என் மலர்
நீங்கள் தேடியது "Experiment"
- குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
- 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள உம்பளப்பாடி ஊராட்சி இளங்கார்குடி கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ஊராட்சித் தலைவர் யசோதா சரவணன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றியக் குழு தலைவர் சுமதி கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சச்சிதானந்தம் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்து, கால் நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் அடங்கிய பொட்டலங்களை கால்நடை உரிமையாளர்களிடம் வழங்கினார்.
மேலும், சிறப்பாக விவசாயம் செய்த விவசாயிகளுக்கும் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார்.
முகாமில், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் முறை சிகிச்சை, குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
முகாமில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாவட்ட கால்நடை உதவி இயக்குநர் கண்ணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் பழனிவேல், கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கமித்ரா அபிவதி, சரவணன், ராஜா, கால்நடை ஆய்வாளர்கள் தமிழ்வாணன், தனலட்சுமி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மதியழகன், சாந்தி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை பாதுஷா, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன், மாவட்ட பொருளாளர் பக்ருதீன், கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட பலா கலந்து கொண்டனர்.
- வயல் வரப்பில் நடந்து வந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலம் திருநள்ளார் தென்னங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 35) கூலித்தொழிலாளி.
இவரும் இவருடைய நண்பர் தருமபுரம் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் (32) என்பவரும் திருமருகல் ஒன்றியம் புத்தகரத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வயலில் டிரோன் எந்திரம் மூலம் களைக் கொல்லி மருந்து அடித்துள்ளனர்.
அப்போது வயல் வரப்பில் நடந்து வந்த போது திடீரென ராமகிருஷ்ணன் மயங்கி வயலில் விழுந்தார்.
உடன் அக்கம் பக்கத்தினர் ராமகிருஷ்ணனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரவி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த நாஞ்சி க்கோட்டை கன்னி தோப்பு காட்டு பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் தஞ்சை அடுத்த நாஞ்சிக்கோட்டை கன்னிதோப்பை சேர்ந்த பழனிவேல் மனைவி லோகநாதன் அஞ்சம்மாள் (வயது 72) என்பதும், அவரது மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து லோகநாதன் அஞ்சம்மாள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதன் அஞ்சம்மாள் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா ? என்ற பல்ேவறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
- இது சிவகலாவுக்கு தெரிய வரவே கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
- தொட்டி குடிசை கிராமத்திற்கு கொண்டு வந்து கடந்த 8 தேதி அடக்கம் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தொட்டி குடிசை கிராமத்தைச் சேந்தவர் ரவீந்திரன் (வயது 45), இவரது மனைவி சிவகலா (வயது 38). இவர்களுக்கு சிவரஞ்சனி (வயது 19) என்ற மகளும், சிலம்பரசன் (வயது 17) என்ற மகனும் உள்ளனர், ரவீந்திரன் சென்னை குமணன்சாவடியில் உளள தனியார் பள்ளியில் டிரைவராக பணிசெய்வதால், இவர்கள் அனைவரும் சென்னை காட்டு ப்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். .அதே பள்ளியில் அட்டெண்டராக பணிபுரியும் மாங்காடு பகுதியை சேர்ந்த பெண்ணுடன் ரவீந்திரனுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது சிவகலாவுக்கு தெரிய வரவே கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 7-ந்தேதி சிவரஞ்சனி கல்லூரிக்கு சென்று விட்டார். சிலம்பரசன் வெளியே சென்று விட்டார். கல்லூரி முடித்து மாலை 3 மணிக்கு சிவரஞ்சனி வீட்டுக்கு வந்தபோது தனது தாய் சிவகலா மயங்கிய நிலையில் படுத்துக் கிடந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்களை உதவிக்கு அழைத்த சிவரஞ்சனி, தனது தாயை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். சிவகலாவை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து சிவகலாவின் உடலை ரவீந்திரனின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தொட்டி குடிசை கிராமத்திற்கு கொண்டு வந்து கடந்த 8 தேதி அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி தனது தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் சென்னை பூவிருந்தவல்லி போலீஸ் நிலையத்தில் சிவரஞ்சனி புகார் அளித்தார். புகாரின் பேரில் பூவிருந்தவல்லி போலீசார் வழக்கு பதிவு ரவீந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்,, புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ்-க்கு சென்னை போலீசார் தகவல் அனுப்பினர். அதன் பேரில் தாசில்தார் பாஸ்கரதாஸ் விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் பிணைத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தர விட்டார். அதன்படி இன்று காலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் மதுவரதன், சண்முகம் தலைமையிலான மருத்துவ குழு தொட்டி குடிசை கிராமத்திற்கு வந்தனர். திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் பாஸ்கரதாஸ், சென்னை பூவிருந்தவல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் முன்னிலையில் சிவகலாவை புதைத்த இடத்திலிருந்து உடலை தோண்டியெடுத்து அங்கேயே அமைக்கப்பட்ட தற்காலிக கூடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வட்டாட்சியர் வழியாக சென்னை போலீ சாரிடம் வழங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்த கவலறிந்து சுடுகாட்டிற்கு வந்த கிராம மக்களை திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் சுடுகாட்டினுள் விடாமல் தடுத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
- மெலட்டூரில் இருந்து நரியனூர் வந்த கார் குமாரசாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள ஏர்வாடி கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 40), விவசாயி, இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அன்னப்பன்பேட்டையில் இருந்து மெலட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
நரியனூர் அருகே வந்தபோது எதிரே மெலட்டூரில் இருந்து நரியனூர் நோக்கி சென்ற கார் குமாரசாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த நிலையில் கிடந்த குமாரசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குமாரசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மெலட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாடுபிடி வீரர்கள் முறையான பரிசோதனைக்குட்பட்டு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கலந்து கொள்வர்.
