என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெவின் பீட்டர்சன்"

    • கேஎல் ராகுல்- அதியா தம்பதிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது.
    • தற்போது டெல்லி அணியில் கே.எல். ராகுல் இணைந்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 24 அன்று நடைபெற்ற போட்டியில் லக்னோவை வீழ்த்தி டெல்லி அணி திரில் வெற்றி பெற்று அசத்தியது.

    அண்மையில் தான் கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் தான் முதல் போட்டியில் டெல்லி அணியின் அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் விளையாடவில்லை.

    இந்நிலையில், தற்போது டெல்லி அணியில் கே.எல். ராகுல் இணைந்துள்ளார். இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சனின் பேட்டிங் ஸ்டைலை கே.எல்.ராகுல் ரீக்ரியேட் செய்த விடியோவை அந்த அணி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கெவின் பீட்டர்சன் போலவே கே.எல்.ராகுல் மிமிக்ரி செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • விக்கெட் கீப்பரான டோனி சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஓவர்கள் வீசி உள்ளார்.
    • இதில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

    மும்பை:

    நடப்பு ஐபிஎல் சீசனின் வர்ணனை பணியை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கவனித்து வருகிறார். நீங்கள் தானே டோனி கைப்பற்றிய முதல் மற்றும் ஒரே டெஸ்ட் விக்கெட்' என அவரிடம் பலரும் கேட்டு வருகின்றனர். இந்த சூழலில் அது தொடர்பாக வீடியோ ஆதாரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.


    இந்த கேள்விக்கு வித்திட்டவர் மகேந்திர சிங் டோனி தான். 2017 ஐபிஎல் சீசனின் போது அவர்தான் என்னுடைய முதல் டெஸ்ட் விக்கெட் என வேடிக்கையாக சொல்லி இருந்தார். அப்போது வர்ணனை பணியை கவனித்த பீட்டர்சன், மைக்ரோ போன் மூலம் புனே வீரர் மனோஜ் திவாரியுடன் பேசி இருந்தார். அப்போதுதான் இது நடந்தது. இது நடந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் 'நீங்கள் தானே டோனியின் முதல் டெஸ்ட் விக்கெட்' என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.


    இந்த நிலையில் கடந்த 2011-ல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் போட்டியின் வீடியோ கிளிப் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பீட்டர்சன். அந்த போட்டியின் முதல் நாள் அன்று டோனி பந்து வீசினார். அப்போது பீட்டர்சன் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அதில் ஒரு பந்து பீட்டர்சனின் பேட்டை உரசி சென்றது போல இருந்தது. 'அவுட்' என டோனி முறையிட்டார். நடுவரும் அவுட் கொடுத்தார். டிஆர்எஸ் பரிசீலனையில் பீட்டர்சன் அவுட் இல்லை என உறுதியானது.

    ஆதாரம் மிகத் தெளிவாக உள்ளது. நான் டோனியின் முதல் டெஸ்ட் விக்கெட் அல்ல. சிறப்பாக பந்து வீசி உள்ளீர்கள் எம்.எஸ்" என அந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் பீட்டர்சன்.


    விக்கெட் கீப்பரான டோனி சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஓவர்கள் வீசி உள்ளார். 6 ஓவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலும், 16 ஓவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அடங்கும். இதில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அது ஒருநாள் கிரிக்கெட்டில் கைப்பற்றியதாகும். மேற்கிந்திய தீவுகள் வீரர் டி.எம். டவுலின் மட்டுமே.


    • போட்டி முடிந்த பிறகும் மைதானத்தில் இருந்த எவரும் நகர்ந்து செல்லாமல் கூட்டம் முழுமையாக அங்கேயே இருந்தது.
    • ரசிகர்களின் இந்த செயல் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிளே-ஆப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பும் சிஎஸ்கே அணிக்கு பிரகாசமாக இருக்கிறது.

    தற்போது 13 போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கடைசி லீக் போட்டியை டெல்லி அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கும் செல்வார்கள். மேலும் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து நேரடியாக குவாலிபயர்-1-ல் விளையாடும் வாய்ப்பையும் பெரும் அளவிற்கு வலுவாக இருக்கிறது.

