search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பிக் போட்டி"

    • ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.
    • 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்படுகிறது.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

    கி.மு.776-ம் ஆண்டு முதலாவது ஒலிம்பிக் போட்டி கிரேக்க நாட்டில் உள்ள ஒலிம்பியா நகரில் நடந்தது. பின்னர் கிரேக்க மன்னர் தியோடோசியஸ் இநத ஒலிம்பிக் போட்டிக்கு தடை விதித்தார்.

    நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது. கிரீஸ் தலைநகர் ஏதென்சில் முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி நடந்தது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடை கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    முதல் உலகப்போர் காரணமாக 1916-ம் ஆண்டும், 2-வது உலகப் போர் காரணமாக 1940 மற்றும் 1944-ம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.

    கடைசியாக 2021-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. 2020-ம் ஆண்டு நடைபெற இருந்த போட்டி கொரோனா தொற்று காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப் பட்டது. கொரோனா பாதிப்பால் ரசிகர்கள் யாருமே அனுமதிக்கப்படாமல் இந்த போட்டி நடத்தப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்படுகிறது. இந்த ஒலிம்பிக் திருவிழா நாளை (26-ந் தேதி) கோலாகலமாக தொடங்கு கிறது. ஆகஸ்ட் 11-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கிறது. 3-வது முறை யாக பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதற்கு முன்பு 1900, 1924 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். முதல் முறையில் வீரர்கள், வீராங் கனைகள் சம அளவில் கலந்து கொள்கிறார்கள். 32 விளையாட்டில் 46 பந்தயத்தில் 324 வகை பிரிவில் போட்டி நடைபெறுகிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா சீனா இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா 592 பேரையும், சீனா 388 பேரையும் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது. ஜப்பான், இங்கிலாந்து, தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள். பதக்கங்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    100 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதால் பிரான்ஸ் இந்த முறை அதிகமான பதக்கங்களை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் ஆக மொத்தம் 113 பதக்கத்தை குவித்து முதல் இடத்தை பிடித்தது. சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 89 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் மொத்தம் 58 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஆக்கி, கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் தடகளம் (நீரஜ் சோப்ரா) , பேட்மின்டன் (பி.வி. சிந்து, சாத்விக்-சிராக் ஜோடி) , பளு தூக்குதல் (மீராபாய், சானு), குத்துச்சண்டை (லவ்லினா), ஆக்கி, துப்பாக்கி சுடுதல் ஆகிய விளையாட்டுக்களில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்க மும், மீரா பாய் சானு (பளு தூக்குதல்) ரவி குமார் தகியா (மல்யுத்தம்), பி.வி.சிந்து, லவ்லினா, பஜ்ரங் புனியா மற்றும் இந்திய ஆக்கி அணியினர் வெண்கல பதக்கம் வென்றனர். இந்தப் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் பெற்றது. பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இரட்டை இலக்க பதக்க ஆர்வத்துடன் இருக்கிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோள் "எல்லோருக்கும் வாய்ப்பு" என்பதாகும்.

    • பெண்கள் பிரிவு ஆட்டம் இன்று தொடங்குகிறது.
    • அர்ஜென்டினா-மொராக்கா அணிகள் மோதின.

    பாரீஸ்:

    ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெறுகிறது. ஆனால் கால்பந்து, ரக்பிசெவன்ஸ் போட்டிகள் நேற்று தொடங்கின.

    கால்பந்து போட்டியில்'ஏ' பிரிவில் நடந்த ஆட்டம் ஒனறில் பிரான்ஸ்-அமெரிக்கா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் சீனியர் அணியை தோற் கடித்தது.

    'டி' பிரிவில் ஜப்பான் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. இஸ்ரேல்-மாலி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

    'பி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா-மொராக்கா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டி னா 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டம் ஈராக் 2-1 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. பெண்கள் பிரிவு ஆட்டம் இன்று தொடங்குகிறது.

    ரக்பி செவன்ஸ் போட்டி யில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிஜி, அயர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து அணிகள் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றன. வில் வித்தை, ஹேண்ட்பால் போட்டிகள் இன்று தொடங்கியது.

    வில்வித்தை போட்டியின் ரேங்கிங் சுற்றில் இந்தியா சார்பில் தீபக், தருண்தீப்ராய், பிரவீன் ஜாதவ் மற்றும் வீராங்கனை பஜன்கவுர், தீபிகா குமாரி, அங்கீதா பகத் ஆகியோர் பங்கேற்கிறார்கள். 

    • பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் பனியன்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
    • விளையாட்டு போட்டிகளுக்கு திருப்பூரில் இருந்து பனியன்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை நகரான திருப்பூரில் இருந்து வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பனியன்கள் உள்ளிட்ட ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டரின் பேரில் பனியன்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் , உலக கால்பந்து போட்டி உள்பட சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு திருப்பூரில் இருந்து பனியன்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந்தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் அப்போட்டியில் பங்கேற்கும் பார்வையாளர்கள் அணிவதற்காக திருப்பூரில் உள்ள பேக் பே இந்தியா நிறுவனம் 10 லட்சம் டீ-சர்ட் பனியன்களை தயாரித்து அனுப்பி வைத்துள்ளது.

