என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுக்கூரில் கிராம மக்கள் சாலை மறியல்
- படுகாயம் அடைந்த விக்னேஷ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர்.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே உள்ள கீழக் குறிச்சியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 32) இவர் சம்பவத்தன்று நடந்த தகராறில் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் விக்னேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாத போலீசாரை கண்டித்து கீழக்குறிச்சி கிராமத்தினர் மதுக்கூர்-மன்னார்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நீலகண்டன், தாசில்தார் சுகுமார், மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது வழக்கில் தொடர்புடை யவர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர்.
அதன் பேரில் சாலை மறியலில் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியலால் மதுக்கூர்-மன்னார்குடி சாலையில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.