search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் பிரதமர்"

    • இன்று 60வது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை.
    • "இந்தியாவின் மாணிக்கத்திற்கு" அவரது நினைவுநாளில் எங்கள் பணிவான அஞ்சலி.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1964ம் ஆண்டு மே 27 அன்று தனது 74வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

    இந்நிலையில், இன்று 60வது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து, நேருவை நினைவு கூர்ந்த கார்கே, "நவீன இந்தியாவின் சிற்பி பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஒப்பற்ற பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வரலாறு முழுமையடையாது. அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு சென்றவர். ஜனநாயகத்தின் அர்ப்பணிப்புள்ள பாதுகாவலர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் மற்றும் நமது உத்வேகத்தின் ஆதாரம்" என குறிப்பிட்டுள்ளார்.

    "இந்தியாவின் மாணிக்கத்திற்கு" அவரது நினைவுநாளில் எங்கள் பணிவான அஞ்சலி.

    பண்டித ஜவஹர்லால் நேரு கூறியது - "நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம், நாட்டின் ஒற்றுமை நமது தேசிய கடமையாகும்.

    நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றலாம், வெவ்வேறு மாநிலங்களில் வாழலாம், வெவ்வேறு மொழிகளைப் பேசலாம், ஆனால் அது நமக்குள் ஒரு சுவரை உருவாக்கிவிடக் கூடாது. எல்லா மக்களும் முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகளைப் பெற வேண்டும்.

    நம் நாட்டில் சிலர் பெரும் பணக்காரர்களாகவும், பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. இன்றும் காங்கிரஸ் கட்சியும் அதே நீதியின் பாதையையே பின்பற்றுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவன்னா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு.
    • பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக புகார்.

    முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் ரேவன்னா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவன்னா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண்ணை பணிக்கு அமர்த்தியதாக ரேவன்னா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    முன்னாள் பிரதமர் தேகவுடாவின் மகன் மற்றும் பேரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கடந்த 2019ம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துக் கொள்ள இருந்தனர்.

    நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கும் (43) அவரது நீண்ட நாள் காதலரான க்லார்கே கேஃபோர்டுக்கும் (47) கடந்த 2019ம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    பிறகு, கொரோனா பரவல் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துக் கொள்ள இருந்தனர். ஆனால், கொரோனா தொற்று காரணமாக மீண்டும் திருமணம் தள்ளிப்போனது. 

    இந்நிலையில், ஜெசிந்தா ஆர்டனுக்கும் க்லார்கே கேஃபோர்டுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்பேலாது ஆர்டெர்ன் ஒரு வெள்ளை நிற ஆடையும், கேஃபோர்ட் கருப்பு நிற உடையையும் அணிந்திருந்தார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மணமக்கள் இருவருக்கும் உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிலை அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா தீர்மானம் நிறைவேற்றினர்.
    • மாவட்ட பொருளாளர் நவீன அரசு நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமை யில் நடைபெற்றது. பொதுச் செயலாளர்கள் குமார், பாலகிருஷ்ணன், ராஜ்கு மார் ஆகியோர் முன்னிலை வகித்து தீர்மானங்கள் வாசித்தனர்.

    துணைத்தலைவர்கள் வினோத்குமார், ஜோதி மணிவண்ணன் ஆகியோர் வரவேற்று பேசினர். சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளாட்சி பிரிவு மாநில தலைவர் சோழன் சீதா பழனிச்சாமி, தேசிய பொது குழு உறுப்பினர்கள் சண்முகராஜா, மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தி.மு.க. ஊழல் பட்டியலை வெளி யிட்ட மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாராட்டு தெரிவிப்பது, இந்தியா முழுவதும் தங்க நாற்கர சாலை திட்டத்தை நிறைவேற்றிய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு மதுரை மாவட்ட பகுதியில் சிலை அமைக்க வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    செயற்குழு கூட்டத்தில் மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு , செயலா ளர்கள் செண்பக பாண்டி யன், ரமேஷ் கண்ணன், தனலட்சுமி, மாநில மகளிர் அணி செயலாளர் மீனாம்பிகை, பட்டியல் அணி செயலாளர் சிவாஜி, ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மகளிர் அணி தலைவர் மீனா இசக்கிமுத்து, இளைஞரணி தலைவர் பாரிராஜா, வழக்கறிஞர் அணி தலைவர் அய்யப்ப ராஜா, மருத்துவ பிரிவு தலைவர் முரளி பாஸ்கர், ஐ.டி. பிரிவு மணிவண்ணன் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் நவீன அரசு நன்றி கூறினார்.

    ×