பஸ் வசதி செய்யவும், அதற்கான செலவினம், மாணவர்க ளுக்கான உணவு வசதி போன்றவை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியிலிருந்து மேற்கொள்ளவும் தெரி விக்கப்பட்டுள்ளது. தனி யார் கல்லூரிகளையும் தேர்வு செய்ய ஆலோ சிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

    கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர்.
    • சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் உள்ள Durham பல்கலைக்கழகத்தில் ஒருவார பயிற்சி முடித்துவிட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இந்த சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவுத்திட்டம் மட்டுமல்ல; நான் விரும்பும் மாணவச் செல்வங்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்!

    இந்தத் திட்டத்தின்கீழ் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று பயிற்சி முடித்து திரும்பிய 25 மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, அவர்களது கண்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியையும் உள்ளங்களில் நிறைந்திருந்த நம்பிக்கையையும் கண்டேன். அவர்களது நம்பிக்கைதான் நாளைய நம் புகழுக்கான அச்சாணி!

    நாடும் நாமும் பெருமையடையக் கற்போம்!

    கல்வியைவிடச் சிறந்த செல்வம் ஏதுமில்லை எனக் கற்பிப்போம்!

    கல்வியே பெருந்துணை எனத் தடைகளை உடைத்து வெற்றிநடை போடுவோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×