    இது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான தீபா ஜெயன் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் கூறியதாவது:-

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக எங்களது நிறுவனம் மூலம் பெற்ற ஆர்டர்களில் இதுவரை 70 சதவீத ஆர்டர்களை முடித்து அனுப்பி வைத்துவிட்டோம். மீதமுள்ள 30 சதவீத ஆர்டர்களை முடிப்பதற்கு 6 சிறு, குறு நிறுவனங்கள் மூலம் பனியன் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே 2023ம் ஆண்டு பிரான்சில் நடந்த ரக்பி உலக கோப்பைக்கான போட்டிக்கும் பனியன்கள் தயாரித்து அனுப்பி வைத்திருந்தோம். ஐ.ஓ.சி.யின் அதிகாரபூர்வ உரிம திட்டத்தின் மூலம் எங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு தயாரித்து அனுப்புகிறோம். ஜவுளி உற்பத்தியில் பல நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுவதில்லை. பல ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய நம்பகத்தன்மையின் மூலம் நாங்கள் சுமூகமாக இயங்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஒலிம்பிக் போட்டி பாரீசில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
    • 117 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலை நகர் பாரீசில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டியில் 117 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தொடக்க விழாவில் 45 ஆயிரம் பேர் வரை பாதுகாப்புக்கு அமர்த்தப்படுவார்கள்.

    மேலும் 18 ஆயிரம் ராணுவ வீரர்களும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள்.

    இதற்கிடையே ஒலிம்பிக் போட்டி பாதுகாப்பு பணிக்காக இந்திய மோப்ப நாய்கள் பாரீஸ் சென்று உள்ளன.

    10 சிறப்பு பயிற்சி பெற்ற சிறப்பு கமெண்டர்கள் சி.ஆர்.பி.எப்.பின் மோப்ப நாய்களுடன் அங்கு சென் றுள்ளனர். இந்த மோப்ப நாய்கள் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பல்வேறு மைதானத்தில் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

    இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த மோப்ப நாய்கள் பெல்ஜியம் மாலினோஸ் இனத்தை சேர்ந்தவையாகும். சந்தேகத்துக்குரிய மனிதனின் இருப்பிடம், குண்டுகளை துல்லியமாக கண்டறிதல் போன்றவற்றில் இந்த வகை நாய்கள் மிகவும் சிறப்பாக செயல்படும்.

    • பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து மேலும் ஒரு தடகள வீரர் தகுதி பெற்றுள்ளார்.
    • வரும் ஜூலை 26ம் தேதி பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் மிகப்பெரிய கனவாக கருதப்படுகிறது. சமீபகாலமாக இந்தியாவில் இருந்து ஏராளமானோர் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இந்த சூழலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரினுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. வரும் ஜூலை 26ம் தேதி பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இந்த போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது.

    சிறு வயது முதலே நீளம் தாண்டுதலில் சிறந்து விளங்கும் ஜெஸ்வின் 2022ம் ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றார். ஆனால், இறுதிப்போட்டிக்கு அவரால் முன்னேற முடியவில்லை. ஆனால், 2023ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலுக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அந்த இறுதிப்போட்டியில் 12ம் இடமான கடைசி இடத்தையே அவரால் பிடிக்க முடிந்தது. இருப்பினும் அவரது விடாமுயற்சி மற்றும் பயிற்சியால் தரவரிசை அடிப்படையில் தற்போது அவருக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து மேலும் ஒரு தடகள வீரர் தகுதி பெற்றுள்ளார். நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். தமிழ்நாட்டிலிருந்து ஏற்கனவே 5 வீரர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தடகள வீரர் தகுதி பெற்றுள்ளார்.

    ஒலிம்பிக் வரலாற்றில் தமிழ்நாட்டில் இருந்து அதிக தடகள வீரர்கள் தேர்வாகி இருப்பது இது முதல்முறையாகும்

    • கிரிக்கெட்டுடன், பேஸ்பால், லேக்க்ராஸ், ஸ்குவாஸ், பிளாக் ஃபுட்பால் ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்ப்பு.
    • சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் வரவேற்பு.

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இணைத்து ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. கிரிக்கெட்டுடன், பேஸ்பால், லேக்க்ராஸ், ஸ்குவாஸ், பிளாக் ஃபுட்பால் ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டது.

    இதற்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு நிரந்தர இடத்தைப் பிடிக்கும் என்று ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    வேகமாக வளர்ந்து வரும் நமது கிரிக்கெட்டை உலகின் மிகப்பெரிய நிலைக்கு எடுத்துச் செல்ல இது வாய்ப்பளிக்கிறது. நான் விளையாட்டைப் பற்றி சிந்திக்க விரும்புகிறேன். இனி வரும் காலங்களில் கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக்கில் நிரந்தர இடத்தைப் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்த சிறுமியின் பெயர் அர்ஸியா கோஸ்வாமி.
    • பளுதூக்கும் பயிற்சி மேற்கொண்டு வரும் அர்ஸியா 60 கிலோ எடையை தூக்கி ஒரு சில விநாடிகள் வைத்திருந்து விட்டு பின் கீழே வைக்கிறார்.

    சிறுவர்-சிறுமிகளின் திறமைகளை உலகிற்கு வெளிக்காட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பரவி வரும் ஒரு வீடியோவில் 8 வயது சிறுமி ஒருவர் 60 கிலோ எடையை தூக்கி அசத்தும் வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

    அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்த அந்த சிறுமியின் பெயர் அர்ஸியா கோஸ்வாமி. ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் பளுதூக்கும் பயிற்சி மேற்கொண்டு வரும் அர்ஸியா 60 கிலோ எடையை தூக்கி ஒரு சில விநாடிகள் வைத்திருந்து விட்டு பின் கீழே வைக்கிறார்.

    பின்னர் அவர் கம்பீரமாக நடந்து வரும் வீடியோவை பார்த்த சமூக வலைதள பயனர்கள் அர்ஸியாவை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த சிறுமியின் செயல் இளைஞர்கள் பலருக்கும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுக்கும் என்றும், இவரால் ஒரு நாள் இந்தியா பெருமையடையும் என்றும் சில பயனர்கள் பதிவிட்டுள்ளனர்.

    இதுவரை சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 20 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

    ×