என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மத்தியப் பிரதேசம்"
- போர்வை வியாபாரியான தினேஷ் சிலாவத், மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
- . நிறைமாத கர்பிணியாக உள்ள இவரது மனைவி ரஜினிக்கு நேற்று மதியம் 2:30 மணியளவில், பிரசவ வலி ஏற்பட்டது.
ராஜஸ்தானை சேர்ந்த போர்வை வியாபாரியான தினேஷ் சிலாவத், மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். நிறைமாத கர்பிணியாக உள்ள இவரது மனைவி ரஜினிக்கு நேற்று மதியம் 2:30 மணியளவில், பிரசவ வலி ஏற்பட்டது. உடனே ஆட்டோ ரிக்க்ஷாவில் நீமுச் மாவட்ட மருத்துவமனைக்கு தனது மனைவியை தினேஷ் அழைத்துச்சென்றார்.
ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை அனுமதிக்க மறுத்து, உதய்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் தினேஷ் செய்வதறியாது தவித்த நிலையில் ரஜினிக்கு ஆட்டோ ரிக்க்ஷாவிலேயே குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறக்கும் சமயத்தில் அருகில் இருந்தவர்கள் ஆட்டோவை துணியால் மறைத்து உதவினர். தொடர்ந்து, தாயும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமாக உள்ளனர். முன்னதாக மருத்துவமனை ஊழியர்கள் கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்தது சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், மயக்க மருந்து நிபுணர் விடுமுறையில் இருப்பதால், சிசேரியன் பிரசவம் செய்ய சாத்தியமில்லை என்பதாலேயே கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்ததாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுகுறித்த விரிவான விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- மத்தியப் பிரதேசத்தில் வயதான தலித் தமபதியை கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தி செருப்பு மாலை அணிவித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- . இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவரகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் வயதான தலித் தமபதியை கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தி செருப்பு மாலை அணிவித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் முங்காளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிளோரா கிராமத்தில் வசித்து வரும் வயதான தலித் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியின் மகன் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அவர்மீது நேற்று முன்தினம் (மே 17) காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அந்த இளைஞரின் குடும்பம் கிராமத்தை விட்டு வெளியேறியது. இந்த நிலையில் இன்று (மே 20) அந்த இளைஞரின் வயதான தாய்-தந்தை கிராமத்துக்குள் வந்துள்ளனர்.
அப்போது அவர்களை பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து 10 க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று சரமாரியாக அடித்து துன்புறுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி செருப்புகளை கோர்த்து மாலையாக அவர்களின் கழுத்தில் அணிவித்திருக்கிறது.
இதனையடுத்து அந்த இடத்தில இருந்த கும்பல் தலைமறைவாகியுள்ளது. இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவரகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈவ் டீசிங் அந்த இளைஞர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேசம், தலித், தாக்குதல், கிராமம், போலீஸ், வழக்குப்பதிவு
- 2021 ஆம் ஆண்டில், காத்திருப்புப் பட்டியலில் இருந்த சுமார் 2.53 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன
- 2024-ம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 45.86 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு ரயில்வேக்கு ரூ.43 கோடி வருவாய் கிடைத்துள்ளது
2021 ஜனவரி மாதம் முதல், 2024 ஜனவரி மதம் வரை ரத்து செய்யப்பட்ட காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளின் மூலம், ரெயில்வே துறைக்கு ₹1229.85 கோடி வருவாய் கிடைத்துள்ளது
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் பாண்டே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்த தகவலை ரெயில்வே துறை வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில், காத்திருப்புப் பட்டியலில் இருந்த சுமார் 2.53 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் மூலமாக இந்திய ரெயில்வேக்கு ரூ.242.68 கோடி வருவாய் கிடைத்தது. 2022-ம் ஆண்டு, ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 4.6 கோடியாக அதிகரித்தது. இதன் மூலமாக வருவாய் ரூ.439.16 கோடியை எட்டியது. 2023-ம் ஆண்டில், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 5.26 கொடியாகவும், இதன் மூலம் ரூ.505 கோடி வருவாய் கிடைத்தது.
