search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இழப்பீடு தொகை"

    • விபத்தில் கால்களை இழந்த பெண் ஒருவருக்கு ரூ.48 லட்சத்திற்கான இழப்பீடு தொகை உடனடியாக வழங்கப்பட்டது.
    • மக்கள் நீதிமன்றம் நிகழ்வானது திருப்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணை குழு அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக மக்கள் நீதிமன்றம்( லோக் அதாலத் )நிகழ்வானது திருப்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான சொர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் நிலுவையில் உள்ள வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, வங்கி கடன், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்கு , சிவில் வழக்கு உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டு வருகிறது.இதில் விபத்தில் கால்களை இழந்த பெண் ஒருவருக்கு ரூ.48 லட்சத்திற்கான இழப்பீடு தொகை உடனடியாக வழங்கப்பட்டது.

    • இன்று அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரசத்திர்வு மையம் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது.
    • ஒரே நாளில் ரூ.1 கோடியே 13 லட்சம் இழப்பீடு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் சமரச தீர்வு மையம் எனும் மக்கள் நீதிமன்றம் மாதம் தோறும் முதல் வாரத்தில் நடைபெறும் அதன் அடிப்படையில் இன்று அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரசத்திர்வு மையம் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது.

    நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் முறையில் தீர்வு காணப்பட்டது.

    அதன் அடிப்படையில் விபத்து வழக்கு குடும்ப நல வழக்கு, மின்சார வாரிய வழக்கு, காசோலை வழக்கு, உரிமையியல் மற்றும் இதர வழக்கு, சொத்துப் பிரச்சனை, உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.அதன் அடிப்படையில் கடந்த 2022 -ம்ஆண்டு மணிராஜன் என்பவர் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கு ம்போது 2 சக்கர வாகனம் மோதிய விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு கை கால்கள் செயல் இழந்தன இந்த விபத்து குறித்த வழக்கு சமரசத் தேர்வு முறையில் தீர்வு காணப்பட்டு பாதிக்கபட்ட நபருக்கு 8 லட்சம் இழப்பீடு காசோலை யை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.

    இதேபோல கடந்த 2021 குரு என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் சேலம் - ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த ஆட்டோ மோதிய விபத்தில் கால் முறிவு ஏற்பட்டது இந்த வழக்கில் சமரச தீர்வு காணப்பட்டு குருவுக்கு ரூ.23 லட்சகான காசோலை வழங்கினார்.இதேபோல் செல்வம் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு லாரியை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குச் சென்றபோது பாம்பு கடித்தது. இந்த வழக்கில் சமரசத் தீர்வு காணப்பட்டு ரூ.10 லட்சம் காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்.

    மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ.1 கோடியே 13 லட்சம் இழப்பீடு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.

    அப்போது நீதிபதி சரண்யா மற்றும் மாவட்ட சட்டப் பணி ஆணை குழு செயலாளர் தங்கராஜ் வழக்கறிஞர்கள் ரகுபதி மற்றும் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • கமுதி புறவழிச்சாலைக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
    • கமுதி புறவழிச்சாலைக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

    பசும்பொன்

    கமுதியில் புறவழிச்சாலை அமைக்க கமுதி வருவாய் கிராமத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நிலம் வழங்கியவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து இழப்பீட்டுத் தொகை பெறலாம் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்திருந்தார். அதன்படி கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஜானகி தலைமை யில் இதற்கான கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட 12 பட்டாதாரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தனர். 12 பேருக்கும் இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் சேதுராமன், மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேஷ்வரன், தலைமை நில அளவையர் நாகவள்ளி மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

    • விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.26½ லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
    • சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் இந்த தொகை உரியவர்களிடம் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று லோக் அதாலத் சிறப்பு முகாம் நடந்தது. இதில் தீர்வு காணப்படாத வழக்குகளுக்கு இருதரப்பினரிடமும் பேசி முடித்து வைக்கப்பட்டது.

    அதன்படி சாலை விபத்தில் இறந்த ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் பேசி அந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

    மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம், மாவட்ட நீதிபதிகள் ராஜவேல், ரஜினி, மக்கள் நீதிமன்ற நீதிபதி தமிழரசன், சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா ஆகியோர் முன்னிலையில் இந்த தொகை உரியவர்களிடம் வழங்கப்பட்டது.

    ×