என் மலர்
நீங்கள் தேடியது "மினிடைடல் பூங்கா"
- 34 கோடி ரூபாய் செலவில் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
- ஓராண்டில் இந்த மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை திட்டமிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை டெண்டர் கோரியுள்ளது.
திருவண்ணாமலையில் 34 கோடி ரூபாய் செலவில் 4 தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் இந்த மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை திட்டமிட்டுள்ளது.
2-ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
- மினிடைடல் பூங்கா 3.40 ஏக்கரில் ரூ.30.50 கோடி செலவில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுர அடி கட்டுமானபரப்பளவுடன் நிறுவப்படும்
தஞ்சாவூர்:
தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் திகழும் டைடல் பூங்கா நிறுவனம், 1996-2001 ஆட்சிக் காலத்தில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் நிறுவப்பட்டது.
இது, மாநிலம் முழுவதும் தகவல் தொழில் நுட்பத்துறையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட வித்திட்டது.
தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத்துறையின் சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் வகையில், தற்போது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி பரப்புள்ளதாக மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவை, டைடல் பூங்கா நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து டைடல் நியோ என்ற சிறப்பு நோக்க நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் மற்றும் திருப்பூர் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 24.06.2022 அன்றும், வேலுார் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 18.02.2023 அன்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அவற்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்களின் கட்டுமான பணிகள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகள் வரைபடத்தை பார்வையிட்டனர். தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே மேல வஸ்தாசாவடியில் அமைய உள்ள
மினிடைடல் பூங்கா 3.40 ஏக்கரில் ரூ.30.50 கோடி செலவில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுர அடி கட்டுமானபரப்பளவுடன் நிறுவப்படும்.
இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்கள் அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தங்கி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தவும் மற்றும் அப்பகுதிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மேம்படவும் வழிவகுக்கும்.
- மினி டைடல் பார்க் 63 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் அமைந்துள்ளது.
- மினி டைடல் பூங்கா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
மேலும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெல்வதை இலக்காக கொண்டு செயலாற்றுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் தொடக்கம், மினி டைடல் பூங்கா திறப்பு, தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வந்த முதலமைச்சர் விமான நிலையத்தில் இருந்து சத்யா ரிசார்ட் சென்று அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் மாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார்.
பிறகு, டைடல் பூங்காவில் புதிய நிறுவனங்களுக்கு இட ஒப்பந்த ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த மினி டைடல் பூங்கா தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் ரவுண்டானாவில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இப்பூங்காவானது வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.
சுமார் ரூ. 32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் குறிப்பாக தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா மேலும் ஒரு மைல்கல் திட்டமாக வடிவெடுத்துள்ளது.