search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமஜென்ம பூமி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழாவின் 9-வது நாளான இன்று ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
    • சூரிய கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான இன்று (17-ந்தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

    சூரிய கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

    இந்த அபூர்வ நிகழ்வை பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.
    • சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9- வது நாளான நாளை (17-ந்தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடக்கிறது.

    இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது என கோவில் கட்டுமான குழு தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது.

    பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.

    இந்த அபூர்வ நிகழ்வு சுமார் 5 நிமிடம் நீடிக்கும். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் காணும் வகையில் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராம நவமி விழாவையொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

    • கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கள ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப வியூகம் வகுத்து பா.ஜனதாவை வீழ்த்தி அமோக வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்துள்ளது.
    • ராமர் கோவில் கட்டியதை தொடர்ந்து பா.ஜனதாவின் செல்வாக்கு கர்நாடகத்தில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கள ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப வியூகம் வகுத்து பா.ஜனதாவை வீழ்த்தி அமோக வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்துள்ளது. அதே பாணியை பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க முடிவு செய்த காங்கிரஸ் கடந்த டிசம்பர் மாதம் கள ஆய்வு மேற்கொண்டது. இதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்காக பா.ஜனதாவுக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா என அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களிடம் கருத்து கேட்டு கள ஆய்வை காங்கிரஸ் மேற்கொண்டது. அந்த ஆய்வில் காங்கிரசுக்கு அதிர்ச்சி தரும் தகவல் தெரியவந்துள்ளது.

    அதாவது ராமர் கோவில் விவகாரம் உள்ளிட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சில முடிவுகள், திட்டங்களுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதும், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக ராமர் கோவில் கட்டியதை தொடர்ந்து பா.ஜனதாவின் செல்வாக்கு கர்நாடகத்தில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    மேலும் காங்கிரஸ் நடத்திய ஆய்வின் படி, 10 பேரில் 4 பேர் பா.ஜனதாவுக்கும், 3 பேர் காங்கிரசுக்கும் வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். மீதமுள்ள 3 பேர் வேட்பாளர் யார்?, அவரது சாதியை பார்த்து வாக்களிப்போம் என்றும் கூறியுள்ளனர். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் கொஞ்சம் கவலையில் உள்ளனர்.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியதையும், எவ்வளவு மக்கள் பயன்அடைந்துள்ளனர் என்பது பற்றி ஒவ்வொரு வாக்காளர்களிடமும் கொண்டு சேர்க்கவும் தேர்தல் வியூகங்களை மாற்றி அமைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    • அயோத்தியில் ராமர் கோவிலில் கடந்த ஜனவரியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • இதையடுத்து தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

    லக்னோ:

    அயோத்தியில் மிக பிரமாண்டமான 3 அடுக்குகள் கொண்ட ராமர் கோவில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஜனவரி மாதம் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதையடுத்து, அயோத்தி நகருக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் பல்வேறு அரசியல் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பலர் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் தனது குழந்தையுடன் அயோத்தி ராமஜென்ம பூமிக்கு இன்று சென்றார். அங்கு பால ராமரை தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

    இதுதொடர்பான புகைப்படங்களை கோவில் பூசாரி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பால ராமரை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
    • காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அயோத்தி:

    அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 23-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    பால ராமரை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இடையில் 2 மணி நேரம் நடை அடைக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் கோவில் நடை அடைப்பு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறியதாவது:-

    அயோத்தி ராமர் கோவிலில் தினமும் மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, தினமும் ஒரு மணிநேரம் மட்டும் கோவில் நடை அடைக்கப்படும் என்று அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    இவ்வாறு தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறினார்.

    • விமானத்துக்கான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஏற்கெனவே தொடங்கியது.
    • அயோத்திக்கு விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு 23-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று முதல் விமான சேவை தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி அயோத்திக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டது.

    சென்னையில் இருந்தும் இன்று முதல் அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 3.15 மணிக்கு அயோத்தி சென்றடையும். அதேபோல மறு மார்க்கமாக அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.20 மணிக்கு சென்னை வந்து சேரும்.