2024-ம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 45.86 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு ரயில்வேக்கு ரூ.43 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மொத்தத்தில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12.8 கோடிக்கும் அதிகமான காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன.
ரெயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன் உறுதிசெய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை ரத்துசெய்வதற்கு 60 ரூபாய் கட்டணமாக விதிக்கப்படும். அதேசமயம், ஏசி வகுப்புகளுக்கான கட்டணம் ரூ.120 முதல் ரூ.240 வரை வசூலிக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் மட்டும் தான் முழு தொகையும் திரும்ப பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஞ்சி கிரிக்கெட் கால்இறுதியில் மத்தியபிரதேச அணி 4 ரன் வித்தியாசத்தில் ஆந்திராவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
- மத்தியபிரதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அனுபவ் அகர்வால் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இந்தூர்:
89வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஆந்திரா மத்தியபிரதேசம் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் இந்தூரில் கடந்த 23ந் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் மத்தியபிரதேசம் 234 ரன்னும், ஆந்திரா 172 ரன்னும் எடுத்தன.
62 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேசம் 107 ரன்னில் சுருண்டது. இதைத்தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆந்திரா 3வது நாள் முடிவில் 44 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்து இருந்தது. ஹனுமா விஹாரி 43 ரன்களுடனும், கரண் ஷிண்டே 5 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
4வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆந்திர அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 69.2 ஓவர்களில் ஆந்திரா 165 ரன்னில் சரண் அடைந்தது. இதனால் மத்தியபிரதேச அணி 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக ஹனுமா விஹாரி 55 ரன்கள் சேர்த்தார். மத்தியபிரதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அனுபவ் அகர்வால் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
மும்பையில் நடைபெறும் பரோடாவுக்கு எதிரான கால்இறுதியில் முதல் இன்னிங்சில் மும்பை 384 ரன்னும், பரோடா 348 ரன்னும் எடுத்தன. 36 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய மும்பை 3வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 21 ரன் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய மும்பை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 102 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 379 ரன்கள் குவித்து மொத்தம் 415 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியுள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் ஹர்திக் தமோர் 114 ரன்னும், பிரித்வி ஷா 87 ரன்னும், ஷம்ஸ் முலானி 54 ரன்னும் எடுத்தனர். தனுஷ் கோடியன் 32 ரன்னுடனும், துஷார் தேஷ்பாண்டே 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பரோடா சுழற்பந்து வீச்சாளர் பார்கவ் பாத் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.
நாக்பூரில் நடைபெறும் விதர்பாகர்நாடகா அணிகள் இடையிலான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் விதர்பா 460 ரன்னும், கர்நாடகா 286 ரன்னும் எடுத்தன. 174 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய விதர்பா 196 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கர்நாடகா தரப்பில் வேகப்பது வீச்சாளர்கள் வித்வாத் கவீரப்பா 6 விக்கெட்டும், வைசாக் விஜய்குமார் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 371 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை ஆடிய கர்நாடகா ஆட்ட நேரம் முடிவில் 26 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. ரவிகுமார் சமார்த் 40 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் மயங்க் அகர்வால் (61 ரன்), அனீஷ் (1 ரன்) களத்தில் உள்ளனர். அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 268 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளது.
இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறும்.
- இந்துக் குறியீடான ஓம் என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள்.
- இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
ஓங்காரேஸ்வரர் கோவில், சிவபுரி, இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும்.
இது நர்மதை ஆற்றில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா என்னும் தீவொன்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
இது மத்தியப் பிரதேசத்திலுள்ள மோர்ட்டக்கா என்னும் இடத்திலிருந்து 12 மைல் (20 கிமீ) தொலைவில் உள்ளது. இத்தீவின் வடிவத்தை இந்துக் குறியீடான ஓம் என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள்.
இத்தீவில் அமரேஸ்வரர் கோவில் என இன்னொரு கோவிலும் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்