    இந்த சீசனின் கடைசி ஹோம் போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. துரதிஷ்டவசமாக இதில் தோல்வியை தழுவியது. போட்டி முடிந்த பிறகு டோனி உட்பட அணியின் மற்ற வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் இணைந்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தவாறு மைதானத்தை சுற்றி வளம் சென்றனர்.

    அந்த இடத்தில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் இருந்தார். அப்போது நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு, டோனிக்கு இது கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கெவின் பீட்டர்சன் கூறியதாவது:-

    டோனி உட்பட பலரும் சேப்பாக்கம் மைதானத்தில் வளம் வந்தபோது நான் அங்கே இருந்தேன். போட்டி முடிந்த பிறகும் மைதானத்தில் இருந்த எவரும் நகர்ந்து செல்லாமல் கூட்டம் முழுமையாக அங்கேயே இருந்தது. ரசிகர்களின் இந்த செயல் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இப்படிப்பட்ட ஆதரவு டோனிக்கு இருக்கும்பொழுது இந்த ஐபிஎல் தொடருடன் அவர் ஓய்வு பெறுவார் என்று எனக்கு தோன்றவில்லை.

    இந்த வருடம் புதிதாக வந்திருக்கும் இம்பேக்ட் வீரர் விதிப்படி, டோனி அடுத்த வருடமும் ஆடலாம். பேட்டிங்கில் 7-வது 8-வது இடத்தில் இறங்குவதால், அதில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் 20 ஓவர்கள் முழுமையாக அவரால் கீப்பிங் செய்ய முடியும். களத்தில் நின்று கொண்டு முடிவுகளை எடுக்கலாம்.

    அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னரே காலில் இருக்கும் பிரச்சனையை சரி செய்து கொண்டு இந்த வருடம் போலவே கடைசி கட்டத்திலும் பேட்டிங் இறங்கலாம். ஆகையால் டோனி ஓய்வு பெறுவது சரியாக இருக்காது என நம்புகிறேன். நாட்டு மக்கள் இதைதான் எதிர்பார்க்கிறார்கள். வருவார் என நினைக்கிறேன்.

    என்று அவர் கூறினார்.

    • ஐபிஎல் தொடரில் பீட்டர்சன் டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார்.
    • ஐபிஎல்லில் கடைசிவரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடுவேன் என்று விராட் கோலி கூறியிருந்தார்.

    ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஒரே அணிக்காக ஆடிவரும் ஒரே வீரர் என்ற தனித்துவமான சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி. ஐபிஎல் 16வது சீசனிலும் வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது ஆர்சிபி அணி.

    லீக் சுற்றின் கடைசி 2 போட்டிகளிலும் சதமடித்து ஐபிஎல்லில் 7 சதங்களுடன், அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். ஐபிஎல்லில் ஆர்சிபிக்காக 237 போட்டிகளில் ஆடி 7 சதங்களுடன் 7263 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை படைத்த அவரால் ஆர்சிபி அணிக்காக ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்கமுடியவில்லை. இந்த சீசனிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் ஆர்சிபி வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஐபிஎல்லில் கடைசிவரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடுவேன் என்றும், வேறு அணிக்காக ஆடுவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்றும் கோலி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் விராட் கோலி டெல்லி கேப்பிடள்ஸ் அணிக்காக ஆட வேண்டிய நேரம் வந்துவிட்டது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

    அதில், விராட் கோலியின் சொந்த ஊர் டெல்லி தான் என்ற நிலையில், அவர் டெல்லிக்காக ஆட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பீட்டர்சன் தெரிவித்துள்ளார். டெல்லி கேப்பிடள்ஸ் அணியும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.

    2008-ம் ஆண்டில் டெல்லி அணி விராட் கோலியை ஏலத்தில் எடுப்பதாக இருந்தது. ஆனால் டெல்லி அணிக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும் நிலையில் பிரதீப் சங்வானை ஏலத்தில் எடுத்தது. இல்லாவிடில் விராட் கோலி டெல்லி அணிக்காகதான் விளையாடிருப்பார். 