    இந்த விமானத்தில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விமானத்துக்கான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஏற்கெனவே தொடங்கியது.

    முன்பதிவு தொடங்கியபோது நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், நேரம் செல்லச்செல்ல முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சில மணி நேரங்களில் விமான கட்டணம் பல மடங்கு எகிறியது.

    அதன்படி இன்று அயோத்திக்கு சென்று வர நபர் ஒருவருக்கு ரூ.52,134 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால் அயோத்திக்கு விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த கட்டணத்தில் பக்தர்களை அயோத்திக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • வருகிற 8-ந் தேதி முதல் இந்த மாத இறுதி வரை 23 சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் செல்கிறார்கள்.
    • மானாமதுரையில் இருந்து 14 மற்றும் 28-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் செல்கிறது.

    சென்னை:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றதும் சிரமம் இல்லாமல் அயோத்தி செல்ல ஏற்பாடு செய்யும்படி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பா.ஜனதா தொண்டர்களும், பக்தர்களும் கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இதற்கான ஏற்பாடுகளை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தார்.

    ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 பொறுப்பாளர்கள், 6 மாவட்டங்களுக்கு ஒரு பார்வையாளர் வீதம் நியமிக்கப்பட்டு அயோத்தி செல்ல விரும்புபவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் ஆர்வப்பட்டதால் சிறப்பு ரெயில்கள் பல பகுதிகளில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 8-ந் தேதி முதல் இந்த மாத இறுதி வரை 23 சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் செல்கிறார்கள்.

    கோவையில் இருந்து 8, 13, 18, 23, 28 ஆகிய தேதிகளில் ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.2,600.

    திருப்பூரில் இருந்து 10, 15, 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.2,600 ஈரோட்டில் இருந்து 11, 16, 21 மற்றும் 26-ந் தேதிகளில் ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.2,400.

    சேலத்தில் இருந்து 12, 17, 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் புறப்படுகிறது. கட்டணம் ரூ.2,300.

    மானாமதுரையில் இருந்து 14 மற்றும் 28-ந் தேதிகளில் சிறப்பு ரெயில் செல்கிறது. கட்டணம் ரூ.3,100.

    21-ந் தேதி மதுரை, 29-ந் தேதி திருநெல்வேலி, 8-ந் தேதி கன்னியாகுமரி, 15-ந் தேதி நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

    நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து செல்லும் ரெயில்கள் கேரளா வழியாக செல்லும். நெல்லை, கன்னியாகுமரியில் இருந்து ரூ.3,800-ம், நாகர்கோவிலில் இருந்து ரூ.3,700-ம் கட்டணம். 

    • அயோத்தி ஆலயத்துக்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் திரும்பி இருப்பதாக உத்தரபிரதேச மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    • 2-வது, 3-வது நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள்

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 22-ந் தேதி ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. பிரதமர் மோடி அதில் கலந்துகொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

    மறுநாள் 23-ந்தேதி முதல் பாலராமரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அயோத்தி ஆலயத்துக்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் திரும்பி இருப்பதாக உத்தரபிரதேச மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனவே பால ராமரை தரிசிக்க அயோத்தி நோக்கி கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

    முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் அயோத்தியில் திரண்டனர். 2-வது, 3-வது நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் அயோத்தி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த திணறினார்கள்.

    இந்த நிலையில் நேற்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் இன்று அதிகரித்தது. இன்று காலை அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தரிசன நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதால் ஏராளமான பக்தர்கள் ராமரை தரிசிக்க முடிகிறது.

    இன்று (சனிக்கிழமை) 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அயோத்தியில் குவிந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 4 நாட்கள் மட்டும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் பாலராமரை தரிசனம் செய்து இருக்கிறார்கள்.

    அடுத்த வாரத்துக்குள் ராமரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதால் அயோத்தி ராமர் கோவிலுக்கு கிடைக்கும் காணிக்கை பணத்தின் அளவும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராமரை வணங்கிய கரங்கள், பிரதமரை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது.
    • பகவான் ராமரின் பாத சுவடில், நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவை செய்கிறீர்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 22-ந் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேக வரலாற்று நிகழ்வில், மில்லியன் கணக்கான இந்தியர்களின் இதயங்கள் மகிழ்ச்சியாலும், பக்தியாலும் நிறைந்திருந்ததை உணர முடிந்தது.

