search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசாரை கண்டித்து"

    • படுகாயம் அடைந்த விக்னேஷ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள கீழக் குறிச்சியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 32) இவர் சம்பவத்தன்று நடந்த தகராறில் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் விக்னேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாத போலீசாரை கண்டித்து கீழக்குறிச்சி கிராமத்தினர் மதுக்கூர்-மன்னார்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நீலகண்டன், தாசில்தார் சுகுமார், மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது வழக்கில் தொடர்புடை யவர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    அதன் பேரில் சாலை மறியலில் கைவிடப்பட்டது.

    இந்த சாலை மறியலால் மதுக்கூர்-மன்னார்குடி சாலையில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது.
    • வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்ராஜ். இவர் பத்மநாபபுரம் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.

    இவருக்கு சொந்தமான இடம் மங்கலம் பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் செல்லுவதற்கு ரோடு எடுப்பதற்கு மங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வழி எடுக்க இடம் கொடுக்காததால் தான் கொடுத்த ரூபாயை திரும்ப கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    குலசேகரம் போலீசில் இது தொடர்பாக ஜஸ்டின் ராஜ் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ஜஸ்டின் ராஜிற்கு ஆதரவாக பத்மநாபபுரம் வக்கீல் சங்க தலைவர் வின்சென்ட் தலைமையில் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பலன் இல்லாததால் வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் கல்லுரி மாணவ-மாணவிகள் சென்ற வாகனங்கள், அரசு பஸ்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. போராட் டம் இரவு 7.30 மணி வரை நீடித்தது. இன்ஸ்பெக்டர் வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று வழக்கறிஞர்கள் கூறினார்கள்.

    இதனால் குலசேகரம் பகுதியில் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாலை நேரமானதால் பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆவேச மடைந்து போராட்டம் நடத்தியவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    உடனடியாக குலசேகரம் இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இரவு தக்கலை டி.எஸ்.பி. குலசேகரம் போலீஸ் நிலையம் வந்து இன்ஸ்பெக்டருடன் ஆலோசனை நடத்தினார்.

    ×