    பீட்டர்சன் டெல்லி அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விராட் கோலி சர்வதேச அளவில் 75 சதங்களை விளாசி, சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விரட்டிவருகிறார். சச்சின் சாதனையை கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2-வது டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக ஜாகீர் கான் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர்.
    • அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் 2-வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் வர்ணனையாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர். அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார். அதற்கு யுவராஜ் சிங் உங்களை பலமுறை அவுட்டாக்கி தம்முடைய பாக்கெட்டில் போட்டதை மறந்து விடாதீர்கள் என்று ஜாகீர் கான் பதிலடி கொடுத்தார்.

    இது குறித்து அவர்கள் பேசிய உரையாடல் பின்வருமாறு:-

    கெவின் பீட்டர்சன்: என்னுடைய பாக்கெட்டில் யார் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? மகத்தான டோனி. அவர் கம்ரான் அக்மலுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

    ஜாகீர் கான்: நான் சமீபத்தில் யுவராஜ் சிங்கை சந்தித்தேன் என்பது உங்களுக்கு தெரியும். அவர் அங்கே கெவின் பீட்டர்சன் இருப்பதை பற்றி என்னிடம் கூறினார்.

    கெவின் பீட்டர்சன்: ஆம்.. நீங்கள் அதை சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும். யுவராஜ் என்னை சில முறை அவுட்டாக்கியுள்ளார்.

    ஜாகீர் கான்: அதனால் கெவின் பீட்டர்சன் ஒரு பட்டப் பெயரை யுவராஜுக்கு கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது.

    கெவின் பீட்டர்சன்: ஆம் அதை யுவராஜ் தன்னுடைய இமெயில் முகவரியாக நீண்ட காலம் பயன்படுத்தினார். நாங்கள் சில மகத்தான போட்டி போட்டுள்ளோம்.

    (தொடர்ச்சி) களத்தில் எங்களுக்கிடையே சில அழகான போட்டியும் நடந்துள்ளது. நீண்ட காலம் நீங்கள் விளையாடும் போது இதுதான் நடக்கும். அப்போது நீங்கள் ஜாலியாக பேசும் வாய்ப்பு கிடைப்பதும் அதைப்பற்றிய நல்ல விஷயமாகும். அஸ்வின் அதே விஷயத்தை பென் ஸ்டோக்ஸிடம் கேரியர் முடிந்ததும் செய்வார். அவர்களும் இதே போல விளையாடி முடித்த பின் பேசி மகிழ்வார்கள்.

    என்று பேசினார்கள். 

    • குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதல் ஓவரை வீசவில்லை.
    • 3-வது பவுலராக ஆட்டத்தின் 4-வது ஓவரில்தான் பந்து வீச வந்தார்.

    அகமதாபாத்:

    ஹர்த்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. சுப்மன்கில் தலைமையிலான குஜராத் அணி தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி பெற்றது.

    குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதல் ஓவரை வீசவில்லை. 3-வது பவுலராக ஆட்டத்தின் 4-வது ஓவரில்தான் பந்து வீச வந்தார். ஹர்த்திக் பாண்ட்யா, லுகே வுட் ஆகியோருக்கு பிறகே வீசினார்.

    ஹர்த்திக் பாண்ட்யாவின் இந்த முடிவு தொடர்பாக டெலிவிஷன் வர்ணனையாளர்களான கவாஸ்கர், பீட்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    பும்ரா முதல் ஓவரை வீசாதது ஏன்? எனக்கு இது புரியவில்லை என்று பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு கவாஸ்கர் பதில் அளிக்கும்போது, மிக நல்ல கேள்வி, மிக மிக நல்ல கேள்வி என்றார்.

    • நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின.
    • இதில் ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் சதமடிக்க 18.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி நடப்பு தொடரில் 5-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறுகையில், கோட்சி முதலில் பந்து வீசுகையில் ஜெய்ஸ்வால் நிறைய ரன்களை அடித்து விடுகிறார். இதனால் 2வது ஓவரை வீச கோட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இது பாண்ட்யாவின் மோசமான கேப்டன்சிக்கு  உதாரணமாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 328 ரன்கள் குவித்தது.
    • பாகிஸ்தான் தரப்பில் ஷபிக், மசூத் சதம் விளாசினர்.

    பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 4 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சான் மசூத், தொடக்க வீரர் அப்துல்லா சபிக்குடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடினார்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த ஜோடி சதம் கடந்து அசத்தினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 253 ரன்கள் அமைத்து பாகிஸ்தானுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஷபிக் 102 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஷான் மசூத் 150 ரன்கள் கடந்து 151 ரன்களில் அவுட்டானார். இறுதியில் முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள் குவித்தது.

    இந்நிலையில் முல்தான் பிட்ச் பவுலர்களுக்கும் கொஞ்சமும் சாதகமாக இல்லாமல் பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் சாதகமாக இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முல்தான் மைதானம் தார் ரோட் போல இருக்கிறது. அங்கே டாஸ் வென்றது சிறப்பானது. அதில் ஷான் மசூத் பெடல் ஷூ போல விளையாடுகிறார். அதே போல மற்றொரு முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன். முல்தான் பிட்ச் பவுலர்களின் கல்லறை என்று வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.

    • இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது.
    • இந்திய அணிக்கான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்தி இணைந்துள்ளார்.

    மும்பை:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிந்த நிலையில், அடுத்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளன.

    டி20 தொடரில் சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்தி இணைந்துள்ளார். அவர் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் கூறுகையில், ஒரு நாள் போட்டிகளில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆட்டம் சிறப்பாக இருக்கும். ஏனெனில் அவர்கள் அதிக நேரம் செலவிட முடியும். இது ஒரு நீண்ட வடிவம், ஒவ்வொரு பந்தும் ஒரு நிகழ்வு அல்ல. ஆனால் இது ஒரு சிறந்த முடிவு என நான் நினைக்கிறேன்.

    இங்கிலாந்தின் பார்வையில் இது ஒரு ஏமாற்றமான தொடர். நான்காவது டி20 போட்டியில் துபேவுக்கு பதிலாக மாற்றீடு சரியாக செய்யப்பட்டிருந்தால் இங்கிலாந்து அங்கு வெற்றி பெற்றிருக்கும் என நினைக்கிறேன். வான்கடே போட்டியில் 2-2 என்ற கணக்கு வந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை என தெரிவித்தார்.

    • இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-3 என தோற்றாலும் கவலையில்லை.
    • பென் டக்கெட் இவ்வாறு பேசியதற்கு கெவின் பீட்டர்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கதொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியாவுடன் ஒருநாள் தொடரை இழந்தது குறித்து பேசிய இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், "எங்களின் நோக்கம் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதுதான். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-3 என தோற்றாலும் கவலையில்லை. நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம். எல்லாம் சரியான நேரத்தில் சிறப்பாக விளையாடுவதில் உள்ளது" என்று தெரிவித்தார்.

    பென் டக்கெட் இவ்வாறு பேசியதற்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "இங்கிலாந்து இந்தியாவிடம் 3-0 என தோற்றாலும் கவலையில்லை என்று டக்கெட் சொல்வது மிகவும் மோசமானது. இவ்வாறு ஒருபோதும் அவர் சொல்லிருக்க கூடாது" என்று பதிவிட்டுள்ளார். 

    • இங்கிலாந்து வீரர்கள் ஒரேயொரு நெட் செசனில் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்.
    • ஜோ ரூட் மட்டும் பேட்டிங் பயிற்சி மேற்கொண்ட நிலையில் பீட்டர்சன் இங்கிலாந்து அணி மீது குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த மூன்று போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்தியாவுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்துள்ள இங்கிலாந்து, இந்தியாவின் சூழ்நிலை மற்றும் இந்தியாவை அவமரியாதை செய்துவிட்டது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர கெவின் பீட்டர்சன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். ஒருநாள் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை என்ற செய்தியை கேட்டு பீட்டர்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியின்போது ரவி சாஷ்திரி "நான் கேள்வி பட்டதில் இருந்து, ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து ஒரேயொரு நெட் செசனில் மட்டுமே ஈடுபட்டுள்ளது. நீங்கள் கடினமான முறையில் தயாராகவில்லை என்றால், நீங்கள் போட்டியின் முடிவை நோக்கி செல்ல முடியாது" எனத் தெரிவித்தார்.