- மாதாக்கோட்டையில் நாளை நடைபெறுவது 3-வது ஜல்லிக்கட்டு.
தஞ்சாவூர்:
தஞ்சை மாதாக் கோட்டையில் ஆண்டுதோறும் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு திருவிழா நடந்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நாளை (சனிக்கிழமை ) நடைபெறவுள்ளது.
காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் முறையான பரிசோதனைக்கு உட்பட்டு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கலந்து கொள்வர்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் 2 ஜல்லிக்கட்டு நடந்து முடிந்துள்ளது.
மாதாக்கோட்டையில் நாளை நடைபெறுவது 3-வது ஜல்லிக்கட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
- சாலக்கடை பகுதிக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கரியாபட்டிணம் காவல்சரகம் தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 50) விவசாய கூலி தொழிலாளி.
இவர் நேற்று அருகில் உள்ள சாலக்கடை பகுதிக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதைத் தொடர்ந்து உறவினர்கள் வெங்கடாசலத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை சாலக்கடை பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் வெங்கடாஜலம் இறந்து கிடந்தார்.
இது குறித்து பொது மக்கள் கரியாபட்டினம் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கன்னிகா, ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடாஜலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கரியாபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? கொலை நடந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
- திடீரென மயக்கம் ஏற்பட்டு கடலுக்குள் தவறி விழுந்துள்ளார்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள அந்தோணியார்புரம் கொள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 33) மீனவர்.
இவர் நேற்று கடலுக்குச் சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு தவறி கடலுக்குள் விழுந்துள்ளார்.
உடன் வந்த மீனவர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவேஉயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சேதுபாவா சத்திரம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்து போன அந்தோணிராஜ்-க்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இச்சம்பவம் அக்கிராமத்தில் மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- எல்.ஜே.நகரில் உள்ள பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- 145 பேருக்கு எக்கோ, உடல் ரத்த அழுத்தம் மற்றும் பொது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி கிராமம் தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டருடன் இணைந்து எல்.ஜே.நகரில் உள்ள நியூ விஷன் நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியில் இலவச மருத்துவ முகாமை நடத்தினர்.
இந்த முகாம் நடத்திட தமிழ் பல்கலை கழக வளாக குடியிருப்போர் நலசங்க தலைவர் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், பாரதி நகரில் வசித்து வரும் முன்னாள் படைவீரர் எஸ்.மணிவண்ணன் ஆகியோர் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இம்மருத்துவ முகாமில் 205 நபர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 145 நபர்களுக்கு எக்கோ பரிசோதனை, உடல் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இ.சி.ஜி., பி.எம்.ஐ., பொது பரிசோதனைகளை ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் குழுவினர் செய்தனர்.
முடிவில் தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ரெ.குருமூர்த்தி நன்றி கூறினார்.
- 14 நடமாடும் குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
- டெங்கு, மலேரியா உள்ளிட்ட 5 வகையான காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழ்நாட்டில் இன்புளூயன்சா என்னும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.
அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று 200-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடந்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின்படி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம் வழிகாட்டுதலின் பேரில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடந்து வருகின்றன.
தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி, கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இது தவிர ஒவ்வொரு வட்டாரங்களிலும் 14 நடமாடும் குழுக்கள் மூலமும் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. பொது சுகாதார துறை மூலம் ஏராளமான களப்பணியாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் 28 குழுக்கள் பிரிந்து சென்று குழந்தைகள், மாணவ- மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர்.