    ராமரை வணங்கிய கரங்கள், பிரதமரை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது. பகவான் ராமரை போலவே, பிரதமரின் மனிதநேயம், தார்மீக ஒருமைப்பாட்டிற்கான சேவை ஈடு இணையற்றது.

    பகவான் ராமர் அனைத்து சவால்களுக்கும் எதிராக உறுதியாக நின்று தனது வாழ்க்கையை நிலத்திற்கும், உயிர்களுக்கும் சேவை செய்து அர்ப்பணித்தார்.

    பகவான் ராமரின் பாத சுவடில், நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்துக்கு சேவை செய்கிறீர்கள். தேசம் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும். பிரதமருக்கு புதுவை மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகிறார்கள்.
    • அயோத்திக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் நகருக்குள் வாகன போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த திங்கட்கிழமை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

    மிக கோலாகலமாக நடந்த இந்த விழாவில் சுமார் 8 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். இதையடுத்து மறுநாள் செவ்வாய்க்கிழமை முதல் ராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள ராமர் சிலை சிரித்த முகத்துடன் கண்கவரும் வகையில் இருப்பதால் வடமாநில மக்களிடம் அவரை உடனடியாக தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் அயோத்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    ஏற்கனவே கடந்த வாரம் முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் தங்கி இருந்தனர். இதனால் முதல் நாளிலேயே சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமரை தரிசித்தனர். நேற்றும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் ராமரை கண்டு வழிபட்டனர்.

    கடந்த 2 நாட்களில் சுமார் 9 லட்சம் பக்தர்கள் பாலராமரை வழிபட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) 3-வது நாளாக சிறப்பு ஆரத்தியுடன் அயோத்தி ராமர் ஆலயம் திறக்கப்பட்டது. இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகிறார்கள்.

    இன்றும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமரை வழிபட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஆலயங்கள் வரிசையில் ராமர் ஆலயம் முதன்மை இடத்துக்கு வந்துள்ளது.

    அயோத்திக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் நகருக்குள் வாகன போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. என்றாலும் மக்கள் 4 சக்கர வாகனங்களில் வருவது அதிகரித்து உள்ளது.

    அந்த வாகனங்கள் அனைத்தும் அயோத்தியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து பக்தர்கள் நடந்தே சென்று ராமரை தரிசிக்கிறார்கள். கடும் குளிரையும் கண்டு கொள்ளாமல் பக்தர்கள் அதிகாலையிலேயே ராமர் ஆலயத்துக்கு வருவது ஆலய நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் தேவையான குடிநீர், உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

    இதற்கிடையே அயோத்தி ராமர் கோவிலுக்கு கடந்த 2 தினங்களாக காணிக்கையும் குவிந்து வருகிறது. முதல் நாளில் இணைய தளம் வழியாக ரூ.3.17 கோடி காணிக்கை கிடைத்தது. பக்தர்கள் காணிக்கையை நேரடியாக செலுத்துவதற்காக அயோத்தி ஆலய வளாகத்தில் 10 இடங்களில் காணிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    அயோத்தி ராமருக்கு தினமும் 5 ஆரத்தி நடத்தப்படுகிறது. காலையில் 2 ஆரத்தி, மதியம் ஒரு ஆரத்தி, மாலை 2 ஆரத்தி என 5 ஆரத்தி நடக்கிறது. இதை பார்க்கவே அதிக பக்தர்கள் திரள்கிறார்கள்.

    ராமருக்கு தினமும் ஆகம விதிகளின்படி அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஆடைகளின் வண்ணங்கள், நகைகள் ஆகியவையும் பாரம்பரிய முறைப்படி அணிவிக்கப்படுகிறது.