    இதற்கு கெவின் பீட்டர்சன் பதில் அளித்து கூறுகையில் "நானும் ரவி சாஷ்திரியும், இங்கிலாந்து வீரர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரமாக பயிற்சி எடுத்திருப்பார்கள் என பேசிக் கொண்டிருந்தோம். நாக்பூர் போட்டிக்கு முன்னதாக ஒரேயொரு பயிற்சி செசன் மட்டும் எடுத்துள்ளனர். அதன்பிறகு பயிற்சி மேற்கொள்ளவில்லை. ஜோ ரூட் மட்டும் வலைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். நீங்கள் ஆசிய கண்டத்திற்குள் விளையாட வந்துவிட்டு, பயிற்சி எடுக்க மாட்டேன் என்ற தவறுடன் வர முடியாது.

    ஒரு தொடரில் எந்த விதமான பயிற்சியும் இன்றி சிறப்பாக விளையாடுவேன் எனும் ஒரு விளையாட்டு வீரர் கிடையாது. அது ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி.

    மிகவும் வருத்தமாக இருக்கிறது. முதல் போட்டியில் இருந்து இங்கிலாந்து பயிற்சி மேற்கொள்வில்லை என்பதை கேட்டு திடுக்கிட்டு போனேன். முற்றிலும் திகைத்துப் போனேன்" என்றார்.

    மேலும், தனது எக்ஸ் பக்க பதிவில் "அனுபவியுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் இது சிறந்த நேரம். கோல்ஃப் விளையாடுங்கள். இங்கிலாந்திற்காக விளையாடுவதை மிகவும் ரசிக்கவும். ஆனால், கிரிக்கெட் கூற்றுப்படி ரன்கள் குவிப்பதற்கு பணம் பெறுகிறீர்கள். கிரிக்கெட் போட்டிகளை வெல்ல பணம் பெறுகிறீர்கள். கோல்ஃப் விளையாட பணம் பெறவில்லை. இது கோல்ஃப் தொடர் அல்ல. இது கிரிக்கெட் தொடர்.

    இங்கிலாந்து அணிக்காக போட்டியில் அனைத்தையும் கொடுத்துள்ளேன். இதனால் இங்கிலாந்துக்கு புறப்படக்கூடிய விமானத்தில் ஏறுவேன் என சொல்லக்கூடிய ஒரு வீரர் கூட இல்லை. ஜோ ரூட் மட்டும் சொல்லலாம். ஏனென்றால் அவர் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து அணி வெற்றிக்காக சிறந்த பங்களிப்பை கொடுத்தோம் எனக்கூற ஒரு வீரர் கூட இல்லை. இது எனக்கு வர்த்தமாக இருக்கிறது" என்றார்.

    • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்த தொடரில் இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்த விவாதங்களும் சமூகவலைதளத்தில் அதிகளவு நிலவி வருகின்றன.

    இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்த தங்களது கணிப்புகளை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர் கெவின் பீட்டர்சன் அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் குறித்து கணித்துள்ளார். அந்த வகையில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதி பெறும் என தெரிவித்துள்ளார்.

    இதே போல முன்னாள் இந்திய வீரர்களான முரளி விஜய், அஸ்வின், சஞ்சய் பங்கர், தீப் தாஸ்குப்தா, ஆகாஷ் சோப்ரா ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெறு அணிகள் குறித்து கணித்துள்ளனர்.

    இந்திய வீரர்கள் கணித்துள்ள அணிகள்:-

    முரளி விஜய்- இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா

    ஆகாஷ் சோப்ரா- இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா

    சஞ்சய் பங்கர் - இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா

    தீப் தாஸ்குப்தா- இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து

    அஸ்வின் - இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து 

    ×