தஞ்சை மாநகராட்சியில் 210 களப்பணியாளர்களும், கும்பகோணம் மாநகராட்சி பட்டுக்கோட்டை நகராட்சியில் தலா 60 களப்பணியாளர்களும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 20 களப்பணியாளர்களும் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு பரிசோதனை செய்தனர்.
இதில் காய்ச்சல் அறிகுறி தென்படுபவர்களை அருகில் உள்ள முகாம்களுக்கு அழைத்து சென்றனர்.
தஞ்சை அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சியில் குழந்தைகள் மையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் ஏற்பாட்டில் நடந்த முகாமை சுகாதார பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த மையத்தில் குழந்தைகள், பொது மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, உன்னி காய்ச்சல், லெப்டோ ஆகிய 5 வகையான காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களின் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு மாவட்ட பொது சுகாதார ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் முடிவுகள் வந்தவுடன் காய்ச்சல் உள்ளவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
இந்த முகாமில் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் பாரதி, மாவட்ட மலேரியா அலுவலர் தையல்நாயகி, சுகாதார ஆய்வாளர் அருமைத்துறை ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர்.
இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி க. ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெறும். தேவையான அளவு மருந்து , மாத்திரைகள், கிருமி நாசினி கையிருப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் யாரும் மருத்துவர்கள் ஆலோசனை இன்றி மருந்து, மாத்திரைகளை வாங்க கூடாது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் மொபைல் வாகனங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகிறது.
ஒரு வட்டாரத்திற்கு மூன்று மொபைல் வாகனங்கள் என 10 வட்டாரத்திலும் 30 மொபைல் வாகனங்களில் மருத்துவ குழுவினர் வீதி வீதியாக சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு சிறப்பு சிகிச்சைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
இந்த காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
சூடான தண்ணீர் பருக வேண்டும் என மருத்துவத்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாகை- மயிலாடுதுறை
இதேபோல் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடந்து வருகின்றன.
அங்கு பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
- 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர்.
- 120 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கபிஸ்தலம் வட்டார சுகாதார நிலையத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தமிழரசி முகாமினை தொடங்கி வைத்தார். முதல்வரின் நேர்முக உதவியாளர் முகமது பீரான் ஷெரிப் முன்னிலை வகித்தார்.
தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் காயத்ரி தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் ரத்தம் சேகரித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் வழங்கினார்கள் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது.
120 -க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடல் பரிசோதனை செய்து கொண்டனர். பொது மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் தீபக் டாக்டர்கள் ராம்குமார், ஜெகநாதன், பாரதி சுகாதார ஆய்வாளர்கள் செல்லப்பா, நாடிமுத்து ஆகியோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பனைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் செய்திருந்தார்.
- பல்வேறு வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
- 10 குழந்தைகள் மற்றும் சில பெண்களுக்கு மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் ராஜப்பா நகரில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகா மினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
இந்த மருத்துவ முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள் செல்வ வேல், கார்த்திகேயன், ராதிகா மைக்கேல், சிங்காரவேலு, மணிராம் கிருஷ்ணா, உஷா நந்தினி, அமுத வடிவு, ராஜ்மோகன், ரேகா ராஜமோகன், மணிமாறன், விக்ரம் குமார், பாரதி, ராஜசேகர், லியோ ஜோசப், சிஜூ ஜோசப், கௌதம், விஜயபாஸ்கர், சத்யநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மேலும் பல்வேறு வகையான பரிசோத னைகள் செய்யப்பட்டு ஆலோ சனைகள் வழங்கப்பட்டன.
இதில் 10 குழந்தைகள் மற்றும் சில பெண்களுக்கு மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னதாக உலக சுகாதார தினத்தை முன்னிட்டு "அனைவருக்கும் சுகாதாரம்" என்பதை வலியுறுத்தி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் பயனாளிகளுக்கு சுகாதார பெட்டகத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சுகாதார நலன் ஆலோசகர் டாக்டர் சிங்காரவேலு வரவேற்றார்.
இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் லியோ ஜோசப் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி இரத்த வங்கி ஆலோசகர் டாக்டர் ராதிகா மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பொருளாளர் ஷேக்நாசர், யூத் ரெட்கிராஸ் ஆலோசகர் ஜெயக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், ஜூனியர் ரெட்கிராஸ் ஆலோசகர் பிரகதீஷ் , இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.