    வாரத்தில் 7 நாட்களும் கிழமைக்கு ஏற்ப ராமருக்கு உடை அணிவிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ராமருக்கு மெரூன் கலரில் பட்டாடை அணிவிக்கப்பட்டது. நேற்று பச்சை நிறத்திலும், இன்று மஞ்சள் நிறத்திலும் வஸ்திரங்கள் சாத்தப்பட்டன.

    ராமருக்கு ஏற்கனவே நாடு முழுவதும் இருந்து ஏராளமான பரிசு பொருட்கள் வந்து குவிந்துள்ளன. தொடர்ந்து பரிசு பொருட்கள் வந்து கொண்டே இருக்கிறது. நேற்று மும்பையில் இருந்து ஒருவர் 7 அடி உயரமுள்ள வாள் ஒன்று பரிசாக வழங்கினார்.

    அந்த வாள் 80 கிலோ எடை கொண்டது. தங்க முலாம் பூசப்பட்ட அந்த வாள் ராமர் பூஜைகளின்போது பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    • அயோத்தி ராமர் கோவிலில் கடந்த 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
    • முதல் நாளான நேற்று முன்தினம் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமபிரானை தரிசித்தனர்.

    அயோத்தி:

    அயோத்தி ராமர் கோவிலில் கடந்த 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் பக்தர்களின் தரிசனத்துக்காக கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் ராம பிரானை தரிசித்து வருகின்றனர்.

    இதில் முதல் நாளான நேற்று முன்தினம் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமபிரானை தரிசித்தனர். அன்றைய தினத்தில் மட்டும் காணிக்கையாக பக்தர்கள் ரூ.3 கோடியே 17 லட்சம் செலுத்தி உள்ளதாக கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

    • ராமர் சிலைக்கு நாடு முழுவதும் இருந்து தங்க, வைர நகைகள் வந்து குவிந்துள்ளன.
    • ராமரின் பாதத்தில் அணிவிக்கப்படும் பாதுகைகளும் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு நாடு முழுவதும் இருந்து தங்க, வைர நகைகள் வந்து குவிந்துள்ளன. அதில் அனைவரையும் கவருவது 1.7 கிலோ எடையுள்ள தங்க மாலை ஆகும்.

    இதை மிக நுணுக்கமாக தயார் செய்துள்ளனர். அதில் வைரங்கள் உள்பட நவரத்தினங்களும் இடம் பெற்றுள்ளன. 18,567 சிறிய வட்ட வடிவ வைரங்கள் அதில் பதிக்கப்பட்டுள்ளன.

    மேலும் சுமார் 3 ஆயிரம் நவரத்தின கற்கள் அந்த மாலையில் பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

    அதுபோல 5 அடுக்கு கொண்ட நெக்லசும் ராமரின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல அமைந்துள்ளது. பக்தர்கள் அன்பளிப்பாக கொடுத்தது தவிர அயோத்தி ஆலய நிர்வாகம் சார்பிலும் ராமருக்கு பல்வேறு நகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. லக்னோவை சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரர் இந்த நகைகளை தயார் செய்து கொடுத்துள்ளார்.

    நெற்றிசுட்டி, இரண்டு கைகளிலும் அணியும் அணிகலன்கள், இடுப்பில் கட்டப்படும் அலங்கார நகைகள், கிரீடங்கள் என ராமருக்கு விதவிதமான நகைகளை தயார் செய்து உள்ளனர். 500 கிராம் எடை கொண்ட சிறிய நெக்லஸ் ஒன்றும் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    ராமருக்கு அணிவிக்கப்படும் தங்க மாலைகளில் விஜய்மாலை மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த தங்க மாலை சுமார் 2 கிலோ எடை கொண்டதாகும்.

    ராமர் கையில் வைத்திருக்கும் அம்பு-வில் ஒரு கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கையில் போட்டுள்ள வளையல்கள் 850 கிராம் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 100 காரட் வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

    ராமரின் பாதத்தில் அணிவிக்கப்படும் பாதுகைகளும் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது. அவை 560 கிராம் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளன. ராமருக்கு கையில் அணிவிக்கப்படும் மோதிரங்களும் பல்வேறு வகையான நவரத்தினங்களால் பதிக்கப்பட்டுள்ளன.

    ×